திரைப்படம் என்றால் அழகான ஹீரோ இருக்க வேண்டும், அழகான துணை நடிகர்கள் இருக்க வேண்டும், பெரிய செட்டுகள் இருக்க வேண்டும், ஹிப் ஹொப் பாடல்கள் இருக்க வேண்டும், நமீதா வந்து குத்துப் போட வேண்டும் என்றெல்லாம் நம்மவர்கள் எதிர்பார்ப்பர். இவற்றை மீறி உள்ள திரைப்படம் கல்லூரி விமர்சனத்தை இங்கே காண்க.
ஷாருக் நடிப்பில் வெளியான ஓம் ஷாந்தி ஓம் விமர்சனம் இங்கே!!!
நேற்று மாலை மிகவும் அலுப்படிக்கவே அருகில் இருந்த டி.வி.டி கடைக்குச்சென்று எடுத்துப் பார்த்த படமே லைசன்ஸ் டு வெட்.
ஒரு திருமணக் காட்சியைக் காட்டுவதுடன் திரைக்கதை ஆரம்பிக்கின்றது. ஒரு பாதிரியார் காதலின் அத்தியாயங்களை விபரிப்பதுடன் ஏன் திருமணங்கள் பிசகுகின்றன என்றும் கூறுகின்றார்.
பின்னர் ஒரு ஜோடி எவ்வாறு சந்திக்கின்றது. அவர்கள் எவ்வாறு காதலில் வீழ்கின்றார்கள், எவ்வாறு அந்தப் பையன் அந்தப் பெண்ணிடம் தன்னைத் திருமணம் முடிக்குமாறு வேண்டுகின்றான் என்பதைக் காட்டுகின்றார்கள்.
பெண்ணின் வேண்டுகோளின் படி அவர்கள் ஊரில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் செய்வது என்று முடிவாகின்றது. அந்த தேவாலயத்துப் பாதிரியார் வித்தியாசமானவர். அவர் சில பரீட்சைகள் வைத்து அதில் இவர்கள் சித்தி பெற்றால்தான் தான் திருமணத்தை நடத்தி வைப்பேன் என்று சொல்கின்றார். இந்தப் புள்ளியில் இருந்து ஒரே சிரிப்புத்தான்.
(மேலும்…)