திரை விமர்சனம்

திசெம்பர் 19, 2007

கல்லூரி – எங்கே என் முத்து?

கல்லூரி திரைப்படம் பார்த்தவர்கள் கோகிலவாணி, காயத்ரி மற்றும் ஹேமலதா பற்றி நினைத்துப் பார்ப்பார்கள். எனக்கு என் நன்பன் முத்துகணேஷ் நினைவுக்கு வந்தான். தாயில்லா பிள்ளை, தோல் பதனிடும் சாலையிலும், நிலத்திலும் உழைத்து மகனை பள்ளிக்கு அனுப்பிய தந்தை, சிறு வயதிலேயே மணம் செயது கொடுக்கப்பட்ட தங்கை, அக்காவாவின் வயதேயுடைய பாசமுள்ள மாற்றான்தாய்.

படத்தில் வரும் முத்து என்ன ஆனானென்று தெரியவில்லை. என் முத்து எட்டாவது படிக்கும்போது வீட்டைவிட்டு ஓடிவிட்டான். அவனை பள்ளிக்கு மீட்டுவர நான் போதுமான அளவு முயற்சிக்கவில்லை என்று இப்போது வருந்துகிறேன்.

ஓ, விமர்சனமா? தமன்னா கபளீகரமாக (Gorgeous?!) இருக்கிறார். புதுமுகங்கள் நிறைவாகச் செய்திருக்கிறார்கள். காட்சிகள், பாத்திரங்களில் யதார்த்தம் மேலிடுகிறது. Shoutcastஇல் நான் ரசிக்கும் ‘ஜுன் ஜுலை’ பாட்டு இப்படத்தில் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ‘நீங்க சொல்லுங்க …, ஏன் …’ மாதிரி நகைச்சுவைகளை எப்படி ரசி(சகி)ப்பதென்று தெரியவில்லை. குருநாதரைப் போலவே பாலாஜி சக்திவேலிடமும் சரக்கு குறைவுதான் போலிருக்கிறது. படம்: பார்க்கலாம்.

இந்த வெற்று விமர்சனம் முதலில் இங்கு பதியப்பட்டது. உருப்படியான வேறொரு விமர்சனம் இங்கே.

1 பின்னூட்டம் »

  1. gorgeous = கபளீகரம் !!! எங்க பிடிக்கிறீங்க இந்த மாதிரிச் சொற்களை 😉 நச்சுன்னு இருக்கார், கும்முன்னு இருக்கார், அம்சமா இருக்கார், அழகா இருக்கார், களையா இருக்கார், எடுப்பா இருக்கார், திம்சுன்னு இருக்கார் – இந்த எல்லா இருக்காரையும் சேர்த்துப் போட்டா gorgeous வருமா 🙂

    பின்னூட்டம் by ரவிசங்கர் — திசெம்பர் 19, 2007 @ 8:53 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: