திரை விமர்சனம்

நவம்பர் 28, 2007

ஓம் ஷாந்தி ஓம்!

மறுஜென்மக் கதைக்கு மசாலா அரைத்துச் சேர்த்திருக்கிறார்கள் – மணக்குது!

உபரி நடிகனாகக் காலம் ஓட்டும் ஓம், Dreamy Girl ஷாந்தியைப் பார்த்து ஒருதலைக் காதலிக்க, ஒரு தறுதலை அவளை ஏற்கனவே திருமணம் முடித்திருப்பதால் மறுதலிக்கப் படுகிறான், மேற்படி தறுதலை ஷாந்தியை செட்டிலேயே வைத்து தீக்கிரையாக்க, வாழும்போது சேரமுடியாத சோகத்தைச் சேர்ந்து சாவதன் மூலம் போக்கிக்கொள்கிறான் ஓம். மறுஜென்மத்தில் நடிப்புக் குடும்பப் பாஸ்போர்ட்டோடு பிறந்து சூப்பர்ஸ்டார் ஆகி, பூர்வஜன்ம ஞாபகம் வந்து பழிதீர்க்கிறான்.

கதை இவ்வளவுதான். ஆனால் இதைச் சொல்லியிருக்கும் விதம், நகைச்சுவை, பிரம்மாண்டம்தான் படத்தைக் காப்பாற்றுகிறது.

ஓம் ஷாந்தி ஓம்

” ஓம் பிரகாஷ் மக்கிஜா- இந்தப்பேருக்கு பதிலா ஓம் கபூர். ஓம் கண்ணா ன்னு இருந்திருந்தா நடிகன் ஆயிருப்பே” என்று நண்பன் சொல்வது,

“இவ்ளோ ஓவர் ஆக்டிங் பண்றதுனாலதான் எங்கப்பன் சீக்கிரமா மண்டையப் போட்டுட்டான்” அம்மாவை நக்கலடிப்பது,

“உனக்கு போர் அடிக்கல இல்லை?” என்று போஸ்டரைப் பார்த்துப்பேசுவது.

தீக்கிரையாகும் செட்டில் “பாகோ” என்ற பெரிய வசனத்தை எத்தனை முறை காமெரா முன் சொல்லமுடியுமோ அத்தனைமுறை மகிழ்ச்சியுடன் சொல்வது,

சவுத் இண்டியா சூப்பர் ஸ்டார் பறந்து பறந்து அடிக்கும் காட்சி..

பில்ம்பேர் அவார்டில் ஓம் கபூரின் இருபடங்கள் – இரண்டிலும் ஒரே வசனம் 😉 (படம் பெயர்களும் நல்ல காம்டி – மே பி ஹூ நா, பிர் பி தில் ஹே NRI)

அதே அவார்டுக்கு முன்மொழியப்பட்டு தன்னம்பிக்கையாக எழுந்து பின் சமாளிக்கும் அபிஷேக் பச்சன், (தூம்-5 ஆம்)

சீறிவரும் ஐந்து தோட்டாக்களை ஒன்றாக்கி மாவுபிசைந்து ஒரு பெரிய குண்டாக்கி வெடிக்க வைக்கும் அக்ஷய் குமார் (ரிட்டர்ன் ஆம் கில்லாடி யாம்)

“ஓம் கபூர் ஹூ?” என்று கேட்கும் அமிதாப், “என் பையனுக்குதான் விருது” ராகேஷ் ரோஷன்

நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை.

1970 செட்கள், 30க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்கள் ஒரே பாட்டுக்கு ஆடுவது, 3 முறை தீக்கிரையாகும் ஒரே செட் என பிரம்மாண்டத்துக்கும் பஞ்சம் இல்லை.

ஷாருக் கானுக்கு இந்தப் படம் ஒரு வெகேஷன். ஜாலியாக நடித்திருக்கிறார். கன்னம் புடைக்க “கமீனே துஜே ஜிந்தா நஹி சோடுங்கா”வுக்கு வேலையில்லை, நிறைய செண்டி காட்சிகளும் இல்லை..

தீபிகா படுகோனே ஒரு “ரவுண்டு” நிச்சயமாக வருவார். 70களின் பாந்தமான ( a la Hema Malini) ஸ்டாராகவும், 2007ன் பபிள்கம் ஊதும் பெண்ணாகவும் நல்ல காண்ட்ராஸ்ட் காட்டி இருக்கிறார்..

மத்த டெக்னிகல் விஷயங்களும் ஜாலியான படத்துக்கு ஒத்துப்போகின்றன.

எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஒரு முறை பாருங்க தப்பில்லை.

2 பின்னூட்டங்கள் »

  1. தமிழ் சினிமா பார்த்தவர்களுக்கு இந்தத் திரைப்படம் அவ்வளவாகத் திருப்தி தராது!!!! 😦

    பின்னூட்டம் by mayooresan — திசெம்பர் 5, 2007 @ 11:19 முப | மறுமொழி

  2. கடைசியாகப் பாத்துட்டமில்ல!!!
    மெயின் நகர் கஹூ.. பாடல் நன்றாகப் பிடித்திருந்தது!

    பின்னூட்டம் by mayooresan — பிப்ரவரி 11, 2008 @ 7:54 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: