The Bourne Ultimatum, The Bourne Supremacy, The Bourne Identity – நண்பரின் மூலம் கிடைத்த திருட்டு டிவிடியைப் பார்த்து இந்தப் படத்துக்கு செம ரசிகனாகி The Bourne Supremacy, The Bourne Identityனு பாகம் 3, 2, 1னு தலைகீழா இந்த படத் தொடரைப் பார்த்தாலும் கதை தெளிவா புரிஞ்சது.
Riding alone for thousands of miles –
ஒவ்வொருவரும் தங்கள் மனதில் உள்ள அன்பை மறைக்காமல் காட்டப் பழக வேண்டும் என்பது தான் படத்தின் அடிப்படைக் கரு.
Ratatouille -
நினைத்தைச் செய்வதற்கு அடிப்படை, பிறப்பு, சிறப்புத் தகுதிகள் என்று எதுவும் தேவை இல்லை என்பது தான் படத்தின் அடிப்படைக் கரு. ஒரு எலிக்கு சிறந்த சமையல்காரர் ஆகும் ஆசை வருகிறது. அதை எப்படிச் சாதிக்கிறது என்பது தான் கதை. 2 மணி நேரம் கவலை மறந்து தாராளமாகப் பார்க்கலாம்.
The Prince and Me – இது 4 மாதம் முன்னர் பார்த்த படம். குறைந்த தயாரிப்புச் செலவு, எளிமையான கதை, இயல்பான நகைச்சுவை என்று நிறைவான படம்.
இன்னும் விரிவான விமர்சனத்துக்கு The Bourne, Riding alone for thousands of miles, Ratatouille, The Prince and Me பாருங்கள்.