திரை விமர்சனம்

ஓகஸ்ட் 28, 2007

இத்தாலிய இம்சைகள்!

உலக சினிமா ரசிகர்களிடையே இத்தாலிய திரைப்படங்களுக்கு நல்ல பெயர் இருக்கிறது. அது ஏனென்று எனக்கு சற்றும் விளங்கவில்லை! சரி 1950-60 களில் அவர்கள் பல புகழ்பெற்ற படங்களை எடுத்திருக்கலாம். அதற்கென்ன இப்போ? அடுத்த 50 ஆண்டுகளில் அவர்கள் நல்ல படங்கள் எடுத்ததாகக் தெரியவில்லை.

நான் பார்த்த இத்தாலியப் படங்களில் The Bicycle Thief மட்டும்தான் நல்ல படமென்று நினைக்கிறேன். சமீபத்தில் 8 1/2 பார்த்தேன். சுத்த பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது! Fellini தான் பெரிய இயக்குனராக்கும் என்கிற இருமாப்பில் கண்டதையும் எடுத்து மக்களை பார்க்கவைத்திருக்கிறார்! Cinema Paradiso, Life is Beautiful எல்லாம் கூட நல்ல படங்களில்லை என்று கருதுகிறேன். சும்மா மூன்று மணி நேரத்துக்கு ரசிகர்களின் கழுத்தறுத்து நல்ல பெயர் வாங்கிவிட்டார்கள்!


நான் ஒரு நாட்டின் (மொழியின்) சினிமா தரத்தை மதிப்பிடுவதற்கு சமீபத்திய படங்களைப் பார்ப்பது வழக்கம். அதாவது 1980க்கு பின்னர் நல்ல படங்கள் எடுத்திருந்தால் பாராட்டலாம். அதற்கு முந்தைய படமாக இருந்தால் Casablanca மாதிரி காலத்தை விஞ்சிய படமாக இருக்கவேண்டும். அந்த வகையில் சமீபத்திய இத்தாலியப் படமான Catarina in the Big City பார்த்தேன். சுமார்தான். என்னுடைய கணிப்பின்படி பிரஞ்ச்சு, போலிஷ், ஜெர்மன், ஸ்பானிஷ் மற்றும் இரானிய மொழிப்படங்கள் தற்காலத்தில் சிறப்பாகயிருக்கின்றன.

மேலும், ஞாயிறன்று எனது ‘தெய்வம்!‘ கெய்ஸ்லாவ்ஸ்கியின் No End என்கிற படத்தைப் பார்த்தேன். சுமாரான படம்தான். ஆனால் American Beautyயின் முதல் சில காட்சிகள் இதிலிருந்து தழுவப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். நேற்றிரவு El Bola என்கிற ஸ்பானியப் படம் பார்த்தேன். பார்க்கலாம்!

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: