திரை விமர்சனம்

திசெம்பர் 13, 2007

300 திரைவிமர்சனம்

300 திரைப்படத்துக்கான விமர்சனத்தை வாசிக்க முன்னர் ரெயிலரை ஒரு தடவை பாருங்கள். ரெயிலரைப் பார்த்தால் தெரியும் படம் எவ்வளவு அகோரமாகன சண்டைக் காட்சிகள் நிறைந்தது என்பது.

ஒரு நாள் ஸ்பாட்டா வீரர்களின் நகருக்கு வரும் பாரசீகச் செய்தித் தூதுவன் ஸ்பாட்டாவைச் சரணடையுமாறு வேண்டுகின்றான். இதனால் ஆத்திரம் கொள்ளும் ஸ்பாட்டா அரசன் செய்திகொண்டு வந்த தூதுவர்களை கொலை செய்வதுடன் யுத்தத்திற்குத் தயாராகின்றான்.

ஸ்பாட்டாக்கள் என்பவர்கள் பிறவியிலேயே வீரர்கள், யுத்தத்திற்காகப் பயிற்றுவிக்கப்ட்டவர்கள். இரக்கம், மரணம் பற்றியெல்லாம் அக்கறைப்படாதவர்கள். சிறுவயதில் இருந்தே இதற்கான பயிற்சி இவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

யுத்தத்திற்குச் செல்ல முதல் அரசன் கெட்ட சக்திகளை பிரார்த்தித்து அவர்களின் அனுமதியுடனேயே யுத்தத்திற்குச் செல்ல வேண்டும் ஸ்பாட்டாக்களின் பாரம்பரியம். மன்னனால் கூட அதை மீற முடியாது. அவர்களிடம் அரசன் திட்டத்தை விளக்குகின்றான். ஆனாலும் அந்த மத குருமார்கள் ஒராக்கிள் எனும் பெண்ணிடம் கேட்க வேண்டும் என்கின்றனர். ஒராக்கிள் என்ற பெயரில் நகரில் இருக்கும் அழகான பெண்ணை இந்த குருமார்கள் பெற்றுவிடுவர். அவளின் அழகே அவளுக்கு சாபமாகும். இந்த மத குருமார் பாரசீகத்திடம் பணம் வாங்கிக்கொண்டு சண்டைக்குப் போக ஒராக்கிள் அனுமதிக்கவில்லை என்று கூறிவிடுகின்றனர்.

இதனால் மன்னன் தன் படையை யுத்தத்திற்கு வழிநடத்திச் செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. இதன்போது மன்னன் ஒரு மாற்றுவழியையும் கண்டுகொள்கின்றான்.

ஒரு நாள் திடீரென்று தேர்தெடுத்த 300 வீரருடன் ஸ்பாட்டா அரசன் பாரசீகப் படையை எதிர்க்கச் செல்கின்றான். நகர நிர்வாகத்திற்கு அவர்கள் தன் தனிப்பட்ட பாதுகாவலர்கள் என்றும் தான் வடக்கு நோக்கிச் செல்வதாகவும் கூறிவிட்டு நகர்கின்றான். பாரசீகப் படையோ ஒரு மில்லியன் எண்ணிக்கையில் இருக்கும் போது இவர்களின் படை வெறும் 300 வீரர்களுடன் நகர்கின்றது.

ஒரு கணவாய் வாயிலில் வைத்து பாரசீகப் படையை கிரேக்கத்தினுள் நுழையவிடாமல் ஸ்பாட்டா படையும், உதவிக்குச் சேர்ந்த வேறு நகரப் படையொன்றும் எதிர்க்கின்றன. அதாவது இரண்டு மலைகளுக்கிடையான பகுதியூடாகவே பாரசீகப் படைகள் கிரேக்கத்திற்குள் நுழைய வேண்டும் ஆனாலும் இந்த மலையிடைவெளியினுள் காத்திருக்கும் ஸ்பாட்டா அந்த குறைந்த இடைவெளியில் பாரசீகப் படைகளை வேட்டையாடுகின்றன. இடைவெளியினுள் அதிகளவு படை ஒரேதடவையில் நுழைய முடியாது என்பது ஸ்பாட்டாக்களுக்கு சார்பான புள்ளி.

சண்டைக் காட்சியில் எது கிராபிக்ஸ், எது நிஜம் என்று தெரியாத அளவிற்குப் படமாக்கியுள்ளார்கள். ஸ்பாட்டாக்கள் சுழன்று சுழன்று பாரசீகப் படைகளை வேட்டையாடும் காட்சி கதிரை நுனியில் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது. மயிர்கூச்செறியும் சண்டைக் காட்சிகள் நிறைந்தது.

பாரசீகத்தில் கிட்டத்தட்ட ஆசியாவின் விதம் விதமான பல பல படையணிகள் எல்லாம் வருகின்றன. ஆனாலும் ஸ்பாட்டாக்கள் அனைத்தையும் தீரத்துடனும், விவேகத்துடனும் எதிர்கொள்கின்றனர். யானை, காண்டாமிருகம், குதிரை, காலாட்படை அனைத்தையும் எதிர்கொள்கின்றனர். இவற்றைவிட பாரசீகத்தின் சிறப்புப் படையான மரணமற்றவர்கள் எனும் படையுடனும் ஸ்பாட்டாக்கள் மோதுகின்றனர். இதில் மரணமற்றவர்கள் எனும் பெயரை ஸ்பாட்டாக்கள் மாற்றிக்காட்டுகின்றனர். இரவில் மங்கலான ஒளியில் இந்த சண்டைக் காட்சி நடக்கும். அருமை.. அருமை…!!!

மாட்ரிக்ஸ் பட அமைப்பு இங்கேயும் பிரதிபலிக்கின்றது. உதாரணமாக ஸ்பாட்டா கப்டனின் மகனும் இன்னொரு ஸ்பாட்டா வீரரும் சேர்ந்து எண்ணற்ற பாரசீகப் படைகளை அடித்துச் சாய்ப்பது அருமையான ஒரு சண்டைக் காட்சி. வன்முறை நிறைந்திருக்கின்றது என்பதில் மறு பேச்சுக்கிடமில்லை. ஆனாலும் இப்படியான ஒருதிரைப்படத்திற்கு வன்முறை அவசியமாகச் சேர்க்கவேண்டும்.

பாரசீகப் படையின் முன்னேற்ற வேகத்தை குறைக்கும் வேளையில் கிரேக்கம் ஒன்று சேர்ந்து தம் உட்பகைகளை மறந்து உதவிக்கு வரும் என்பதே அரசனின் எதிர்பார்ப்பு. அரசனின் எதிர்பார்ப்பு நிறைவேறியதா. போரிடச் சென்ற 300 ஸ்பாட்டாக்களில் எத்தனை பேர் உயிர் தப்பினார்கள் என்பது மிகுதிக்கதை.

மீண்டும் முக்கியமான விடயம்.. குளந்தைகளுக்கு ஏற்றபடம் இதுவல்ல. விரும்பியனால் வயது வந்தவர்கள் பார்க்கவலாம் சில காட்சிகள் வயது வந்தவர்களுக்கு மட்டும் ஏற்றது. அதைவிட இப்படியான வன்முறை நிறைந்த படங்களை சிறுவர்களைப் பார்க்க அனுமதிப்பது அவ்வளவு சிறந்ததில்லை.

நேரம் போகாமல் அவஸ்தைப் படுகின்றீர்கள். அல்லது வார இறுதியைக் கழிக்க நல்ல படம் ஒன்று தேடுகின்றீர்கள் என்றால் இந்தப் படத்தை எடுத்துப் பாருங்கள். நண்பர்களோடு சேர்ந்து பார்த்து இரசிக்க நல்ல படம், கவனிக்க குடும்பத்தோடு பார்ப்பதைவிட நண்பர்களோடு சேர்ந்து இரசிக்க நல்லபடம். இப்படியான வன்முறை நிறைந்த படங்களை பெண்கள் இரசிக்கமாட்டார்கள் என்பது நான் சொல்லியா தெரியவேணும். ;)

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: