திரை விமர்சனம்

ஜூன் 28, 2007

Sicko – முதல் வேலையா இந்தப் படத்தைப் பாருங்க !

மருத்துவ வசதி வணிக மயமாக்கப்படுவதால் சாதாரண மக்கள் எப்படி பாதிக்கப்படுறாங்கன்னு அமெரிக்காவை அடிப்படையா வைச்சு சொல்லி இருக்கிறார், இயக்குனர் மூர். இதை வெறும் ஒரு நாட்டினரின் மருத்துவ கவனிப்புப் பிரச்சினைன்னு பார்க்காம, மருத்துவம் – கல்வி போன்ற அடிப்படை மனித உரிமைகள் கூட வணிக மயமாக்கப்பட்டா அது எந்த அளவு பரிதாபமான நிலைக்குச் சமூகத்தை இட்டுச் செல்லுங்கிறதுக்கான ஒரு விழிப்புணர்வுப் படமா பார்க்குறது நல்லது.

மேலும் வாசிக்க, சிக்கோ – திரை விமர்சனம் பாருங்கள்.

ஜூன் 25, 2007

என் வீட்டு சன்னலில்

நான் வசிக்கும் ‘Westwood’ பகுதியில் ‘சுதந்திர?!’ திரைப்படங்களுக்கான விழா நடக்கிறது. நேற்று ‘Syndromes and a century‘ என்றொரு தாய் மொழி படம் பார்த்தேன். முதல் பாதி ரம்மியமான காதல் கதை. இரண்டாவது பாதியில் அதே கதையை வேறு மாதிரி எடுக்கிறேன் பேர்வழி என்று மண்டை காயவைத்துவிட்டார்கள். மோசார்ட்டின் விடுதலை, வாழ்வியல், மரணம், சுயபரிசோதனை உள்ளிட்ட சிந்தனைகளை கொண்டாடும் படமாதலால் சற்றும் விளங்காத சப்தங்கள், காட்சிகளோடு படத்தை முடித்துவிட்டார்கள். தலை சுற்றியது.

ஜூன் 16, 2007

நெதர்லாந்தில் சிவாஜி

படம் பார்க்கும்போது மூனு மணிநேரம் ஓடுனது தெரில. ஆனா, வெளிய வந்து யோசிச்சா மனசில தாக்கம் உண்டு பண்ணுற மாதிரி ஒன்னும் இல்ல. கூடுதலாவே hype பண்ணி விட்டுருக்காங்கன்னு நினைக்கிறேன். ஒரு பாட்டுக்கு 2 கோடி செலவுன்னு வைச்சாலும் மிச்ச காசு எல்லாம் எங்க போச்சுன்னு தெரில.

மேலும் வாசிக்க, நெதர்லாந்தில் சிவாஜி திரைப்படம் பார்த்த அனுபவம் பாருங்கள்.

Create a free website or blog at WordPress.com.