திரை விமர்சனம்

மார்ச் 4, 2008

Bee Movie

பீ மூவி எனும் அனிமேஷன் திரைப்படத்தில், பட்டம் முடித்து வேலைக்குச் செல்ல ஆயத்தமாகும் ஒரு தேனி, தேனீக்களின் வாழ்க்கை முறையில் ஆர்வமற்று வெளியுலகை எட்டிப் பார்க்கின்றது. இந்த தேனிக்கு வெளி உலகில் ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கின்றது. அது சாதாரண பெண் தேனியுடனல்ல ஒரு மனிதப் பெண்ணுடன் நட்பு கிடைக்கின்றது.

தேனீக்களின் சட்டப்படி மனிதர்களுடன் அவர்கள் பேசக் கூடாதாம். ஆனாலும் இவர் இந்தப் பெண்ணுடன் பேசி இருவரும் நண்பர்களாகி விடுகின்றனர். நண்பரான தேனியார் உலகளவில் தேனீக்களுகளிடம் இருந்து தேனைத் திருடும் மனிதருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்றார். இவ்வாறு தொடர்கின்றது இந்த Animation திரைப்படம்.

நகைச்சுவை, சோகம், கற்பனை, வீரம் என்று சினிமாவில் இருக்க வேண்டிய அனைத்தும் இருக்கின்றது. 100 வீதம் சிறுவர்க்கான திரைப்படம். சிறுவர் உள்ளம் கொண்டவராக இருந்தால் நீங்களும் இதைக் காணலாம். வெறுமனே சிறுவர் கதையாக்கி விடாமல் இயற்கை சமநிலை பற்றியும் அழகாகக் காட்டியுள்ளார்கள்.

குழந்தையுடன் சேர்ந்து பார்க்க அருமையான திரைப்படம்.

2 மறுமொழிகள் »

  1. நல்ல விமர்சனம். தேன் சாப்பிடாதிங்கப்பு!!

    Comment by balaji — மார்ச் 9, 2008 @ 9:50 பிற்பகல் | பதில்

  2. ஆமாம், கவனமாக இருக்கிறம்!

    Comment by Mayooresan — மார்ச் 18, 2008 @ 8:51 மு.பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.