திரை விமர்சனம்

ஆகஸ்ட் 28, 2007

இத்தாலிய இம்சைகள்!

உலக சினிமா ரசிகர்களிடையே இத்தாலிய திரைப்படங்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது. அது ஏனென்று எனக்கு சற்றும் விளங்கவில்லை! சரி 1950-60 களில் அவர்கள் பல புகழ்பெற்ற படங்களை எடுத்திருக்கலாம். அதற்கென்ன இப்போ? அடுத்த 50 ஆண்டுகளில் அவர்கள் நல்ல படங்கள் எடுத்ததாகக் தெரியவில்லை.

நான் பார்த்த இத்தாலியப் படங்களில் The Bicycle Thief மட்டும்தான் நல்ல படமென்று நினைக்கிறேன். சமீபத்தில் 8 1/2 பார்த்தேன். சுத்த பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது! Fellini தான் பெரிய இயக்குனராக்கும் என்கிற இருமாப்பில் கண்டதையும் எடுத்து மக்களை பார்க்கவைத்திருக்கிறார்! Cinema Paradiso, Life is Beautiful எல்லாம் கூட நல்ல படங்களில்லை என்று கருதுகிறேன். சும்மா மூன்று மணி நேரத்துக்கு ரசிகர்களின் கழுத்தறுத்து நல்ல பெயர் வாங்கிவிட்டார்கள்!
(மேலும்…)

ஆகஸ்ட் 12, 2007

இனி நான் நாத்திகனில்லை…

கிரைஸ்டாஃப் கெய்ஸ்லாவ்ஸ்கி அவர்களை கடவுள் என்று ஒத்துக்கொள்கிறேன்! இப்போதுதான் ‘வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை‘ என்ற படத்தை பார்த்து முடித்தேன். இப்படியெல்லாம் படம் எடுக்கமுடிந்தவர் கடவுளாகத்தான் இருக்கவேண்டும்!

இது நான் பார்க்கும் அவருடைய 15ஆவது படமாகும். அத்தனையும் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள். மிச்சம் இருப்பவற்றையும் பார்க்காமல் விடுவதாகயில்லை. நீங்களும் பாருங்கள்! இது வரை நான் பார்த்திருப்பவை,
(மேலும்…)

ஆகஸ்ட் 8, 2007

அடுத்தது என்ன? திரை விமர்சனம்

இதுவொரு கும்மி யோசனைதான்! ஆங்கிலத்திலுள்ள அழுகியதக்காளி மாதிரியான தளத்தை தமிழில் கூட்டுப்பதிவா ஆரம்பிக்கலாம். இ-தமிழர்கள் முடிந்தவரை தமிழில் எழுதுவதையோ படிப்பதையோ தவிர்க்கிறார்கள். பண்ணிரண்டாம் வகுப்புக்குமேல் தமிழே பயன்படுத்தாத ஒரு ‘படித்த’ சமூகம் உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலான இ-தமிழர்கள் தமிழ் திரைப்பட விமர்சனங்களை ஆங்கிலத்தில் படிக்கத்தான் செய்கிறார்கள். இங்கதான் நாம் வருகிறோம்!
(மேலும்…)

ஆகஸ்ட் 6, 2007

உச்சம்!

Bourne Ultimatum பல மாதங்களுக்குப் பிறகு வந்துள்ள தரமான ஹாலிவுட் திரைப்படம். தாராளமாகப் பார்க்கலாம். நல்ல திரையரங்கில் பார்க்கவும்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.