திரை விமர்சனம்

நவம்பர் 12, 2007

மச்சக்காரன், மலைக்கோட்டை, மருதமலை, வீராப்பு, சபரி, நம்நாடு, சிவி

என்ன தான் உலகத் திரைப்படங்கள் பார்த்தாலும், உள்ளூர் நிலவரம் தெரிந்து கொள்ளும் ஆவல் அல்லது விதி நேரம் போகா கொடுமை எல்லாம் சேர்ந்து, மட்டமான படம் என்று தெரிந்தே சில படங்களைப் பார்த்துத் தொலைப்பதுண்டு. அந்த வரிசையில், சில படங்கள் குறித்த விமர்சனங்கள். 4, 5 படங்களுக்குச் சேர்த்து விமர்சனங்கள் எழுதுவது இப்ப ஒரு புதுப் போக்கு என்றும் எங்கோ படித்த நினைவு.

மச்சக்காரன் – Bore. ஜீவன், தூங்கி வழியாமல் துள்ளலாய் நடித்தால் தேவலாம். யுவன் சங்கர் ராஜாவுக்கு என்ன பணக் கஷ்டமோ? வருகிற படத்துக்கு எல்லாம் ஒப்பேத்தி இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.

மலைக்கோட்டை – அரைச்ச மாவு (அல்லது) சண்டைக்கோழி / திமிரு – பாகம் 2. விசால் வேறு மாதிரி நகைச்சுவை முயல்வது நலம்.

மருதமலை – ஐயோ பாவம், அர்ஜூன். இயக்குநர் சங்கர் அவரை வைத்து முதல்வன், ஜென்டில்மேன் போல் ஒரு படம் எடுத்துக் கொடுத்தால் புண்ணியமாகப் போகும்.

வீராப்பு – சுந்தர்.சி எப்படி action hero ஆனார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. தொலைக்காட்சி நடிகர் சாயல் தான் நிறைய. கோபிகாவுக்காகப் பார்த்த படம். இன்னும் எத்தனை படங்களில் தான் சின்ன வயசுப் பாசத்தைக் காதலாக்கிச் சொல்வார்களோ சாமீ…

சபரி – நரசிம்மா காலத்தில் இருந்து விஜயகாந்த் படம் என்றால் தவறாமல் அதன் நகைச்சுவைக்காகப் பார்த்து விடுவது. அந்த விதத்தில் எந்த வகையிலும் ஏமாற்றாத படம் 🙂 R.K.செல்வமணி இவரை வைத்து ஒரு படம் எடுத்துத் தர மாட்டாரா என்று தோன்றுகிறது.

நம்நாடு – அரசியல் நுழைவை முன்னிட்டுப் படம் எடுக்கும் சரத்குமார், குறைந்தபட்சம் விஜயகாந்த் போல் எடுத்தால் நகைச்சுவையாவது இருக்கும். உம்மென்ற மூஞ்சியுடன் படம் முழுக்க வருகிறார். கே.எஸ். ரவிக்குமாரை அணுகினால் நலம்.

சிவி – climaxக்கு முன்பிருந்து 20 நிமிடக் காட்சிகளைப் பார்க்கலாம். வித்தியாசமான, சுவாரசியமான புதிர் ஒன்றுக்கு விடை கிடைக்கும். தரனின் இரண்டு முத்தான பாடல்களை வீண்டித்து விட்டார்கள் 😦

1 பின்னூட்டம் »

  1. அடழ

    பின்னூட்டம் by அனாமதேய — ஜூலை 12, 2008 @ 8:27 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: