மொழி – இப்படி மனச வருடுற மாதிரி இதமா ஒரு தமிழ்ப் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு !!!
வழக்கமா, ரொம்ப hype செய்யப்படுற படங்கள் சொதப்பலா போயிடும். இல்ல, படம் நல்லா இருந்தாலும் மிகை எதிர்ப்பார்ப்பே படத்தைப் பத்தி குறைவா எடை போட வைச்சிடும். அக்கு வேறு ஆணி வேறா மொழி படத்தோட கதை, விமர்சனங்களைப் படிச்ச பின்னாலும், படம் பார்க்கும்போது எந்த விதத்திலும் bore அடிக்கல. ஓடையில் மிதந்து போற பரிசல் மாதிரி அழகா நகருது படம்.
மேலும் வாசிக்க, மொழி – திரை விமர்சனம் பாருங்கள்.
சின்னப் பிள்ளைல விரும்பினாலும் விரும்பாட்டியும் விதி, சம்சாரம் அது மின்சாரம் பட கதைவசனக் casetteகள் வீட்டிலோ பக்கத்து வீட்டிலோ ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும்..
நிறைய படங்கள் நல்லா இருந்தாலும் சில படங்கள் தான் அலுக்காம திரும்பத் திரும்ப அலுக்காம பார்க்க முடியுது..வளந்த வயசுல ரஜினி படங்கள் அப்படி அலுக்காமல் பார்த்தது..சன் டிவி புண்ணியத்தில் பாட்ஷா படத்த நிறைய தடவை பார்த்திருக்கேன். கில்லி, பிதாமகன், காக்க காக்க இதெல்லாம் theatreலயே மூணு முறைக்கு மேல பார்த்தது.
நான் திரும்பத் திரும்பப் பார்க்கும் திரைப்படங்கள் குறித்து அறிய பொம்மரில்லு, அத்தடு, சச்சின், தூம் -2, children of heaven பாருங்கள்.