தாரே சமீன் பர் – தமிழ் வலைப்பதிவுகளில் இந்தப் படம் குறித்து வந்த build-up தாங்க முடியாமல் நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன்.
எழுத்துக்களைப் படிக்க, எழுத, புரிந்து கொள்ள இயலா குறைபாட்டுடன் இருக்கிறான் இசான் (Darsheel safari) . ஆனால், அவன் குறைபாட்டைப் புரிந்து கொள்ளாமல், அவன் விளையாட்டுத் தனம் செய்வதாக நினைத்து பெற்றோர், ஆசிரியர் எல்லோரும் திட்டுகின்றனர். அவனைத் திருத்துவதற்காக விடுதியில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். இந்தப் புதிய பள்ளிக்கு வரும் நிகும்ப் (ஆமிர் கான்) என்ற ஓவிய ஆசிரியர். அவனது குறைபாட்டைப் புரிந்து கொண்டு அவனுக்குப் படிக்கக் கற்றுக் கொள்ள உதவுகிறார். அவனுடைய ஓவியத் திறமையையும் மெருகூட்டிப் போட்டியல் வெல்லச் செய்கிறார். இது தான் கதை.
Bollywood formula கொஞ்சமும் பிசகாமல் நல்ல பாடல்கள், நெகிழ்ச்சியான climax என்று எடுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் ஆமிர் கான் வந்த பிறகு தான் படம் விறுவிறுப்படைகிறது. இரண்டாம் பாதியை 2,3 முறை பார்த்தேன். ஆமிர் கான் நடிக்காமல் சாதாரண நடிகர் ஒருவர் நடித்திருந்தால் படம் இந்த அளவு கவனம் பெற்றிருக்குமா என்று கேள்வி எழுகிறது. நிறைய உலகத் திரைபடங்கள் பார்த்த பிறகு, இதை அருமையான திரைப்படம் என்று எல்லாம் பாராட்ட மனது வரவில்லை. ஆனால், பாலிவுட் சூழலுக்கு வரவேற்கக்கூடிய படம் தான். இந்தப் படம் பார்க்கும் வரை Dyslexia குறித்து எனக்குத் தெரியாது. அந்த அளவில் விழிப்புணர்வு பரப்புவதில் படத்துக்கு வெற்றி தான். இது குழந்தைகள் பார்க்க வேண்டிய குழந்தைகள் படம் அல்ல. பெரியவர்களுக்கே இந்தப் படம் கூடுதல் தாக்கத்தை உண்டு பண்ணும்.

நல்ல படம் எடுக்க லட்சம் லட்சமாக பணம் வேண்டுமென்று யார் சொன்னது?? ஒரு ஜோடி ஷூ போதுமென்பது மஜித்தின் வாதம்!
மேலும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.
ரசினி நடித்த பில்லா பார்த்தேனா தெரியாது. நினைவில் இல்லை. போன ஆண்டு வந்த சாருக் கானின் டான் பார்த்திருக்கேன். தமிழ் பில்லா 2007ல், சாருக் கானின் டானில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு விறுவிறுப்பு, தயாரிப்புத் தரம் கூட இல்லை
கடத்தல்கார அசித்தின் அறிமுகம் சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. எங்க விசயகாந்த் படம் மாதிரி நகைச்சுவையா இருக்குமோன்னு நினைக்கத் தொடங்கும்போது கடத்தல்கார அசித் செத்துப் போறார். அப்புறம் வேலு வந்த பிறகு பரவாயில்லாம போகுது.
படத்தில் casting படு சொதப்பல். பிரபுவைப் பார்த்தா சிரிப்பு தான் வருது. ரகுமானை எல்லாம் ஒரு villain நடிகரா பார்க்க முடியல. நமிதாவும் நயன்தாராவும் தாராளமாக நடிச்சிருக்காங்க ஆனால், அதில் ஒரு grace இல்லை. ஒரு feelingம் வர மாட்டேங்குது. துணிகளைக் குறைப்பது மட்டுமே கவர்ச்சி இல்லை !!
(மேலும்…)
ஓரம் போ – வித்தியாசமான கதைக்களத்தில் jollyஆ ஒரு படம். ரொம்ப அலுக்காம நேரம் போனது. ஒரு முறை பார்க்கலாம்.
தமிழ்ப் படங்கள் தவிர்த்து பிற மொழி உலகப் படங்கள் பார்த்து திரைப்பட அறிவை வளர்த்துக் கொள்வது என்ற கொலை வெறியுடன் பார்க்கத் தொடங்கிய முதற்படங்களில் ஒன்று பதேர் பாஞ்சாலி. சத்யஜித் ரேயின் முதற் படம். நான் பார்க்கும் அவருடைய முதற்படமும் இதுவே. கண்டிப்பாக அவருடைய பிற படங்களையும் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
1950களில் பராசக்தி போன்ற சமூக மேடை நாடகப் பாணி தமிழ்த் திரைப்படங்களும், ராஜா ராணிக் கதைத் திரைப்படங்களும் இருந்த காலத்தில் இந்தப் படம் வங்காளத்தில் வெளி வந்திருக்கிறது என்ற போது இதன் அருமை புரிகிறது. ஆனாலும், படம் அநியாயத்துக்கு ஆமை வேகம், ஒன்னரை மணி நேரப் படத்தை மூன்று பாகங்களாகப் பிரித்துப் பார்த்து முடிக்க ஒரு வாரம் ஆனது. அப்பு என்ற சிறுவனின் கதையாகக் கூறப்பட்டாலும் இதில் வரும் துர்கா என்று சிறுமி தான் என்னைக் கவர்ந்தாள். பின்னணி இசை ரவிசங்கர் என்று வந்தது. சில இடங்களில் வருடினாலும், அமைதியாக விட்டிருக்கக் கூடிய பல இடங்களில் பின்னணி இசை வந்து கொண்டே இருப்பது நெருடலாக இருந்தது.

தலைப்பைப் பார்த்து குளப்பம் அடையாதீங்க. அதாவது பில்லா திரைப்படத்தில் அஜித் சொல்லும் வசனம் “I’m back”. அதைத்தான் தமிழாக்கி தந்திருக்கின்றோம். சரி இனி விமர்சனப் பக்கத்திற்குச் செல்வோம்.
(மேலும்…)
300 திரைப்படத்துக்கான விமர்சனத்தை வாசிக்க முன்னர் ரெயிலரை ஒரு தடவை பாருங்கள். ரெயிலரைப் பார்த்தால் தெரியும் படம் எவ்வளவு அகோரமாகன சண்டைக் காட்சிகள் நிறைந்தது என்பது.
ஒரு நாள் ஸ்பாட்டா வீரர்களின் நகருக்கு வரும் பாரசீகச் செய்தித் தூதுவன் ஸ்பாட்டாவைச் சரணடையுமாறு வேண்டுகின்றான். இதனால் ஆத்திரம் கொள்ளும் ஸ்பாட்டா அரசன் செய்திகொண்டு வந்த தூதுவர்களை கொலை செய்வதுடன் யுத்தத்திற்குத் தயாராகின்றான்.
ஸ்பாட்டாக்கள் என்பவர்கள் பிறவியிலேயே வீரர்கள், யுத்தத்திற்காகப் பயிற்றுவிக்கப்ட்டவர்கள். இரக்கம், மரணம் பற்றியெல்லாம் அக்கறைப்படாதவர்கள். சிறுவயதில் இருந்தே இதற்கான பயிற்சி இவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
யுத்தத்திற்குச் செல்ல முதல் அரசன் கெட்ட சக்திகளை பிரார்த்தித்து அவர்களின் அனுமதியுடனேயே யுத்தத்திற்குச் செல்ல வேண்டும் ஸ்பாட்டாக்களின் பாரம்பரியம். மன்னனால் கூட அதை மீற முடியாது. அவர்களிடம் அரசன் திட்டத்தை விளக்குகின்றான். ஆனாலும் அந்த மத குருமார்கள் ஒராக்கிள் எனும் பெண்ணிடம் கேட்க வேண்டும் என்கின்றனர். ஒராக்கிள் என்ற பெயரில் நகரில் இருக்கும் அழகான பெண்ணை இந்த குருமார்கள் பெற்றுவிடுவர். அவளின் அழகே அவளுக்கு சாபமாகும். இந்த மத குருமார் பாரசீகத்திடம் பணம் வாங்கிக்கொண்டு சண்டைக்குப் போக ஒராக்கிள் அனுமதிக்கவில்லை என்று கூறிவிடுகின்றனர்.
(மேலும்…)
பிளர் ரைன் (Blood Rayne) ஆங்கில சினிமாக்காரர்கள் பலகாலம் புளிந்து சக்கைபோட்ட ட்ரக்குல்லாத் திரைப்படமாகும். ஒரு பெண் பாதி மனிதனாகவும் பாதி ட்ரகுல்லாவாககும் இருக்கின்றாள். இவளைச் சுத்தியே கதை நகர்கின்றது.ட்ரகுல்லாத் திரைப்படங்களைப் பார்பபவராயி்ன் இந்தத் திரைப்படத்தை நீங்கள் காணலாம். வன்முறை மற்றும் சில காட்சி அமைப்புகள் சிறுவருக்கு ஏற்றதல்ல! ஆங்கில விக்கியில் இத்திரைப்படத்தின் பக்கம் இங்கே.

எந்த உண்மையான சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டதல்ல இப்படம் என்ற அறிவிப்புடன் தொடங்குகிறது படம். மொத்த படத்திலும் இருக்கிற ஒரே ஒரு பொய் அது மட்டுமே!
மேலும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்!
விமர்சகர்: ஆங்கில விக்கியில் கல்லூரி திரைப்படத்தின் பக்கம்.
ஃபிளை பாய்ஸ் என்கிற திரைப்படம், முதலாம் உலக யுத்தக் காலத்துக்கு எங்களை அழைத்துச் செல்கின்றது.
பிரான்சை நாசிப்படை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கின்றது. இதே வேளை அதைத் தடுக்க ஒரு பிரான்சு விமானப்படை, அந்த விமானப்படைப்பிரிவில் பணியாற்ற அமெரிக்க வீரர்கள் சிலர் தம் சொந்த விருப்பில் செல்கின்றனர்.
பிரமாண்டத்திற்காக இந்தத்திரைப்படத்தைப் பார்க்கலாம். காதல், யுத்தம், பரபரப்பு என்று அனைத்தும் உள்ளது.
மூன்று படங்களையும் ஒன்றை அடுத்து ஒன்று பார்த்தேன்.
மூன்றையும் இயக்கியது ஸ்டீவன் ஸ்பீல்பர்க்.
மூன்றுமே உண்மைக் கதைகள்.
schindler’s list, catch me if u can, மியூனிக் என்ற வரிசையில் பிடித்து இருந்தது.
schindler’s list – நாசிகள் யூதர்களைப் படுகொலை செய்த கதையைப் படம் பிடிக்கிறது. 1993ல் வெளிவந்த கருப்பு வெள்ளைப் படம். வண்ணத்தில் எடுத்திருந்தால் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்குமா என்று யோசிக்க வைக்கிறது. கருப்பு வெள்ளைப் படத்தில் ஒரு சில இடங்களில் வண்ணங்களைப் பயன்படுத்தும் இடம் நெகிழ்ச்சி. பதைபதைக்கவும் கடைசிக் கட்டத்தில் அழவைக்கவும் செய்கிறது. கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
catch me if u can – செம ஜாலியாகப் பார்க்கலாம்.
மியூனிக் – இந்த ஊரில் சில மாதங்கள் இருந்த ஆர்வத்தில் பார்த்தேன். மியூனிக் விளையாட்டரங்கு தவிர வேறு ஒன்றும் காணவில்லை. அவ்வளவாகப் பாதிக்காத படம். பார்க்காமல் விட்டாலும் இழப்பில்லை.
டூம், போக்கிரி போன்ற சாதாரண இந்திய பொலீஸ், திருடன் திரைப்படங்களைப் பார்த்து புளித்துப் போனவர்கள் மாற்றாக இந்தத் திரைப்படம் த டிப்பார்ட்டட் ஐப் பார்க்கலாம். நான்கு ஒஸ்கார் விருதுகளைத் தட்டிய திரைப்படம் என்பதால் சுவாரசியத்துக்கு குறைவிருக்கும் என்று சந்தேகப் படத்தேவையில்லை. ஆஸ்காரிற்கு அப்பால் சுமார் 40 விருதுகளை இந்தத் திரைப்படம் அள்ளியுள்ளது.
உண்மையில் இந்தத் திரைப்படம் ஒரு ஹாங் ஹாங் திரைப்படத்தின் (WuJianDao – Internal Affair) மீளாக்கமாகும். ஆயினும் அத் திரைப்படத்தை விட இது சிறப்பாக இயக்கப்பட்டுள்ளதாக ஹாலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திரைப்படத்தின் நாயகன் நான் அறிமுகப் படுத்தத் தேவையில்லாதவர். அவர்தான் டைட்டானிக் நாயகன் லியனார்டோ டிக்காப்பிரியோ. படிப் படியாக உயர்ந்து நடிப்பில் தடம் பதித்து வருகின்றார் டிக்காப்பிரியோ.
(மேலும்…)