ஒரு சம்பவம் நடக்கும்போது, அவரவர் நிற்கும் இடத்தைப் பொறுத்து, ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தைப் வெவ்வேறுவிதமாகப் பார்க்கின்றார்கள். இந்த ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தையும் vantage point என்று சொல்வார்கள். இந்தகோட்பாட்டை வைத்தே இந்த விறுவிறுப்பான படத்தை எடுத்திருக்கின்றார்கள்.
ஸ்பெயினில் ஒரு சர்வதேச கூட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றார் அமெரிக்க ஜனாதிபதி. இவரைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகின்றது ஒரு பயங்கரவாதக் குழு. இந்தக்கொலை முயற்சி, அதை சூழ்ந்து நிற்கும் மர்மம் இவற்றைச் சுற்றிப் படம் போகின்றது. இந்தக் கொலைமுயற்சியை எட்டுப்பேரின் vantage pointஇலிருந்து காட்டியிருக்கிறார்கள்.
படத்தின் எண்ணப்பாடு என்னவோ புதிதானதுதான். என்றாலும் அதை எடுத்தவிதம் கொஞ்சம் அலுப்படிக்கிறது. மொத்தமாக கிட்டத்தட்ட 30நிமிடங்கள்தான் படத்தில் நடக்கும் கதை. என்றாலும் எட்டுப்பேரின் vantage point’ஐக் காட்டுவதற்காக அதை ஐந்து தரம் rewind பண்ணியிருக்கின்றார்கள் – அது கொஞ்சம் சினமூட்டுகின்றது. என்றாலும், ஒவ்வொருக்காலும் rewind பண்ணும்போதும் கதையில் ஒரு புது முடிச்சு விழச்செய்திருப்பது நன்றாக இருக்கின்றது. இந்த rewind பிரச்சனையை விட்டால், படம் மற்றப்படி விறுவிறுப்பாகப் போகின்றது – முக்கியமாக தொடக்கமும், முடிவும். அவ்வளவு பேரை சுட்டு, குண்டு வைத்து கொன்றுவிட்டு, படத்தை முடித்தவிதம் வித்தியாசமாக இருக்கின்றது.
அலுப்பில்லாமல் பார்க்கலாம். படத்தை இணையத்திலிருந்து இறக்குவதாகவிருந்தால், subtitles இருக்கின்றதா என அவதானித்துக்கொள்ளுங்கள். படத்தில் சில பகுதிகள் spanish கொழியில் இருக்கின்றது.
vantage point spanish கொழியில் vintage point என்று சந்தேகப்படுகிறேன்
Comment by பெயரிலி — ஆகஸ்ட் 4, 2008 @ 11:36 பிற்பகல் |
மன்னிக்கவும், இடுகைக்கான தலைப்பில் சிறு எழுத்துப் பிழை – அது vintage point அல்ல, vantage point. Vintage என்பது wine உடன் சம்பந்தப் பட்ட ஒரு சொல், அப்பிடி ஒரு சொல்லும் spanish மொழியில் இருப்பதாகத் தெரியவில்லை.
Comment by bmmaran — ஆகஸ்ட் 5, 2008 @ 3:18 மு.பகல் |
அது மொழியில் அல்ல- spanish கொழியில் இருப்பதாகத் சந்தேகப்படுகிறேன்
Comment by பெயரிலி — ஆகஸ்ட் 5, 2008 @ 3:40 மு.பகல் |
ஸ்பானில் கொழியா??? மொழியா???
Comment by mayooresan — ஆகஸ்ட் 5, 2008 @ 12:45 பிற்பகல் |
ஸ்பானில் கொழியா??? மொழியா???
ஸ்பானில் கோப்பி!
Comment by பெயரிலி — ஆகஸ்ட் 5, 2008 @ 3:06 பிற்பகல் |
அப்பு, என்ன நடக்குது இங்க?? :-I
Comment by bmmaran — ஆகஸ்ட் 5, 2008 @ 4:12 பிற்பகல் |