திரை விமர்சனம்

ஜூன் 25, 2008

The Incredible Hulk (2008) – விமர்சனம்

Incredible hulk 2இந்தியானா ஜோன்ஸ் அன்ட் கிங்டம் ஓஃப் கிரிஸ்டல் ஸ்கல் பார்க்கும் போது இந்த திரைப்படத்தின் ட்ரெயிலரையும் பார்த்தேன். ஆக்சன் பட இரசிகரான நான் இந்த திரைப்பட ரெயிலரைப் பார்த்து அதில் மயங்கியதன் காரணமாகத்தான் மீண்டும் மஜஸ்டிக் சென்று இன்கிரடிபில் ஹல்க் பாகம் II ஐ பார்த்து தீர்த்தேன்.

பாகம் ஒன்றை நான் பார்க்கவில்லை, அதனால் அதில் என்ன நடந்தது என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் திரைப்பட தொடக்கத்தில் எவ்வாறு இந்த ஹல்க் உருவானார் என்று காட்டுகின்றார்கள். இந்தப் பாகம் அக்சன் இரசிகர்களுக்கு தீனி போடக்கூடிய அருமையான அடி-பிடிக்கள் நிறைந்த திரைப்படம்.

ஒரு சாதாரண மனிதன் ஆய்வு கூட விபத்தில் சிக்கி அபரிதமான சக்தி ஒன்றைப் பெறுகின்றான். அதாவது அளவுக்கு அதிகமாக கோவப்பட்டால், அல்லது இரத்த அழுத்தம் கூடினால் அவன் ஒரு பச்சை நிற மனிதனாக மாரூபம் கொள்வான். அத்துடன் எதனாலும் சாய்க்க முடியாத அபரிதமான சக்தியையும் பெறுவான்.

இவனை (புரூஸ்) அமெரிக்க இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்த ஒரு கேர்ணலும், அவனைக் காப்பாற்ற முயலும் அவன் காதலியும், இவனை ஒத்தைக்கு ஒத்தையாக சந்திக்க என ஒரு இராணுவ வீரன் என கதையில் பல பாத்திரங்கள்.

ட்ரான்ஸ்போமர்ஸ் 2ம் பாகத்தை இயக்கும் இயக்குனர்தான் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளமையினால் அக்சன் காட்சிகள் எப்படி இருக்கும் என நான் சொல்லத் தேவையில்லைதானே?

மொத்தத்தில் அலுப்படிக்காத, கதிரை நுனியில் உட்கார வைக்கும் ஒரு திரைப்படம். Action, Sci-fi விரும்பிகளுக்கு நல்ல ஒரு விருந்து!!!

பி.கு: மலேசியாவில் ஹல்க்கின் வசூல் சாதனையை தசாவதாரத்தால் முறியடிக்க முடியவில்லையாம்!!!!

ஜூன் 15, 2008

தசாவதாரம் விமர்சனம்

இன்று மதியம் தசாவதாரம் திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தேன். உலகத் தமிழர்களால் அதிகமாக எதிர்பார்க்கப் பட்ட திரைப்படம் இது. பெருமளவு செலவில் தயாரிக்கப் பட்டுதுடன், கமல் 10 வேடங்களிலும் நடித்திருந்தார். தசாவதாரம் விமர்சனம் தமிழ் வலைப்பதிவில் எழுதியுள்ளேன் கண்டு மகிழ்க.

ஜூன் 1, 2008

Cloverfield திரைப்பட விமர்சனம்

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம் — mayooresan @ 10:13 மு.பகல்
Tags: ,

உங்கள் கையடக்க் வீடியோ கமிரா மூலம் எடுக்கும் வீடியோ திரைப்படமானால் எப்படியிருக்கும். Cloverfield எனும் திரைப்படம் அப்படிப்பட்டதே.

இத்திரைப்பட விமர்சனத்தை ஹொலிவூட் பார்வையில் காண்க.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.