திரை விமர்சனம்

நவம்பர் 26, 2007

பொல்லாதவன், ஆமாம்!

அப்பாடா! கடைசியா ஒரு நல்ல தமிழ் படம் பார்த்தாச்சு. ‘பொல்லாதவன்‘ – கலக்கிட்டீங்க வெற்றிமாறன்! தமிழ் சினிமா முன்னேறிட்டு வருது என்று பலரும் சொல்லும்போது, நிஜமா? என்று தோன்றும்.

கடந்த இரண்டு வருடங்களில் நான் பார்த்த தமிழ்ப்படம் 6-7 தான் (?!) இருக்கும். ‘சிவாஜி‘, ‘வேட்டையாடு‘ – கேவலம். ‘மொழி‘, ‘வெயில்’, ‘பச்சைக்கிளி’ – சுமார். ‘இம்சை‘, ‘பட்டியல்‘ – நன்று! மற்றபடி ஊடகங்களிலும், பதிவுகளிலும் பேசப்பட்ட படங்கள் பலவற்றை நான் பார்க்கவில்லை.

கூகுள் வீடியோவில் பார்த்தாலும் திருட்டுதானே என்கிற வருத்தத்தோடுதான் ‘பொல்லாதவன்’ பார்த்தேன். நல்ல நகைச்சுவை, கச்சிதமான பாத்திரங்கள், பிசிரில்லாத நடிப்பு, வசனங்கள், நம்பும்படியான காட்சிகள். இவற்றிற்காகவே இந்தப்படத்தைப் பாராட்டலாம்.

ஆனால் அதற்கும் மேலாக விருவிருப்பான திரைக்கதை, நாயகன், வில்லன் இருவர் பார்வையிலும் வர்ணனை மாறும் உத்தி, செல்வம், அவுட் மாதிரியான பாத்திரங்களையே நமக்குப் பிடித்துவிடும்படியான காட்சிகள், நாயகன் தங்கச்சியை வில்லன் கடத்துவான் என்று நினைக்கும் நம்மை கேலிசெய்யும் இயக்கம்!, ஒரு அடியாளை ‘அடிச்சுடு பிரபு’ என்று நாயகி சொல்லும் ஹைக்கூ! கலக்கியிருக்கிறார்கள்!

பாடல்கள் எல்லாமே தேவையில்லாதவை. அதுவும் வில்லன்கள் ஆடும் ஒரு குத்துப்பாட்டு திருஷ்டிப் பொட்டு. மற்றபடி நான் மிகவும் ரசித்த படம்.

விமர்சகர்: பொல்லாதவன் பற்றிய மற்றொரு விமர்சனம் இங்கே.

3 பின்னூட்டங்கள் »

  1. […] விமர்சகர்: பொல்லாதவன் பற்றிய முந்தைய விமர்சனம் இங்கே! […]

    Pingback by Polladhavan « திரை விமர்சனம் — நவம்பர் 26, 2007 @ 8:57 பிப | மறுமொழி

  2. நண்பர்கள் இந்தப் படத்தைப் பார்கத் சொல்லி பரிந்துரை செய்துள்ளார்கள்.. விரைவில் பார்க்க வேண்டும்! 🙂

    பின்னூட்டம் by mayooresan — திசெம்பர் 5, 2007 @ 11:21 முப | மறுமொழி

  3. http://tamizh2000.blogspot.com/2007/12/blog-post_3738.html

    பின்னூட்டம் by TamilNenjam — திசெம்பர் 7, 2007 @ 12:55 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: