திரை விமர்சனம்

டிசம்பர் 31, 2007

தாரே சமீன் பர்

தாரே சமீன் பர் – தமிழ் வலைப்பதிவுகளில் இந்தப் படம் குறித்து வந்த build-up தாங்க முடியாமல் நானும் இந்தப் படத்தைப் பார்த்தேன்.

எழுத்துக்களைப் படிக்க, எழுத, புரிந்து கொள்ள இயலா குறைபாட்டுடன் இருக்கிறான் இசான் (Darsheel safari) . ஆனால், அவன் குறைபாட்டைப் புரிந்து கொள்ளாமல், அவன் விளையாட்டுத் தனம் செய்வதாக நினைத்து பெற்றோர், ஆசிரியர் எல்லோரும் திட்டுகின்றனர். அவனைத் திருத்துவதற்காக விடுதியில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். இந்தப் புதிய பள்ளிக்கு வரும் நிகும்ப் (ஆமிர் கான்) என்ற ஓவிய ஆசிரியர். அவனது குறைபாட்டைப் புரிந்து கொண்டு அவனுக்குப் படிக்கக் கற்றுக் கொள்ள உதவுகிறார். அவனுடைய ஓவியத் திறமையையும் மெருகூட்டிப் போட்டியல் வெல்லச் செய்கிறார். இது தான் கதை.

Bollywood formula கொஞ்சமும் பிசகாமல் நல்ல பாடல்கள், நெகிழ்ச்சியான climax என்று எடுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் ஆமிர் கான் வந்த பிறகு தான் படம் விறுவிறுப்படைகிறது. இரண்டாம் பாதியை 2,3 முறை பார்த்தேன். ஆமிர் கான் நடிக்காமல் சாதாரண நடிகர் ஒருவர் நடித்திருந்தால் படம் இந்த அளவு கவனம் பெற்றிருக்குமா என்று கேள்வி எழுகிறது. நிறைய உலகத் திரைபடங்கள் பார்த்த பிறகு, இதை அருமையான திரைப்படம் என்று எல்லாம் பாராட்ட மனது வரவில்லை. ஆனால், பாலிவுட் சூழலுக்கு வரவேற்கக்கூடிய படம் தான். இந்தப் படம் பார்க்கும் வரை Dyslexia குறித்து எனக்குத் தெரியாது. அந்த அளவில் விழிப்புணர்வு பரப்புவதில் படத்துக்கு வெற்றி தான். இது குழந்தைகள் பார்க்க வேண்டிய குழந்தைகள் படம் அல்ல. பெரியவர்களுக்கே இந்தப் படம் கூடுதல் தாக்கத்தை உண்டு பண்ணும்.

5 மறுமொழிகள் »

  1. நேர்மையான நல்ல விமர்சனம்

    மறுமொழி by etamil — ஜனவரி 6, 2008 @ 5:46 மு.பகல் | பதில்

  2. இது வரை பார்க்கவில்லை!!! ஆனாலும் நல்ல விமர்சனம்!

    மறுமொழி by mayooresan — ஜனவரி 6, 2008 @ 3:28 பிற்பகல் | பதில்

  3. மிக நல்ல படம். நிச்சயம் பார்க்கலாம்.

    மறுமொழி by பாலாஜி — ஜனவரி 7, 2008 @ 5:50 பிற்பகல் | பதில்

  4. [...] தாரே சமீன் பர், பில்லா, ஓரம் போ, [...]

    வரு பிங்கு by பிற தளங்களில் எழுதியவை.. | ரவி — ஜனவரி 10, 2008 @ 9:38 பிற்பகல் | பதில்

  5. [...] தாரே சமீன் பர் – நல்ல படம், பார்க்கலாம். டிஸ்லெக்சியா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக அமீர் கானைப் பாராட்டலாம். இந்தப் படம் குறித்த வேறொரு விமர்சனம் இங்கே! [...]

    வரு பிங்கு by நட்சத்திரங்கள் - நிழலும் நிஜமும்! « திரை விமர்சனம் — ஜனவரி 15, 2008 @ 6:10 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.