திரை விமர்சனம்

திசெம்பர் 5, 2007

தி டிப்பார்டட்

டூம், போக்கிரி போன்ற சாதாரண இந்திய பொலீஸ், திருடன் திரைப்படங்களைப் பார்த்து புளித்துப் போனவர்கள் மாற்றாக இந்தத் திரைப்படம் த டிப்பார்ட்டட் ஐப் பார்க்கலாம். நான்கு ஒஸ்கார் விருதுகளைத் தட்டிய திரைப்படம் என்பதால் சுவாரசியத்துக்கு குறைவிருக்கும் என்று சந்தேகப் படத்தேவையில்லை. ஆஸ்காரிற்கு அப்பால் சுமார் 40 விருதுகளை இந்தத் திரைப்படம் அள்ளியுள்ளது.

உண்மையில் இந்தத் திரைப்படம் ஒரு ஹாங் ஹாங் திரைப்படத்தின் (WuJianDao – Internal Affair) மீளாக்கமாகும். ஆயினும் அத் திரைப்படத்தை விட இது சிறப்பாக இயக்கப்பட்டுள்ளதாக ஹாலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திரைப்படத்தின் நாயகன் நான் அறிமுகப் படுத்தத் தேவையில்லாதவர். அவர்தான் டைட்டானிக் நாயகன் லியனார்டோ டிக்காப்பிரியோ. படிப் படியாக உயர்ந்து நடிப்பில் தடம் பதித்து வருகின்றார் டிக்காப்பிரியோ.


பாஸ்டன் நகரத்தில் ஐரிஷ் ரவுடிக்கும்பலிற்கு பொலீசார் வலை வரிப்பதுதான் இந்தக் கதை. இதில் நாயகன் (Billy Costigan) திருட்டுக்கும்பலினுள் தானும் ஒரு திருடன் போல பாவனை செய்துகொண்டு உள்நுழைகின்றார். மற்றப் படங்கள் போலல்லாமல் இங்கு உள்நுழையும் டிக்காப்பிரியோ விருப்பம் இல்லாமலே இந்த பணியை ஏற்றுக் கொள்கின்றார். அவர் அடையும் மனக் குழப்பங்கள், வேதனைகள் என்பவற்றையும் திரைப்படத்தில் உள்ளடக்க முயன்றுள்ளனர்.

டிக்காப்பரியோ போலவே திருட்டுக் கும்பலும் தன்னுடைய நபர் (Colin Sullivan) ஒருவரை பொலீஸ் பிரிவினுள் வைத்திருக்கின்றது. பொலீஸ் திணைக்களத்திற்குள்ளேயே திருட்டுக் கும்பலுடன் பணி புரிவது யார் என்று தெரியாவிட்டாலும் இரண்டு அதிகாரிகளுக்கு டிக்காப்பிரியோதான் அந்த பொலீஸ் காரன் என்பது தெரியும். இந்த விடயத்தை தானும் அறிந்துகொள்ள சுலைவனும் முயல்கின்றான்.

யார் யாரை வென்றார்கள் திருட்டுக் கும்பல் ஒழிக்கப்பட்டதா இல்லையா என்பது மீதிக் கதை. கடைசி சில நிமிடங்கள் எதிர் பாராத திடீர் டுமீல் கள் நிறைந்து இருக்கின்றது. அத்துடன் திரைப்படங்களுக்கு மிக முக்கிய பகுதியான ஒரு மெல்லிய குழப்பமான காதலும் இழையோடுகின்றது.

படத்தில் சில காட்சிகள் ஏன் என்றே புரியவில்லை. உதாரணமாக படத்தில் வில்லன் பெரும் சர்வதேசப் புகழ் கடத்தல் காரன் என்றால் எதற்காக உள்ளூர் கடைகளில் சென்று பணம் வசூலித்துக்கொண்டு திரிகின்றான்?. அத்துடன் பில்லி காஸ்டிகனை (டிக்காப்பிரியோ) இலகுவாக நம்பி குழுவினுள் ஏற்று விடுவதாகக் காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இத்திரைப்படத்தில் Goodfellas என்ற திரைப்படத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் பேசிக்கொள்கின்றார்கள். திரைக்கதை வசனம் எழுதியவர் தான் சீனப் படத்தைப் பார்க்கவே இல்லை என்று மார்தட்டிக் கொண்டாலும். இரண்டு படங்களையும் பார்த்தவர்கள் திரைக் கதை வசனம் சீனத் திரைப்படத்தை ஒத்து இருப்பதாகவே கூறியுள்ளனர்.

படம் மிக வன்முறை நிறைந்தது என்பதுடன் வார்த்தைப் பிரையோகங்கள் மிக மிக மோசமாக இருக்கின்றது (F*** என்பதை நிமடத்திற்கு ஒரு தடவை சொல்வது திரைப்படத்தை இரசிக்கச்செய்வதற்குப் பதிலாக வெறுப்பேற்றுகின்றது). ஆகவே குழந்தைகளுடன் உட்கார்ந்து பார்க்கக்கூடிய படம் இல்லை.

தூக்கம் வராத நேரத்தை ஏதாவது பார்த்து கழிக்க நினைத்தால் இந்தத் திரைப்படம் நல்ல ஒரு தெரிவு!!!!

2 பின்னூட்டங்கள் »

  1. மார்டின் ஸ்கார்ஸசியின் பல படங்கள் பார்க்கவேண்டியவைதான்.

    பின்னூட்டம் by பாலாஜி — திசெம்பர் 5, 2007 @ 5:47 பிப | மறுமொழி

  2. நான் டிக்காப்பிரியோவின் பரம இரசிகன்! 🙂

    பின்னூட்டம் by mayooresan — திசெம்பர் 6, 2007 @ 9:08 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: