திரை விமர்சனம்

ஜனவரி 12, 2009

வில்லு விமர்சனம்

கோப்பு வகை: தமிழ்த் திரைப்படம் — mayooresan @ 5:08 பிற்பகல்
Tags: , , , , , , ,

படம் தொடங்கியதும் ஒரே விசில் சத்தம், அப்புறமாக எப்படா விஜய் வருவார் வருவார் என்று ஏங்கி இருந்த போது இறுதியாக விசய் வந்து சேர்ந்தார். என்ன கொடுமை சார், ஹூரோ அறிமுகம், விஜய் சேலை போர்த்திக்கொண்டு அறிமுகமாகின்றார். ஏதோ அவரை கற்பழிப்பது போல வில்லனுகள் துகிலுரிகின்றார்கள். அப்பவே எழுந்து போய் விடலாமா என்று இருந்த்து, என்றாலும் கொடுத்த 300 ரூபா இழுத்து உட்கார வைத்தது.

படத்தில் விஜயை காட்டி அதில் ஒரு பிளாஷ் பேக் வேற, மகன் விஜயின் அநியாயம் தாங்காமல் தவிக்கும் நேரத்தில் அப்பா விசயையும் காட்டி நோகடித்தார்கள். ஏதோ பல்லிக்கு மீசை வைத்தது போல ஒரு உருவத்துடன் வருகின்றார் விஜய். அதில் உச்சகட்டம் அவர் இராணுவ அதிகாரியாம். அவர் எந்த ஆபரேஷன் போனாலும் தனியாத்தான் போவாராம். இரண்டு கையிலயும் இரண்டு A.K. 47 வைத்து சுடுவாராம். பாக்கிறவன் கேனை என்டா எருமையும் ஏரோபிளேன் ஓட்டும்.

மிகுதி வில்லு விமர்சனம்

4 மறுமொழிகள் »

  1. கலக்கல் விமர்சனம்!

    Comment by பாலாஜி — ஜனவரி 14, 2009 @ 12:46 பிற்பகல் | பதில்

  2. billa ajitha vida itu onnum ovara illa thambi!

    Comment by raju — ஜனவரி 14, 2009 @ 2:51 பிற்பகல் | பதில்

  3. உங்களுடைய விமர்சனத்தை பார்க்கும் பொழுது, படம் சகிக்கவில்லை என புரிகிறது.

    ஆனால், இன்னும் கொஞ்சம் ஏன் சகிக்கலைன்னு சொல்லியிருக்கலாம்.

    Comment by nondhakumar — ஜனவரி 16, 2009 @ 1:54 பிற்பகல் | பதில்

  4. “உங்களுடைய விமர்சனத்தை பார்க்கும் பொழுது, படம் சகிக்கவில்லை என புரிகிறது.

    ஆனால், இன்னும் கொஞ்சம் ஏன் சகிக்கலைன்னு சொல்லியிருக்கலாம்.”
    கொதிக்கும் நெஞ்சுக்கு பால் வேறு ஊற்றவேண்டுமா? அவரே நொந்து நூலாப்போய் கஸ்டப்பட்டு எழுத காரணம் வேறு கூறி …..

    என்னையா படம் நடிக்குறானுங்க…. எப்ப பார்த்தாலும் ஒரே நடிப்பு இதுக்கு ஒரு படத்தை எடுத்துட்டு வேற வேற பேரப்போட்டு வெளியிடலாமே? ஆளுக்கேத்த கதாபாத்திர தேர்வு முக்கியம் அது முடியாவிட்டால் பேசாமல் ஒதுங்கவேண்டியதுதானே!!! யதார்த்தம் என்று ஒன்றுண்டு ஒரு AK47 துப்பாக்கி சுடும்போது கொடுக்கும் உந்துதல் விசையே பெரியது அதில் ஒல்லிக்குச்சி உடம்பர் 2 வேற வச்சுக்கொண்டு சுத்தி சுத்தி வேற சுடுவாராம் அத நாங்க பாத்து கை தட்டனுமாம்? ? ?

    Comment by Yarl Nilavan — ஜனவரி 20, 2009 @ 7:56 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.