திரை விமர்சனம்

ஜூலை 30, 2007

பெர்க்மன் காலமானார்.


உலகின் தலைசிறந்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான ஸ்விடன் நாட்டு இங்க்மார் பெர்க்மன் நேற்று காலமானார். குணா பாணியில் சொல்லவேண்டுமானால் “மனிதர் உணர்ந்து கொள்ள அவரது படங்கள் சாதாரனமானவையல்ல, அதையும் தாண்டி ஆழமானவை, அற்புதமானவை!”. அதனால் அவரது பெரும்பாலான படங்களை நம்மால் ரசிக்கமுடியாது! அவரே “என் படங்களை நானே பார்க்கமுடியாதபடி சோகமயமாய் இருக்கின்றன!” என்று சமீபத்தில் சொன்னார்.
(more…)

ஜூலை 15, 2007

சிவாஜியை விஞ்சிய படம்!

Filed under: ஆங்கிலத் திரைப்படம் — பாலாஜி @ 8:06 பிப
Tags: ,

சிவாஜிதான் கடந்த பல வருடங்களில் நான் பார்த்த மிகமட்டமான படமென்று நினைத்திருந்தேன். அந்த ‘சாதனை’ ஒரே வாரத்தில் முறிந்துவிட்டது. இந்த Transformers ஐவிட மட்டமான படத்தை ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அண்டம் அழியும்வரை யாராலும் உருவாக்கமுடியாது. மேகன் பாக்ஸை மட்டும் கொஞ்சம் ரசிக்கலாம்!
(more…)

ஜூலை 5, 2007

சீனி கம், தரம் அதிகம்!

நேற்று சீனி கம் (சக்கரை குறைவு) பார்த்தேன். நல்ல படம். அமிதாப் பச்சனை வெறுக்கும் நான் கூட படத்தை ரசிக்க முடிந்தது. ரஜினி, அமிதாப், சிரஞ்சீவி போன்ற தாத்தாக்கள், இந்த மாதிரி படங்களில் மட்டும் நடித்தால் புண்ணியமாய்ப் போகும். தபுவைப் பற்றி சொல்லத் தேவையில்லை. கலக்கியிருக்கிறார்.இளையராஜாவின் நான்கு பழைய பாடல்களை குறிப்பாக ‘மன்றம் வந்த தென்றலை’ வேறொரு காட்சியில் பார்ப்பது சுகம். ராஜா பாடாவதி படங்களுக்கு பாடாவதி இசையமைத்து மேலும் பெயரைக் கெடுத்துக்கொள்ளாமல் இதே பாணியை பின்பற்றலாம். புதிய இயக்குனர் பாலகிருட்டினன் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

சுதந்திர தின ‘டபுள் தமாக்காவாக’ ராட்டடூயீ என்கிற இயக்கமூட்டிய படத்தையும் பார்த்தேன். சுமாரான படம்தான்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.