திரை விமர்சனம்

நவம்பர் 20, 2007

ட்ரான்ஸ்போர்மர்ஸ்

பல்கலைக்கழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நேற்று முடிவடைந்து விட்டதால் ஒரு திரைப்படம் பார்ப்போம் என்று முடிவு செய்தேன். என்ன பார்க்கலாம் என்று நினைத்தபோது, பரீட்சை காரணமாக தியட்டரில் பார்க்க முடியாமல் போன ரஷ் அவர் 3, அல்லது ட்ரான்ஸ்போமர்ஸ் பார்ப்பது என்று முடிவு செய்தேன். ஏற்கனவே எனது உறவுக்காரப் பொடியன் ஒருவன் ட்ரான்ஸ்போர்மர்ஸ் திரைப்படத்தை இணையத்தில் இறக்கி வைத்திருந்தான். எனவே அதைப் பார்ப்பது என்று முடிவுசெய்தேன்.

ஏற்கனவே இதைப்பார்த்த என்னுடைய அனேக நண்பர்களும், அந்தமாதிரிப்படம் மச்சான் கட்டாயம் பார் என்று பரிந்துரைத்திருந்தனர். சிலர் சும்மா மாறி மாறி டப்பு டப்பு என்று சுடுவார்கள் என்று கூறியிருந்தனர். ஆயினும் பெரும்பாலானவர்கள் நல்ல திரைப்படம் என்று சொல்லியதால் துணிந்து பார்க்க முடிவெடுத்தேன். 😆

கட்டார் அமெரிக்கத்தளத்தில் கதை தொடங்குகின்றது. அடையாளம் காணப்படாத ஹெலிக்கொப்டர் ஒன்று அமெரிக்கத் தளத்திற்கு அண்மித்த பகுதியில் வட்டமிட அதை அமெரிக்க வானூர்திகளின் துணையுடன் தரையிறக்குகின்றார்கள். தரையிறங்கி சிறிது நேரத்தில் அந்த ஹெலி ஒரு இராட்சத இரும்பு மனிதனாகி, படைத்தளத்தையே தும்வசம் செய்துவிடுகின்றது. இறுதியாக அமெரிக்க இராணுவ கணனியில் (தரவுத்தளத்தில் – Database) இருந்து எதையோ திருட முயல்கின்றது, ஆயினும் இந்த முயற்சியை அங்கிருந்த ஒரு அதிகாரி இணைப்பைத் துண்டிப்பதன் மூலம் தடுத்துவிடுகின்றார். அட தொடக்கமே இவ்வளவு அட்டகாசமாக இருக்கின்றதே என்று எண்ணியவாறு படத்தை பார்க்கத் தொடங்கினேன்.

படத்தில் நல்ல இயந்திர மனிதர்களும் (ஓட்டோபொட்ஸ்), கெட்ட இயந்திர மனிதர்களும் (டிசெப்டிகொன்ஸ்) ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொள்கின்றனர். அவர்களுடைய யுத்தம் பூமியில் நடக்கின்றது. ஏன் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக்கொள்கின்றனர் என்று பார்த்தீர்கள் என்றால் அதற்கான விளக்கமும் தரப்படுகின்றது. ஓல்ஸ்பார்க் எனும் ஒரு பெட்டி போன்ற கனவடிவம் உள்ளது, இதற்கு உயிரூட்டும் தன்மை உள்ளது. சில பல காலங்களுக்கு முன்னர் பூமியை வந்தடைந்து விடுகின்றது. இந்த பொருள் பூமியில் இருப்பதை அறிந்த கெட்ட இயந்திரமனிதனான மெகட்ரோன் அதையடையும் பொருட்டு பூமிக்கு வருகின்றான். வந்து இறங்கும் போது, விபத்துக்குள்ளாகி ஆர்ட்டிக் துருவப்பகுதியில் விழுந்து பனியில் உறைந்து விடுகின்றான். இவனை 1897ல் கப்டன் விட்விக்கி கண்டு கொள்கின்றார். அத்துடன் சில விபத்துகளால் அவர் பைத்தியமாவதுடன், ஓல் ஸ்பார்க் இருக்குமிடம் பற்றிய தகவல் விட்விக்கியின் கண்ணாடியில் பதிவாகி விடுகின்றது. இந்த விட்விக்கியின் பேரன் ஸாம் தான் இந்தக் கதையில் நாயகன். தனது முதலாவது காரை வாங்குவதற்காக இந்தக் கண்ணாடியை இபேயில் ஏலத்தில் விடுகின்றான்.

இணையத்தைத் துளாவும் கெட்ட இயந்திர மனிதர்கள் இவனது இபே பெயர் போன்றவற்றை எடுத்துக்கொண்டு சாமை துரத்தத் தொடங்குகின்றது. இதே வேளை சாமிற்கு அவனது தந்தையார் 4000 டாலருக்கு ஒரு பழைய காரை வாங்கிக்கொடுக்கின்றார். இந்தக் கார் நல்ல இயந்திர மனிதர்களான ஓடோபொட்ஸ் இனத்தைச் சார்ந்தது. பார்வைக்குக் காராகத் தெரிந்தாலும் இதுவும் ஒரு இயந்திர மனிதனே. இந்த இயந்திர மனிதன் நம்ம சாமை கெட்ட இயந்திர மனிதர்களிடம் இருந்து காக்கின்றது. இதே வேளை மேலும் பல நல்ல இயந்திர மனிதர்களும் பூமிக்கு வந்து சேர்கின்றர்.

இறுதியில் நல்ல இயந்திர மனிதர்களா, இல்லை கெட்ட இயந்திர மனிதர்களா வென்றார்கள் என்பதை படத்தில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

நிஜம் எது, கிராபிக்ஸ் எது என்பதை கூறவே முடியாது உள்ளது. சிறப்பு காட்சி அமைப்புகள், கதிரை நுனியில் உட்கார்ந்து பார்க்க வைக்கின்றது. இயந்திர மனிதர்கள் மோதும் கடைசி கிளைமாக்ஸ் சும்மா கலக்கல் போங்க. சும்மா அதிருதுங்க.

பின்வரும் விபரங்களைப் பாருங்கள் இணையத்தில் சுட்டது. இந்த ஒழுங்கில்தான் இந்த இயந்திர மனிதர்கள் உருமாறுவார்கள்.

Autobots (நல்ல இயந்திர மனிதர்கள்): Optimus Prime – Peterbilt Semi Truck. Bumblebee – 1976 Chevrolet Camaro (later reformatted as the 2008-2009 model of the same vehicle). Jazz – Modified Hardtop Pontiac Solstice. Ironhide – GMC Topkick Pickup Truck. Ratchet – Hummer H2 (designed to look like a search and rescue vehicle).

Decepticons(கெட்ட இயந்திர மனிதர்கள்): Megatron – Alien/Cybertronian jet. Starscream – F-22 Raptor Jet. Blackout – MH-53 Pave Low Helicopter. Devastator/Brawl – Modified M1 Abrams Battle Tank. Barricade – Saleen-Modified Ford Mustang Police Cruiser. Frenzy – 2-speaker CD player, mobile phone. Bonecrusher – Buffalo H Mine-Protected Vehicle. Scorponok -Mechanical Scorpion (note: is not seen transforming either into or from mechanical scorpion form in final film).

முதலில் இந்தத் திரைப்படத்தை தயாரிக்கப் பலரும் மறுத்த வேளையில் ஸ் ரீபன் ஸ்பில்பேர்க் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளார். கடைசியில் இந்தத் திரைப்படம் உலகளவில் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்தது. இனிப்பான இன்னுமொரு செய்தி என்னவென்றால் 2009 ஜூன் மாதத்தில் இந்தத் திரைப்படத்தின் அடுத்த பாகம் வெளிவர உள்ளது.

பிறகு என்ன?? இது வரை நீங்கள் பார்க்காவிட்டால்.. அல்லது நீங்கள் ஒரு குளந்தை மனம் கொண்ட பெரியவராக இருந்தால் இந்தத் திரைப்படத்தைப் பார்த்து விடுங்கள். பின்னர் என்னைப் போல பம்பிள்பீயிற்கும் ஒப்டிமஸ் பிரைமிற்கும் விசிறியாகிவிடுவீர்கள்.

விமர்சகர்: ட்ரான்ஸ்போர்மர்ஸ் பற்றிய இன்னொரு விமர்சனம் இங்கே.

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: