திரை விமர்சனம்

நவம்பர் 27, 2007

சக் தே இந்தியா, அம்முவாகிய நான், நாளைய பொழுது உன்னோடு

சக் தே இந்தியா – நல்ல படம். ஒரு முறை பார்க்கலாம். lagaan அளவுக்கு dramatic elements, விறுவிறுப்பு எதிர்ப்பார்க்க முடியாது. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு, “சாருக் கானுக்கு ஏன் ஜோடி இல்லை”ன்னு என் அக்கா கேட்டாங்க..தமிழ்ப் படங்கள் நம்ம மக்களை ரொம்ப கெடுத்து வைச்சிருக்கு 😦

அம்முவாகிய நான் – ஹ்ம்ம்..இது தான் தமிழ்த் திரையுலகில் நல்ல படம் என்றால், பிறகு மோசமான படங்களைப் பற்றி நினைக்கவே பயமாக இருக்கிறது. இந்தப் படத்தை ஒரு தொலைக்காட்சித் தொடராக எடுத்திருந்தால் ஒப்பேற்றி இருக்கலாம். அவ்வளவு logic ஓட்டைகள், செயற்கைத் தனம், சினிமாத்தனம்.

நாளைய பொழுது உன்னோடு – என்ன காரணத்துக்காக இயக்குநர் பாலா நடிகை கார்த்திகாவை அழைக்கக் கூப்பிட்டார் என்ற ஆர்வத்தால் இந்தப் படத்தை ஓட்டிப் பார்த்தேன். மிகச் சுமாரான படம் தான். ஆனால், ஊதிப் பெரிதாக்கப்படும் பிற படங்களைக் காட்டிலும் இது போன்ற படங்களைப் பார்க்க எரிச்சல் குறைவு தான். இயக்குநர் தன்னால் இயன்ற அளவு முயன்றிருக்கிறாரே என்று விட்டு விடத் தோன்றுகிறது. மற்ற வாரிசு நடிகர்களைக் காட்டிலும் பிரித்வி அடக்கி வாசிக்கிறார். ஆனால், இவர் உள்ளிட்ட எல்லா வாரிசு நடிகர்களையும் பார்க்கையில் அவர்களின் அப்பாக்கள் நினைவில் வந்து படம் பார்க்க விடாமல் செய்கிறார்கள். மொத்தப் படத்தையும் 10 நிமிடத்தில் ஓட்டிப் பார்த்து விட முடிந்தது. ஊகிக்க கூடிய, வழக்கமான காட்சிகள். கதையின் முடிச்சு கடைசி 5 நிமிடத்தில் இருக்கிறது. அதைப் பார்க்கலாம்.

பி.கு – பல படங்களை கலந்து கட்டி ஒரு சில வரிகளில் எழுதுவதற்குப் பொறுக்கவும். பல வரிகளில் எழுதும் அளவுக்கு அவ்வளவு படங்கள் உந்துதல் ஏற்படுத்துவதில்லை. இன்னொன்று, பக்கம் பக்கமாக விமர்சனத்தைக் காட்டிலும் பார்க்கலாமா வேண்டாமாங்கிறதை நச்சுன்னு சொல்லும் சில வரி விமர்சனங்கள் பரவாயில்லைன்னு நினைக்கிறேன்.

3 பின்னூட்டங்கள் »

  1. […] விமர்சகர்: அம்முவாகிய நான் பற்றிய இன்னொரு விமர்சனம் இங்கே. […]

    Pingback by அம்முவாகிய நான் « திரை விமர்சனம் — திசெம்பர் 13, 2007 @ 5:44 பிப | மறுமொழி

  2. […] பதேர் பாஞ்சாலி, Catch me if you can, Munich, Schindler’s List, சக் தே இந்தியா, அம்முவாகிய நான், நாளைய…, […]

    Pingback by பிற தளங்களில் எழுதியவை.. | ரவி — ஜனவரி 10, 2008 @ 9:38 பிப | மறுமொழி

  3. “நாளைய பொழுது உன்னோடு” – this is eXact remake of “Notebook”.

    பின்னூட்டம் by Alagar — செப்ரெம்பர் 3, 2008 @ 9:06 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: