திரை விமர்சனம்

மார்ச் 4, 2008

IT

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம் — mayooresan @ 4:09 மு.பகல்
Tags: ,

பயங்கரமான பிசாசுப் படங்கள் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது என்பதால் அண்மையில் Stephen King எழுதி 1986ல் பிரபலமாக விற்பனையாகிய நாவலின் திரையாக்கமான “IT” என்ற திரைப்படம் பார்த்தேன். IT என்றவுடன் தகவல் தொழில்நுட்பம் என்று எண்ணாதீர்கள். இது எனும் அர்த்ததில் வரும் IT ஏ இது.

கதையின் படி கோமாளி வேஷம் போட்ட ஒரு இது (ஒரு ஜந்து என்று வைத்துக் கொள்ளுங்களேன்!) குழந்தைகளைக் கொலை செய்கின்றது. 30 வருடங்களுக்கு முன்னர் 7 சிறுவர்கள் சேர்ந்து இதை எதிர்க்கின்றார்கள். அதில் வெற்றியும் காண்கின்றார்கள். ஆனாலும் 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அந்த இது வந்து விடுகின்றது. இதை அழிக்க இவர்கள் முயல்வதுதான் கதை.

சிறுவர் திகில் படம் போல இருந்தாலும், சில காட்சிகள் குழந்தைகளை கொஞ்சம் பயமுறுத்தலாம். என்னைப் பொறுத்த வரையில் PG 15 என்று தணிக்கைச் சான்றுதல் கொடுப்பேன்.

படம் பார்த்து முடிந்த பின்னர் ஏதோ ஒரு புத்தகம் வாசித்து முடிந்தது போன்ற உணர்வே மேலோங்கி இருந்தது. திரைப்படத்தின் நீளம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.

No Comments Yet »

இதுவரை மறுமொழிகள் ஏதும் இல்லை.

மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.