திரை விமர்சனம்

நவம்பர் 28, 2007

தீபா மேத்தாவின் 1947 Earth

நேற்று (29.04.2005) தீபா மேத்தாவின் 1947 Earth – படம் பார்த்தேன். ஏனோ பம்பாய் படம் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. பாவம், நம் மணிரத்தினம். இரண்டேகால் மணி நேரம் ஓட்ட வேண்டிய கட்டாயத்தால் ‘உயிரே..உயிரே’-யில் ஆரம்பித்து, ‘குட்டி குட்டி ராக்கம்மா’-க்குப் போய் அதன் பிறகு ‘பம்பாய்’ என்ற படத்திற்குள் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. build up கொடுப்பதற்குள் எடுப்பவர் – பார்ப்பவர் இருவரின் ‘தாவு’ தீர்ந்துவிடுகிறது.


EARTH: படம் முழுவதும் பச்சை நிறமும் (பாகிஸ்தான்?) காவி நிறமும்(இந்தியா?) மேலோங்கித் தெரிகின்றன. சூரிய ஒளியின் விளையாட்டு படம் முழுவதும் ஆக்கிரமிக்கிறது. இது படப்பிடிப்பைப் பற்றிய சிறப்பு.

மணிரத்தினம் படத்தில் வசனங்கள் மிகக் குறைவாக இருக்கிறது என்று சொல்பவர்கள் இந்த படத்தைப்பார்த்தால் என்ன சொல்வார்களோ. அதோடு கதை மாந்தர்கள் வசனம் எங்கே பேசுகிறார்கள், இயல்பாய் வாழ்ந்து இருக்கிறார்கள். அவ்வளவே. மிகையான பேச்சோ, நடிப்போ கிஞ்சித்தும் இல்லை-அந்தக் குழந்தையையும் சேர்த்துதான். அந்தக் குழந்தை- நம் தமிழ்ப் படத்தில் வரும் வழக்கமான குழந்தைகள் மாதிரி எந்த தத்துவமும் பேசுவதில்லை !
(மேலும்…)

ஓம் ஷாந்தி ஓம்!

கோப்பு வகை: இந்தித் திரைப்படம் — சுரேஷ் @ 5:51 மு.பகல்
Tags: ,

மறுஜென்மக் கதைக்கு மசாலா அரைத்துச் சேர்த்திருக்கிறார்கள் – மணக்குது!

உபரி நடிகனாகக் காலம் ஓட்டும் ஓம், Dreamy Girl ஷாந்தியைப் பார்த்து ஒருதலைக் காதலிக்க, ஒரு தறுதலை அவளை ஏற்கனவே திருமணம் முடித்திருப்பதால் மறுதலிக்கப் படுகிறான், மேற்படி தறுதலை ஷாந்தியை செட்டிலேயே வைத்து தீக்கிரையாக்க, வாழும்போது சேரமுடியாத சோகத்தைச் சேர்ந்து சாவதன் மூலம் போக்கிக்கொள்கிறான் ஓம். மறுஜென்மத்தில் நடிப்புக் குடும்பப் பாஸ்போர்ட்டோடு பிறந்து சூப்பர்ஸ்டார் ஆகி, பூர்வஜன்ம ஞாபகம் வந்து பழிதீர்க்கிறான்.

கதை இவ்வளவுதான். ஆனால் இதைச் சொல்லியிருக்கும் விதம், நகைச்சுவை, பிரம்மாண்டம்தான் படத்தைக் காப்பாற்றுகிறது.
(மேலும்…)

நவம்பர் 27, 2007

சக் தே இந்தியா, அம்முவாகிய நான், நாளைய பொழுது உன்னோடு

சக் தே இந்தியா – நல்ல படம். ஒரு முறை பார்க்கலாம். lagaan அளவுக்கு dramatic elements, விறுவிறுப்பு எதிர்ப்பார்க்க முடியாது. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு, “சாருக் கானுக்கு ஏன் ஜோடி இல்லை”ன்னு என் அக்கா கேட்டாங்க..தமிழ்ப் படங்கள் நம்ம மக்களை ரொம்ப கெடுத்து வைச்சிருக்கு :(

அம்முவாகிய நான் – ஹ்ம்ம்..இது தான் தமிழ்த் திரையுலகில் நல்ல படம் என்றால், பிறகு மோசமான படங்களைப் பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது. இந்தப் படத்தை ஒரு தொலைக்காட்சித் தொடராக எடுத்திருந்தால் ஒப்பேற்றி இருக்கலாம். அவ்வளவு logic ஓட்டைகள், செயற்கைத் தனம், சினிமாத்தனம்.

நாளைய பொழுது உன்னோடு – என்ன காரணத்துக்காக இயக்குநர் பாலா நடிகை கார்த்திகாவை அழைக்கக் கூப்பிட்டார் என்ற ஆர்வத்தால் இந்தப் படத்தை ஓட்டிப் பார்த்தேன். மிகச் சுமாரான படம் தான். ஆனால், ஊதிப் பெரிதாக்கப்படும் பிற படங்களைக் காட்டிலும் இது போன்ற படங்களைப் பார்க்க எரிச்சல் குறைவு தான். இயக்குநர் தன்னால் இயன்ற அளவு முயன்றிருக்கிறாரே என்று விட்டு விடத் தோன்றுகிறது. மற்ற வாரிசு நடிகர்களைக் காட்டிலும் பிரித்வி அடக்கி வாசிக்கிறார். ஆனால், இவர் உள்ளிட்ட எல்லா வாரிசு நடிகர்களையும் பார்க்கையில் அவர்களின் அப்பாக்கள் நினைவில் வந்து படம் பார்க்க விடாமல் செய்கிறார்கள். மொத்தப் படத்தையும் 10 நிமிடத்தில் ஓட்டிப் பார்த்து விட முடிந்தது. ஊகிக்க கூடிய, வழக்கமான காட்சிகள். கதையின் முடிச்சு கடைசி 5 நிமிடத்தில் இருக்கிறது. அதைப் பார்க்கலாம்.

பி.கு – பல படங்களை கலந்து கட்டி ஒரு சில வரிகளில் எழுதுவதற்குப் பொறுக்கவும். பல வரிகளில் எழுதும் அளவுக்கு அவ்வளவு படங்கள் உந்துதல் ஏற்படுத்துவதில்லை. இன்னொன்று, பக்கம் பக்கமாக விமர்சனத்தைக் காட்டிலும் பார்க்கலாமா வேண்டாமாங்கிறதை நச்சுன்னு சொல்லும் சில வரி விமர்சனங்கள் பரவாயில்லைன்னு நினைக்கிறேன்.

நவம்பர் 26, 2007

Polladhavan

கோப்பு வகை: English, தமிழ்த் திரைப்படம் — பாலாஜி @ 8:57 பிற்பகல்
Tags: ,

I enjoyed watching polladhavan today — the director has done a great job with the story and the screenplay — the dialogue also deserves special mention which is teeming with wit, at the same time maintaining the nativity and realism.

The story which is essentially the bond that an youngster forms with his bike is refreshing.

The screenplay is engrossing (minus the songs) and the director employs a nice technique of shifting the narrative when the two protagonists criss-cross with each other.

However, the thing that impressed me the most about the movie is the fact that it is refreshingly non-judgmental — the director clearly does not thrust his opinions on us, instead, letting us decide if we like the characters. The reason the director is able to achieve this is mainly because of the script — the script lets most of the people behave in a “reasonable” fashion.
(மேலும்…)

பொல்லாதவன், ஆமாம்!

அப்பாடா! கடைசியா ஒரு நல்ல தமிழ் படம் பார்த்தாச்சு. ‘பொல்லாதவன்‘ – கலக்கிட்டீங்க வெற்றிமாறன்! தமிழ் சினிமா முன்னேறிட்டு வருது என்று பலரும் சொல்லும்போது, நிஜமா? என்று தோன்றும்.

கடந்த இரண்டு வருடங்களில் நான் பார்த்த தமிழ்ப்படம் 6-7 தான் (?!) இருக்கும். ‘சிவாஜி‘, ‘வேட்டையாடு‘ – கேவலம். ‘மொழி‘, ‘வெயில்’, ‘பச்சைக்கிளி’ – சுமார். ‘இம்சை‘, ‘பட்டியல்‘ – நன்று! மற்றபடி ஊடகங்களிலும், பதிவுகளிலும் பேசப்பட்ட படங்கள் பலவற்றை நான் பார்க்கவில்லை.
(மேலும்…)

கற்றது தமிழ்

தமிழ் M.A (எ) கற்றது தமிழ் படம் குறித்த கதை கேள்விப்பட்ட போதும், படத்தைப் பார்க்கும் போது என் பள்ளி வாழ்க்கை, தமிழுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு, தமிழ் படித்திருந்தால் நான் எப்படி இருந்திருப்பேன் போன்ற நினைவுகள் வந்து போயின. ஏனடா பார்த்தோம் என்று எண்ணற்ற படங்கள் நோக வைக்கையில் நம் வாழ்க்கை குறித்த நினைவுகளைக் கிளறி விட இயல்வது ஒரு கலைபடைப்பின் வெற்றி தான். சிவாஜி திரைப்படத்துக்கு இணையாக எண்ணற்ற விவாதங்களையும் இப்படம் கிளப்பி விட்டிருப்பதும் பாராட்டத்தக்கதே. இப்படி ஒரு படம் வந்திருக்காவிட்டால் இன்றைய சூழலில் தமிழ்ப் படிப்பு, தமிழ்ப் பட்டதாரிகள் நிலை, படம் தொட்டுக் காட்டும் சமூக ஏற்றத் தாழ்வுகள் குறித்து இன்றைய சூழலில் ஒரு விழிப்புணர்வு உரையாடல் இவ்வளவு பெரிதாய் நடந்திருக்க வாய்ப்பில்லை.

(மேலும்…)

நவம்பர் 24, 2007

ஆஃப்டர் த சன் செட்

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம் — mayooresan @ 4:56 பிற்பகல்
Tags: , , ,

நேரம் கிடைக்கும் போது பார்த்து மகிழக் கூடிய இன்னொரு திரைப்படம்தான் இந்த After the sunset. ஒரு வைரத்தை ஒரு கள்வன் களவாடுவதுடன் திரைப்படம் தொடங்குகின்றது. வைரத்தைக் களவாடும்விதம் அழகானது. பரபரப்பாகச் செல்லும்.

யார் அந்தக் கள்வன் என்று பார்த்தால் பிரபல நடிகர் பியர்ஸ் புரொஸ்னன். எப்.பி.ஐ ஏஜென்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அந்த வைரத்தைக் களவாடிவிடுகின்றார்.
(மேலும்…)

கன்ட்ரோல் – இல்லை!

மசாலான்னா இது மசாலா! கன்ட்ரோல் (Kontroll) என்ற ஹங்கேரியப் படம் பார்த்தேன். படம் முழுக்க புடபெஸ்ட் மெட்ரோவில் நடக்கிறது. அதாவது முழுக்கத் தரைக்கடியில். படம் துவங்கும்போது புடபெஸ்ட் இரயில்வே நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர், இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல் இங்கு ஒன்றும் நடப்பதில்லை என்று சொல்வதே ஹைக்கூ!

பயணச்சீட்டு சோதனையாளரான நமது நாயகன் Bulcsu, அவனது கிராதக சக ஊழியர்கள், அமீர்கான்-அர்ஜுன் மாதிரியான ரயிலுடன் ஓடும் சாகஸம், அழகான கரடியாக வரும் நாயகி!, நகைச்சுவை, ரயிலுக்கடியில் சிதறும் ‘குதிப்போர்கள்’, ஒரு முகமூடி அணிந்த மர்ம மனிதன் (இல்லை ‘அது’) என்ற இந்த காக்டெயில் கதை, ஹங்கேரியில் பெரும் வெற்றிபெற்றதில் வியப்பில்லை.
(மேலும்…)

நவம்பர் 20, 2007

ஹரி பொட்டர் 5

ஹரி பொட்டர் புத்தகம்தான் வாசிச்சுமுடிந்த பாடாய் இல்லை (70 வீதம் வாசிச்சாகிவிட்டது) சரி படத்தையாவது பார்த்து தொலைப்போம் என்று நேற்று டிவிடிக் கடைக்குப் போக முடிவெடுத்தேன்.

இங்க இருக்கிற தமிழ் பொடியள் ஹரி பெயரைக் கேட்டாலே ஓடிவிடுவாங்கள், இருக்கிற சில சிங்களப் பொடியளும் பெட்டயளும்தான் ஹரி புத்தகம் படம் என்று பைத்தியமா இருக்குங்கள். ஏற்கனவே படம் பார்த்த சில நண்பர்களிடம் கருத்துக் கேட்டபோது… It’s ok.. It’s ok macho! என்றே அவர்களது பதில் வந்தது. என்னானாலும் பார்ப்பது என்று நான் ஏற்கனவே முடிவெடுத்ததால் அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

இருந்தாலும் மனம் கேட்காமல் ஒரு ஹரி இரசிகையிடம் படம் எப்படி என்று கேட்டபோது.

“Oh… Mayu… Don’t watch it, it’s a total disaster. This is not what we have expected in the movie”

என்று சொன்னார்.

என்னடா இது, இப்படிக் கரைச்சலாகிட்டுதே என்று நான் அரை மனதுடன் டிவிடிக் கடைக்குச் சென்று டிவிடியையும் பெற்றுக்கொண்டேன்.

(மேலும்…)

ட்ரான்ஸ்போர்மர்ஸ்

பல்கலைக்கழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நேற்று முடிவடைந்து விட்டதால் ஒரு திரைப்படம் பார்ப்போம் என்று முடிவு செய்தேன். என்ன பார்க்கலாம் என்று நினைத்தபோது, பரீட்சை காரணமாக தியட்டரில் பார்க்க முடியாமல் போன ரஷ் அவர் 3, அல்லது ட்ரான்ஸ்போமர்ஸ் பார்ப்பது என்று முடிவு செய்தேன். ஏற்கனவே எனது உறவுக்காரப் பொடியன் ஒருவன் ட்ரான்ஸ்போர்மர்ஸ் திரைப்படத்தை இணையத்தில் இறக்கி வைத்திருந்தான். எனவே அதைப் பார்ப்பது என்று முடிவுசெய்தேன்.

ஏற்கனவே இதைப்பார்த்த என்னுடைய அனேக நண்பர்களும், அந்தமாதிரிப்படம் மச்சான் கட்டாயம் பார் என்று பரிந்துரைத்திருந்தனர். சிலர் சும்மா மாறி மாறி டப்பு டப்பு என்று சுடுவார்கள் என்று கூறியிருந்தனர். ஆயினும் பெரும்பாலானவர்கள் நல்ல திரைப்படம் என்று சொல்லியதால் துணிந்து பார்க்க முடிவெடுத்தேன். :lol:
(மேலும்…)

நவம்பர் 18, 2007

சோனார் கெல்லா – தங்கக் கோட்டை

பல வருடங்களுக்குப் பிறகு சத்யஜித் ரேயின் படம் பார்த்தேன். சோனார் கெல்லா (வங்காள மொழி) என்று ஒரு சிறுவன் தனது பூர்வ ஜென்ம நிகழ்ச்சிகளை நினைவுகொள்வதாகச் செல்லும் ஒரு துப்பறியும் கதை. சிறந்த படமெல்லாமில்லை. ஆனால் பல நல்ல விசயங்கள் தெரியவந்தன. தமிழில் இது போன்று (சமீபத்தில்) ஏன் செய்யவில்லை என்று கேட்கத்தூண்டுபவை.
(மேலும்…)

நவம்பர் 16, 2007

பொல்லாதவன், வேல், அழகிய தமிழ் மகன்

பொல்லாதவன் – தீபாவளிப் படங்களில் ஒரு முறையாவது பார்க்கலாம் என்று தேறியது இது தான். பாடல்களைத் தவிர்த்துப் பார்த்தால் இயல்பான கதைக்களம்.

வேல் – வலைப்பதிவு வார்ப்புரு போல் இயக்குநர் ஹரி ஒரு வார்ப்புரு வைத்திருக்கிறார். அவரது முந்தையப் படங்களைப் பார்த்தவர்களுக்கு இதில் ஒன்றும் இல்லை. இருந்தாலும் bore அடிக்காமல் போவதே பெரிய விசயம் தான்.

அழகிய தமிழ் மகன் – மரணக்கடி இல்லை தான். ஆனால், கடி தான். இரட்டை வேடப் படமாக இருந்தால், ஒருவருக்கு ஒருவர் உதவுவது போல் இருக்க வேண்டும். இல்லை, இருவரும் செமையாக முட்டிக் கொள்வது போல் இருக்க வேண்டும். இதில், கெட்ட விஜய்க்கு 2 காதல் பாட்டு போக, இரண்டாம் பாதி படம் முழுக்க அவர் அலம்பலே அதிகம் இருப்பதும் கடைசியில் பள்ளிக்கூட நாடகம் போல் அவர் திருந்துவதாக காட்சி அமைத்திருப்பதும்..ஹ்ம்ம்..

நவம்பர் 13, 2007

சூரியன் இன்னும் மிளிர்கிறது!

என்னை மிகவும் பாதித்த Sophie Scholl – Die letzten Tage என்னும் ஜெர்மானிய படத்தைப் பற்றி விலாவரியாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். பல வாரங்கள் உருண்டோடிவிட்டன. நாசிக்களை எதிர்த்து நின்ற ஒரு 21 வயது மாணவி சோபி ஸ்கோலின் உண்மைக்கதை. அவளும், அவளது சகோதரனின் நண்பர்களும் செய்த தியாகங்கள், என்னைப் போல் தினந்தோறும் திண்றுவிட்டுத் தூங்கிக்கொண்டிரும் உருப்படாத கேஸ்களுக்கு நல்ல பாடம்.
(மேலும்…)

நாய் பிழைப்பு… அருமை!

கோப்பு வகை: உலகத் திரைப்படம் — பாலாஜி @ 5:02 பிற்பகல்
Tags: ,

Mitt liv som hund (My Life as a Dog) என்றொரு ஸ்வீடன் நாட்டு திரைப்படம் பார்த்தேன். அருமை! சொல்லவியலா குடும்பத் துயரத்தை ஒரு சிறுவனின் பார்வையில் செதுக்கியிருக்கிறார்கள். சிரித்து, சிந்தித்துக்கொண்டே பார்க்கலாம்.

இங்க்மார் (சிறுவன்) தன் வாழ்க்கையை துணுக்குச்செய்திகளோடு ஒப்பிட்டுக்கொள்வது கவிதை. “லைக்கா என்னும் நாய் தன்னை விண்வெளிக்கு அனுப்புமாறு கேட்டதா என்ன? மனித முன்னேற்றத்துக்காக (?!) லைக்காவை பட்டினி போட்டு சாகடித்தது உலகம்!” இக்கதையை கொடுத்த நாவல், அதன் ஆசிரியரின் சொந்தக்கதை என்பது சோகம்.
(மேலும்…)

நவம்பர் 12, 2007

மச்சக்காரன், மலைக்கோட்டை, மருதமலை, வீராப்பு, சபரி, நம்நாடு, சிவி

என்ன தான் உலகத் திரைப்படங்கள் பார்த்தாலும், உள்ளூர் நிலவரம் தெரிந்து கொள்ளும் ஆவல் அல்லது விதி நேரம் போகா கொடுமை எல்லாம் சேர்ந்து, மட்டமான படம் என்று தெரிந்தே சில படங்களைப் பார்த்துத் தொலைப்பதுண்டு. அந்த வரிசையில், சில படங்கள் குறித்த விமர்சனங்கள். 4, 5 படங்களுக்குச் சேர்த்து விமர்சனங்கள் எழுதுவது இப்ப ஒரு புதுப் போக்கு என்றும் எங்கோ படித்த நினைவு.
(மேலும்…)

அதிதி, ஆர்யா (2004)

அதிதி – 70கள், 80களில் வந்த பழி வாங்கல் கதைகளைத் தமிழ்த் திரையுலகம் கை கழுவி விட்டாலும் தெலுங்குக் காரர்கள் விட மாட்டேன் என்கிறார்கள்.

அனாதை மகேஷ்பாபுவுக்கு ஆதரவு கொடுத்தவர்களை வில்லன் கொல்ல கொலைப்பழி மகேஷ்பாபு மீது விழுகிறது. 13 ஆண்டு சிறைவாசம் முடிந்து வந்து பழி வாங்குகிறார். ஆதரவு கொடுத்தவர்களின் மகளைக் காதலித்து வில்லனிடம் இருந்தும் காப்பாற்றுகிறார் என்பதையும் சொல்ல வேண்டுமா ? :(

பாடல்கள், சண்டைகள், வில்லன் காட்சிகள் என்று எல்லாவற்றையும் ஓட்டி விட்டு திருட்டு vcdயில் பார்க்கலாம் என்றால் 0.25 படம் கூட மிஞ்சவில்லையே :(

அத்தடு பார்த்தது முதல் குடும்பத்தையே மகேஷ் பாபு ரசிகர்களாக மாற்றி வைத்திருக்கிறேன். ஆனால், அதற்குப் பிறகு வந்த போக்கிரி, சைனிக்குடு, அதிதி என்று எல்லாமே ஏமாற்றம் தான். நல்ல கதையம்சம் உள்ள கதைகளாகப் பார்த்து மகேஷ்பாபு அடுத்த படத்தில் நடிக்க உள்ளூர் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.

ஆர்யா (2004) – இந்தப் படத்தை என்னைப் பார்க்கச் சொல்லி ஒரு ஆண்டாய் ஒருவரிடம் இருந்து அன்பு வேண்டுகோள் இருந்து வந்தது..தனுஷ் வேறு இந்தப் படத்தின் மறுஉருவாக்கத்தில் நடிக்கப் போவதாய்ப் படித்து, ” சரி, என்ன தான் இருக்கிறது” என்று பார்த்தால்…uff…80கள், 90களில் பார்த்துச் சலித்த கல்லூரிக் காதல் + தியாகக் கதை. பாடல், சண்டை, இரண்டாம் நாயகன் வரும் காட்சிகளை ஓட்டி திருட்டு vcdயில் 0.3 முறை பார்க்கலாம் .

நவம்பர் 11, 2007

சத்தம் போடாதே

மிச்ச இணைய விமர்சனக்காரர்கள் ரொம்பவே இந்தப் படத்தைக் கை கழுவி விட்டிருந்ததால் படம் வெளியான உடனே பார்க்காமல் விட்டிருந்தேன். ஆனால், அந்த அளவு மோசமில்லை.

கேளடி கண்மணி அளவுக்கு வசந்த்தின் எந்தப் படமும் இல்லாதது ஏமாற்றம் தான். திகில் படமாக எடுக்க நினைத்திருக்கிறார். எந்தப் படபடப்பும் இல்லாமல் படத்தைப் பார்க்க முடிந்தது :) பிருத்விராஜ் மலையாள வாடை இல்லாமல் தமிழ் பேசப் பயிற்சி பெறுவது நல்லது. பிருத்விராஜ்-பத்ம பிரியாவின் திருமணத்துக்கு முந்தைய காட்சிகளை மட்டும் ரசிக்க முடிந்தது.

திருட்டு vcdயில் (பேசுகிறேன் பேசுகிறேன் தவிர்த்த) 4 பாடல்களை ஓட்டி விட்டு timepassக்கு ஒரு முறை படத்தைப் பார்க்கலாம்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.