திரை விமர்சனம்

திசெம்பர் 13, 2007

ஆத்தா! நான் சிவாஜி பாத்துட்டேன்!

எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருக்க தியேட்டர். டவுனுக்குள்ள ‘ஆடி அடங்குன’ படங்கள் மட்டும் வரும். தியேட்டரின் பார்ட்னர் கொஞ்சம் தோஸ்து. என்ன அந்தப் பக்கமே வரமாட்டேங்குறீங்க அப்டின்னாரு ஒரு தடவை. சிவாஜி வரட்டும்; வந்துருவோம் அப்டின்னேன். இந்த வாரம் போஸ்டர் பார்த்ததும் வார்த்தை தவறக்கூடாதேன்னு ஒரு நினப்புல தங்கமணியை வேண்டி ஒருவழியா சம்மதிக்க வச்சி வீட்ல இருந்து நாலுபேரா சினிமாவுக்குப் போய் பால்கனி டிக்கெட் வாங்கிட்டு போய் உட்கார்ந்தோம்.

அடுத்த பத்தியை நூத்துக் கணக்கில் காசு கொடுத்து போன மகராசங்களோ, வெள்ளி / டாலர் அப்டின்னு கொட்டிக் குடுத்து படம் பார்த்த பெரிய தனக்காரங்களோ படிக்காதீங்க; படிச்சா அல்சர் வரலாம்.

விஷயம் என்னன்னா, நமக்காக மட்டுமே படம் போட்டது மாதிரி நாங்க நாலுபேரு, இன்னொரு தம்பதிகள், அப்புறம் தனியா ஒருத்தர் ஆக நாங்க ஏழே ஏழுபேரு மட்டும் உக்காந்திருந்தோம். நான் மட்டும் 4 சீட் எடுத்துக்கிட்டேன்.- உக்கார ஒண்ணு; வலது கைக்கு ஒண்ணு; இடதுக்கு ஒண்ணு, காலுக்கு ஒண்ணு அப்டின்னு. கீழே ஒரு 50 பேரு இருந்திருப்பாங்க. நாங்க போன பால்கனி டிக்கட் எவ்வளவு தெரியுமா? பதினஞ்சு ரூபாயாக்கும் ! சும்மா சொல்லக் கூடாதுங்க .. எனக்கு செம ஃபீலிங் – எங்க 7 பேத்துக்காகவே போட்ட ப்ரி வ்யூ காட்சி மாதிரிதான் ஃபீலிங் இருந்தது.
படத்தில பிடிச்ச விஷயங்கள்:

* ஒரு விசயம் புரிஞ்சி போச்சி; அமெரிக்காவில இருக்கிற நம்ம மக்கள் எம்மாம் பெரிய பொய்யைச் சொல்லிக்கிட்டு இங்கன கிடக்குற எங்கள மாதிரி சொந்தக்கார மக்கள ஏமாத்திக்கிட்டு இருக்காங்கன்னு புரிஞ்சி போச்சு. கதாநாயகன் அப்டின்னா கொஞ்சம் ஏத்திதான் நாம சொல்லுவோம். அவர் படிச்சார்னா ஸ்டேட் பர்ஸ்ட்தான் வாங்குவாரு. ஓடுனாருன்னா அதிலயும் மொதல்ல வருவாரு. அப்டியே தோத்துப் போய்ட்டா கடைசியா கதாநாயகிக்காகவே தோத்திருப்பாருன்னு தெரிய வரும். அதனால ரஜினி 20 வருஷத்தில 200 கோடி சம்பாதிச்சார்னா, என்ன ஒரு குறைஞ்ச கணக்குப் போட்டாலும் …
அவரு வருஷத்துக்கு 10 கோடி சம்பாதிச்சிருக்காரா. அதில 10% வச்சுக்குவோம். அப்டி கொறச்சி வச்சிக்கிட்டாலும் அமெரிக்காவில பொட்டி தட்ற நம்ம மக்கள் வருஷத்துக்கு ஒரு கோடிக்கு மேல சம்பாதிச்சி, ஒரு கோடி ரூபாய் மிச்சம் பார்க்கிறாங்க அப்டின்ற உண்மை எங்களுக்கெல்லாம் புரிஞ்சி போச்சி. கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கி அப்டின்றது மாதிரி எங்க டாக்டர் ஷங்கர் (அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாச்சில்ல?)உண்மையை காண்பிச்சிட்டார். இனிமயாவது பொட்டி தட்ற கூட்டம் உண்மையா அவ்வளவு பணத்தை ப்ளாக்கில வச்சிக்கிட்டு இங்க பெத்தவங்க கிட்ட மத்தவங்க கிட்ட சொல்ற பொய்யை சொல்லாம இருங்க; சரியா?

* ஏழைக் குடும்பத்தில இங்கன நம்ம ஊர்க்காட்டில பொறந்தவரு அமெரிக்கா போயி (எப்போ போயிருப்பார்- ஒரு 25 வயசில?) 20 வருஷம் உழைச்சி 200 கோடி சம்பாரிச்சி மறுபடியும் ஒரு 30 வயசுக்கார ப்ரம்மச்சாரியாவே வர்ராரு. நல்ல திரைக்கதை. சுஜாதான்னா சும்மாவா?

* அட அவரு வயசுதான் அப்டின்னா, அவரு “டேய் மாமா”ன்னு கூப்பிடுறாரே அவரு எப்படி இவரவிட இளமையா இருக்காருன்னு பாத்தா, அது ரஜினியோட தாத்தா பண்ணின “தப்பு”. அதுக்கு யாரு என்ன பண்ணமுடியும்? ஆனாலும் ‘டேய்! மாமா” அப்டின்றது ரொம்ப நல்லா இருக்கு!

* ஒரு ரூபாயை வச்சி 100 கோடியை அலேக்கா ஆதிட்ட இருந்து தட்டிக்கிறாரா .. நல்லா இருக்கு. ஆனா 100 கோடியை வாங்க மாமாவோடு ஆட்டோவில தனியா வந்திர்ராரு. அவ்ளோ தில்லுங்க. ஆனா ஏறக்குறைய நூறு ஆளோடு ஆதி இறங்குனதும் சரி, நம்ம கதா நாயகரு ஏதாவது புத்திசாலித்தனமா பண்ணி தப்பிச்சி ஓடிருவாரு அப்டின்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன். ஒத்தையா நின்னு அத்தனை பேரையும் துவம்சம் பண்ணுவாருங்க அப்போ ரொம்பவே ஃபீல் ஆயிட்டேன். என்னையறியாம விசில் அடிச்சிட்டேன்னா பாருங்களேன். தங்கமணி இதைத் தலைப்புச் செய்தியாக்கி ஊரு உலகத்துக்கே தம்பட்டம் அடிச்சிட்டாங்க. கோபால் பல்பொடிக்குக் சொல்றாப்ல, மதுரை, சென்னை, மும்பாய், பெங்களூரு, கல்ஃப், அமெரிக்கா அப்டின்னு எல்லா இடத்துக்கும் விசில் செய்தியை ரெண்டே நாள்ல பரப்பிட்டாங்கன்னா பாத்துக்கங்களேன்.

* எனக்கு ரொம்பவே பிடிச்ச directorial touch என்னன்னா, ஜாதகம் பற்றிய விசயம்தான். நீங்க ஜாதகம் நம்புற ஆளா – சரி, எடுத்துக்கங்க அப்டின்னு ரஜினி சாகுறது மாதிரி காண்பிச்சிர்ராங்க. அதென்ன, ஜாதகம் எல்லாம் சும்மா டுபாக்கூர் அப்டின்ற ஆளா நீங்க – சரி, எடுத்துக்கங்க அப்டின்னு ரஜினியை உயிரோடு கொண்டு வந்திர்ராங்க. என்ன ஆளுங்க இந்த டாக்டர் ஷங்கரும் சுஜாதாவும். பின்னிட்டாங்க இந்த விஷயத்தில; அப்டியே நெக்குருகிப் போய்ட்டேன். பாப்பையா பட்டிமன்ற தீர்ப்பு மாதிரி இல்லீங்களா ?!

* பாப்பையான்ன உடனே அவரு ஞாபகத்துக்கு வந்திர்ரார். பட்டிமன்ற தரத்தைத் தாழ்த்திய பெருமை எப்போதுமே அவருக்குண்டு. இப்போ he has added another feather in his cap. நல்லா இருக்கு அவரு ரோல். அட, ஒரு ரோல்மாடல்னே வச்சிக்கலாமே, இல்லீங்களா?

* எம்.ஜி.ஆர். ரோல்ல தலைவரு வருவாரில்ல; அப்ப அவரு மேனரிசமா தலையைத் தட்டுவாரு; தபேலாவோ மிருதங்கமோ வாசிச்ச சத்தம் வரும். அதுவும் ரொம்ப பிடிச்சிது. நானும் என் வழுக்கையைத் தட்டிப் பார்த்தேன்; ஆனால் சத்தம் வரலை. இங்கதான் ஷங்கர்-சுஜாதா செய்த சூட்சுமம் புரிஞ்சிது. உள்ள ‘காலி’யா இருந்தாதான் சத்தம் வரும்; அப்டின்னா மேல்மாடி காலி அப்டின்றதை சிம்பாலிக்கா காமிச்சிருக்காங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனால் யாரோட மேல்மாடின்னுதான் தெரியலை.

* அப்புறம், லிவிங்ஸ்டனின் லக, லக (இது நிஜமாகவே) ரொம்பவே பிடிச்சிதுங்க.
பி.கு.

மக்கா ஒண்ணு சொல்ல மறந்து போச்சே!
// “பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியாகதான் வரும்”// இந்த வசனம் வரும்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனால் நான் பார்த்தப்போ “சிங்கம் தனியாகதான் வரும்” அப்டின்றதைக் காணோமே; பன்றி மட்டும்தான் வந்திச்சி.. ! தூக்கிட்டாங்களா? ஒருவேளை சுஜாதாவின் அறிவியல் ஒட்டையைச் சரி பண்றதுக்காக தூக்கிட்டாங்களோ?

இப்பதிவு என் பதிவில் இங்கே.

3 பின்னூட்டங்கள் »

  1. உங்களுக்கு ஒரு படத்தை விமர்சனம் பண்ற அருகதையே இல்லை! நீ எல்லாம் எதுக்குதான் விமர்சனம் பன்றியோ எனக்கு தெரிய வில்லை, அட போயி பண்ணி மேய்க்கும் வேலை இருந்த அதாவது ஒழுங்கா செய் போ!

    பின்னூட்டம் by savareesan — திசெம்பர் 27, 2011 @ 10:10 முப | மறுமொழி

  2. poda thevidia paiya

    பின்னூட்டம் by karthi — மே 26, 2012 @ 5:33 முப | மறுமொழி

  3. hello karthik nee yaarai sollurennu therinjukkulama..

    பின்னூட்டம் by Sabari — மே 28, 2012 @ 12:41 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: