மூன்று படங்களையும் ஒன்றை அடுத்து ஒன்று பார்த்தேன்.
மூன்றையும் இயக்கியது ஸ்டீவன் ஸ்பீல்பர்க்.
மூன்றுமே உண்மைக் கதைகள்.
schindler’s list, catch me if u can, மியூனிக் என்ற வரிசையில் பிடித்து இருந்தது.
schindler’s list – நாசிகள் யூதர்களைப் படுகொலை செய்த கதையைப் படம் பிடிக்கிறது. 1993ல் வெளிவந்த கருப்பு வெள்ளைப் படம். வண்ணத்தில் எடுத்திருந்தால் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்குமா என்று யோசிக்க வைக்கிறது. கருப்பு வெள்ளைப் படத்தில் ஒரு சில இடங்களில் வண்ணங்களைப் பயன்படுத்தும் இடம் நெகிழ்ச்சி. பதைபதைக்கவும் கடைசிக் கட்டத்தில் அழவைக்கவும் செய்கிறது. கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்.
catch me if u can – செம ஜாலியாகப் பார்க்கலாம்.
மியூனிக் – இந்த ஊரில் சில மாதங்கள் இருந்த ஆர்வத்தில் பார்த்தேன். மியூனிக் விளையாட்டரங்கு தவிர வேறு ஒன்றும் காணவில்லை. அவ்வளவாகப் பாதிக்காத படம். பார்க்காமல் விட்டாலும் இழப்பில்லை.
மியூனிச் படத்தில் யூதர்களுக்கு நல்லாக ஒத்துப்பாடுகின்றார்… ஸ்பில்ேபர்க்!!!
மறுமொழி by mayooresan — டிசம்பர் 6, 2007 @ 9:09 மு.பகல் |
[...] பாஞ்சாலி, Catch me if you can, Munich, Schindler’s List, சக் தே இந்தியா, அம்முவாகிய நான், [...]
வரு பிங்கு by பிற தளங்களில் எழுதியவை.. — மார்ச் 18, 2008 @ 8:42 பிற்பகல் |
பார்த்தபின்னர் நீண்ட நாட்களுக்கு நினைவில் நிற்கும் படங்கள் மிகச்சிலவே. அந்த வரிசையில் ஒன்றுதான் schindler’s list. அருமையான திரைப்படம். திரைப்படத்தில் பலமே கறுப்பு வெள்ளைதான்.
மறுமொழி by mayooresan — ஜூலை 23, 2008 @ 8:13 மு.பகல் |