திரை விமர்சனம்

திசெம்பர் 19, 2007

பில்லா

ரசினி நடித்த பில்லா பார்த்தேனா தெரியாது. நினைவில் இல்லை. போன ஆண்டு வந்த சாருக் கானின் டான் பார்த்திருக்கேன். தமிழ் பில்லா 2007ல், சாருக் கானின் டானில் உள்ள ஐந்தில் ஒரு பங்கு விறுவிறுப்பு, தயாரிப்புத் தரம் கூட இல்லை

கடத்தல்கார அசித்தின் அறிமுகம் சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. எங்க விசயகாந்த் படம் மாதிரி நகைச்சுவையா இருக்குமோன்னு நினைக்கத் தொடங்கும்போது கடத்தல்கார அசித் செத்துப் போறார். அப்புறம் வேலு வந்த பிறகு பரவாயில்லாம போகுது.

படத்தில் casting படு சொதப்பல். பிரபுவைப் பார்த்தா சிரிப்பு தான் வருது. ரகுமானை எல்லாம் ஒரு villain நடிகரா பார்க்க முடியல. நமிதாவும் நயன்தாராவும் தாராளமாக நடிச்சிருக்காங்க ஆனால், அதில் ஒரு grace இல்லை. ஒரு feelingம் வர மாட்டேங்குது. துணிகளைக் குறைப்பது மட்டுமே கவர்ச்சி இல்லை !!

படம் richஆ இருக்கு, hollywood styleல racyஆ இருக்குன்னு சொன்னவங்கள எல்லாம் தேடிக்கிட்டு இருக்கேன். குளிர்க்கண்ணாடி போடுறதும், suit போடுறதும் style தான்..அதுக்குன்னு படம் முழுக்கவா? படம் முழுக்க பார்வையற்றவர்கள் நடிச்ச மாதிரி இருக்கு !!

இந்த மாதிரி கெத்தான வேடத்துக்குத் தமிழ்ல யார் இப்ப பொருந்திப் போவான்னு தோணல..வேணும்னா மணவாடு மகேசு பாபு பொருந்துவார் 🙂

இதை விட விசுணுவர்த்தணின் பட்டியல் படம் பிடிச்சிருந்தது.

வில்லன், வரலாறு படங்களே வெற்றிப் படமா ஓடுனப்ப இந்தப் படம் கண்டிப்பா ஓடும். அசித்தை ஒரு மனிதரா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரை வைச்சு யாராச்சும் நல்ல பொழுதுபோக்கு படமா எடுங்க சாமிகளா!!!

17 பின்னூட்டங்கள் »

 1. >> துணிகளைக் குறைப்பது மட்டுமே கவர்ச்சி இல்லை !!
  >> படம் முழுக்க பார்வையற்றவர்கள் நடிச்ச மாதிரி இருக்கு !!

  🙂

  பின்னூட்டம் by பாலாஜி — திசெம்பர் 19, 2007 @ 11:21 பிப | மறுமொழி

 2. ரவி

  நான் மிகவும் மதிக்கும் தமிழ் வலைப்படிவர்களில் தாங்களும் ஒருவர். இணைய தமிழ் வளர்ச்சிக்கு தங்களிந் முயற்சிகளை நானறிவேன். ஆனால், இந்தப் பதிவு…. இல்லை பில்லா படத்தை விட்டுருங்க. ஏன்னா அந்த படத்தோட சந்தையே வேற. நான் சொல்றது இந்த நடை பற்றி!
  ஏதோ நக்கலுக்குன்னு எழுதின மாதிரி இருக்கு இந்த மொழி! “ரசினி, சாருக், அசித், விசயகாந்த்”னு எல்லாம் மொழி அறிவை வெளிப்படுத்திக்கொண்டு, பிற்பாடு villain, feeling, style, racy, hollywoodனு நேரடி ஆங்கிலம்னு தாவறது சரியாக இல்லை. மேலும இவ்வாறான வடமொழி எழுத்துக்களை தமிழ்படுத்துவது (பெயர் சொற்களை) எந்தளவிற்கு நன்மை பயக்குமெனத் தெரியவில்லை. ஏன்னா அந்த சொற்களை பார்த்தவுடனே நம் கண்ணில் படுவது முன்னால் துருத்திக் கொண்டு நிற்கும் அந்த “தமிழ்படுத்திய” முயற்சி! கலைஞரே ராசாசியை ராஜாஜி என மாற்றிக்கொண்டது வரலாறு (எம்.ஜி.ஆர் என எழுதும்போது ராசாசி என எழுதுவது நியாயமில்லையே என்பது ராஜாஜியின் வாதம்). எனவே தயவு செய்து இது போன்ற அபத்தங்களைத் தவிர்க்கவும்.

  மற்றபடி இந்த வலைப்பதிவு உலக, உள்ளூர் திரைப்படங்கள்னு நல்லாவே இருக்கு. நன்று.

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

  பின்னூட்டம் by venkatramanan — திசெம்பர் 20, 2007 @ 4:35 முப | மறுமொழி

 3. வெங்கட்ரமணன், என்னடா இதை யாரும் கவனிச்சு விமர்சிக்கலையேன்னு பார்த்தேன் 🙂 பொதுவாக இந்தப் பதிவிலும் பிற இடங்களிலும் திரைப்படங்கள் குறித்து என்னுடைய விமர்சனங்கள் ஏதும் “தரம் குறைந்து” எழுதப்பட்டதா நினைச்சீங்கன்னா தயவுசெஞ்சு பொறுத்துக்குங்க. எல்லா இடத்திலயும் seriousஆவே எழுதினா மண்டை காஞ்சிடுது 🙂 அதுக்காக, தெரிஞ்சே இந்தப் பதிவில் முடிஞ்ச அளவு informalஆ எழுதப் பார்க்கிறேன். ஒரு friend கிட்ட படத்தைப் பத்தி நாலு வரில comment சொன்னா எப்படி இருக்குமோ, அந்த நடை தான் இந்தப் பதிவைப் பொறுத்த வரைக்கும்.

  நேற்று வரை நானும் கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தி எழுதினவன் தான். ஆனால், அண்மையில் ஏற்பட்ட சில அனுபவங்கள், “ஏன் கிரந்த எழுத்து தவிர்த்து எழுதக்கூடாது” என்ற கொலைவெறியைக் கிளப்பி விட்டிருக்கிறது 🙂 விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.

  eppadi irukka என்று தமிழ்ச்சொற்களை ஆங்கில எழுத்துக்கள் கொண்டு எழுதுவது, ஃபீலிங், ஃபிரெண்ட் என்று ஆங்கிலச் சொற்களைத் தமிழ் எழுத்துக்கள் கொண்டு எழுதுவது இரண்டுமே எனக்கு ஏற்பில்லாத நடை. அந்த வகையில் தான் பேச்சு வழக்கில் வரும் ஆங்கிலச் சொற்களை ஆங்கில எழுத்துகளிலேயே எழுதி இருப்பது. ஆங்கிலச் சொற்களைத் தமிழ் எழுத்துக்களில் என்ன பாதகம் என்றால், எது தமிழ் எது ஆங்கிலம் என்றே தெரியாத, தமிழ் எழுத்துக்களில் எழுதப்படுவது எல்லாம் தமிழ் என்றே எண்ணும் ஒரு கவலைக்குரிய தலைமுறை வளர்ந்து வருகிறது. ஸ்கூல், ரைஸ் எல்லாம் தமிழ்ச் சொற்கள் என்று எண்ணும் பள்ளிக்குழந்தைகளைப் பார்த்து இருக்கிறேன் 😦 குறைந்தபட்சம் அவர்களுக்காவது இவை ஆங்கிலம் என்று நினைவுபடுத்த உதவும். இயன்ற அளவு தமிங்கிலம் தவிர்த்தல். தேவைப்படும் இடங்களில் அதையும் ஆங்கில எழுத்துக்களிலேயே எழுதுவது என்பதே இப்போதைய என் எழுத்துக் கொள்கை 🙂

  என் மீது நீங்கள் வைத்திருக்கும் கனிவுக்கு மகிழ்கிறேன். பொறுமையாக உங்கள் கருத்தை எடுத்துரைத்ததற்கு நன்றி .

  அன்புடன்
  ரவி

  பின்னூட்டம் by ரவிசங்கர் — திசெம்பர் 20, 2007 @ 3:48 பிப | மறுமொழி

 4. ஹா..ஹா… கடுமையாகக் கடுப்பாக உள்ளதாகத் தெரிகிறது.. ஆளவுடுங்க.. ஜூட்… 🙂

  பின்னூட்டம் by mayooresan — திசெம்பர் 20, 2007 @ 5:02 பிப | மறுமொழி

 5. அந்த த.வி. பக்கத்தை முழுவதுமாகப் படிக்குமளவுக்கு எனக்கு பொறுமையில்லை!

  1. என் பெயரை ‘பாலாஜி’ என்று நான் எழுதினால் மற்றவரும் அவ்வாறே எழுதுவதே எனக்கு கொடுக்கும் மரியாதை. இங்கு (அமெரிக்காவில்) “நீங்கள் உமது பெயரை எப்படி உச்சரிக்கிறீர்கள்?” என்று கேட்டு அவ்வாறே உச்சரிக்க விரும்பும் என் நன்பர்கள், ஆசிரியர்கள், உடன் வேலை செய்வோரின் பண்பு என்னை வியக்கவைக்கிறது. நானும் “பாலா” என்று அழைத்தாலே போதும் என்று சொல்வதுண்டு. என் பெயரை பாலாசி என்று மற்றவர் எழுதினால் நான் வருத்தப்படப் போவதில்லை. அஜித் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியாது!
  2. ஆங்கிலத்தில் என் பெயரை நான் Balaji என்று எழுதினால், இல்லை ‘Baalaajee’ என்று எவரேணும் சொன்னால் எனக்கு எற்படும் amusement தான் பாலாசி என்று எவரேணும் எழுதினாலும் ஏற்படும்.
  3. பாலாசி என்று எழுதிவிட்டு பாலாஜி என்று உச்சரிக்கலாமா? தமிழ் அவ்வாறு எழுதப்படும் மொழி இல்லைதானே? ஆங்கிலத்தில் zihuek என்று எழுதிவிட்டு அதை பாலாஜி என்று உச்சரிக்கச் சொல்லி நான் கேட்கமுடியும். (இப்படி யாரோ பெரிய எழுத்தாளர் சொன்னது ஞாபகம். நான் கண்டுபிடிக்கவில்லை!) தமிழில் அப்படி சொல்லமுடியாது என்று நினைக்கிறேன்.
  4. நாம் பயன்படுத்தும் ஆங்கில சொற்களை ஆங்கிலத்திலேயே எழுதுவது விழிப்புணர்வை உண்டாக்கும் என்பது உண்மையே. நல்ல யோசனை. நானும் செய்ய முயற்சிக்கிறேன்.
  5. ஸ, ஷ, ஜ உள்ளிட்ட ஆறு எழுத்துக்களும் தமிழரின் கண்டுபிடிப்பே. அவற்றின் மீது வெறுப்புணர்வு தேவையில்லை. பிற மொழி சொற்களை (குறிப்பாக ஒருவரின் பெயரை) எழுத இந்த எழுத்துக்களை தாராளமாக பயன்படுத்தலாம்.
  6. முடிந்தவரை தமிழ்ச்சொற்களை பயன்படுத்துவது, பிரபலமான பிறமொழி வார்த்தைகள், பெயர்களை அந்த உச்சரிப்பிலேயே எழுதுவது, நன்றாக தமிழ்வயப்பட்ட சொற்களை (விசயம், சனங்கள்) தமிழ் எழுத்துக்களில் எழுதுவது என்று நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்.

  பின்னூட்டம் by பாலாஜி — திசெம்பர் 20, 2007 @ 6:53 பிப | மறுமொழி

 6. balaji, கிரந்த எழுத்துப் பயன்பாடு குறித்து விரிவாக உரையாட இது இடம் அல்ல. உங்கள் ஒவ்வொரு எண்ணிடப்பட்ட கருத்துக்கும் பதிலளிக்க இயலும் என்றாலும் அவை எல்லாவற்றையும் ஏற்கெனவே த. வி பக்கத்தில் தெரிவித்து இருக்கிறேன். எனவே நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள். ஆனால், அந்த த.வி பக்கத்தில் உரையாடப்பட்டவற்றின் நியாயத்தை ஆங்கிலம் பேசப்படாத ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் உள்ளவர்களால் இன்னும் திறமாகப் புரிந்து கொள்ள முடியும். சில விசயங்கள்:

  1. வேற்று மொழியின் ஒலிகளை எழுதிக் காட்டுவதற்காக புதிய எழுத்துக்களை ஏற்றுப் புழக்கத்தில் வைத்திருக்கிற மொழிகள் எத்தனை? அவை யாவை? அவற்றில் எத்தனை மொழிகள் குறைந்தது ஆயிரம் ஆண்டுப் பழமையாவது கொண்டவை?

  2. கிரந்த எழுத்து அல்லாத தமிழ் எழுத்துக்கள் அத்தனையையும் shift விசை இல்லாமலேயே தமிழ்99 விசைப்பலகையில் எழுத முடிகிறது. அந்த வகையில் கிரந்தம் தவிர்ப்பது வேகமாக எழுதவும் உதவுகிறது 😉

  3. “கிரந்தம் தவிர்ப்பவர்கள் வெறுப்பாளர்கள்; உண்மையிலேயே அவற்றை ஒலிக்க இயலாமல் சிரமப்படுபவர்கள் நாட்டுப்புறத்தான்கள்”. கிரந்தத்துக்குப் பின்னிருக்கும் அரசியல் இங்கு அழகாகப் பல்லிளிக்கிறதே 🙂 ஆக சிரமமாக இருந்தாலும் தனக்கு அன்னியமான மொழியில் ஒலியைக் கற்றுக் கொண்டு பிசகாமல் பயபக்தியோடு உச்சரிப்பவர்கள் கணவான்கள். அப்படித்தானே?

  பின்னூட்டம் by ரவிசங்கர் — திசெம்பர் 20, 2007 @ 9:15 பிப | மறுமொழி

 7. இன்னும் விரிவாக எழுத வேண்டும். http://blog.ravidreams.net பதிவில் விரைவில் இது குறித்தும் தமிழின் நிலை குறித்த இன்னும் சில விசயங்கள் குறித்தும் எழுதுவேன்.

  பின்னூட்டம் by ரவிசங்கர் — திசெம்பர் 20, 2007 @ 9:18 பிப | மறுமொழி

 8. 1. சனங்கள் அம்மணமாகத் திரியும் நாட்டில் கோவனம் கட்டியவன் கிறுக்கன்!
  2. கூழே நல்லாயிருக்கே. எதுக்கு மெனக்கட்டு அறுசுவை உணவு செய்து சாப்பிடுகிறீர்கள்?
  3. கிணற்றுத் தவளைகளுக்கு தற்பெருமையும் தாழ்வு மனப்பான்மையும் சேர்ந்தே இருக்கும்.

  இந்த வாக்கியங்களுக்கும் மேலேயுள்ள விவாதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. 🙂

  பின்னூட்டம் by பாலாஜி — திசெம்பர் 21, 2007 @ 4:53 முப | மறுமொழி

 9. கேட்ட கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் அளிக்கத் தெரியாமல் விதண்டாவாதத்திலிலும் நக்கல் நையாண்டியிலும் ஈடுபடுவோரைப் பார்ப்பது புதிதல்ல..

  இந்த வாக்கியத்துக்கும் மேலேயுள்ள விவாதத்துக்கு தொடர்பு உண்டு 🙂 போதும்..கிரந்த விசயத்தில் இங்கு இடும் கடைசி மறுமொழி இது.

  பின்னூட்டம் by ரவிசங்கர் — திசெம்பர் 21, 2007 @ 2:06 பிப | மறுமொழி

 10. 1. பிற மொழிகளில் செய்யவில்லை (அம்மணம்). அதனால் தமிழிலும் செய்யக்கூடாது (செய்பவன் கிறுக்கன்). பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழன் கண்டுபிடித்த எழுத்துகள் உயர்வானவை. 500 ஆண்டுகளுக்கு முன்போ, இன்றோ புதிய எழுத்துக்களை கண்டுபிடிப்பவன் தமிழ் விரோதி.
  2. shift key எல்லாம் பயன்படுத்தி எதுக்கு மெனக்கிடுகிறீர்கள் (அறுசுவை உணவு). நேரடியா அடிச்சு என்ன வருதோ அதை மட்டும் எழுதுங்க. (கூழ்)
  3. 247 எழுத்துகளை தனது ஒலித் தேவைக்கேற்ப பயன்படுத்தும் தமிழன், இன்னும் சில எழுத்துகளை சேர்த்து மொழியை விரிவாக்கும் போது நாட்டுப்புறத்தான் ஆகிவிடுவான். 1,2,3 என்ற எண்களை தமிழன் ஏற்றுக்கொண்ட போதும், !.,;? உள்ளிட்ட குறிகளை ஏற்றுக்கொண்ட போதும், ணை, லை உள்ளிட்ட எழுத்துக்களை தட்டச்சு செய்வதற்காக மாற்றிக்கொண்டபோதும், 🙂 உள்ளிட்ட நகைக்குறிகளை பயன்படுத்தும் போதும் தமிழ் சாவதில்லை. ஆனால் ஸ், ஷ், ஹ் போன்ற தேவையான ஒலிகளை எழுதுவதற்கு புதியதாக மெய்களைக் கண்டுபிடித்தவன் அரசியல் செய்கிறான்.

  பழமைவாதிகள் உலகில் எப்போதுமே இருந்திருக்கிறார்கள். உலகம் தட்டையானது என்று சாதித்தவர்கள்கூட இருந்திருக்கிறார்கள்.

  பின்னூட்டம் by பாலாஜி — திசெம்பர் 21, 2007 @ 5:35 பிப | மறுமொழி

 11. >> அவற்றை ஒலிக்க இயலாமல் சிரமப்படுபவர்கள் நாட்டுப்புறத்தான்கள்

  ஓ!

  1. நாகம் உஸ், உஸ் என்று ஒலியெழுப்பும்.
  2. பூச்சட்டி புஸ் என்ற ஒலியுடன் நெருப்பைக் கக்கும்.
  3. ஆசிரியர் உஷ் என்ற ஒலியெழுப்பி மாணவர்களை அமைத்திப்படுத்தினார்.
  4. அவர்கள் நகைப்பது ஹாஹா என்று என் காதில் கேட்டது.
  5. ஜல், ஜல் என்று சலங்கை ஒலித்தது.

  இந்த ஒலிகளை அறியாமலிருப்பதற்கும், எழுப்ப முடியாமலிருப்பதற்கும் தமிழன் என்ன செவிடனா ஊமையா?

  பின்னூட்டம் by பாலாஜி — திசெம்பர் 21, 2007 @ 6:03 பிப | மறுமொழி

 12. ok. வெறுப்பாளர்கள் என்ற குற்றச்சாட்டை அடுத்து பழமைவாதிகள் என்ற குற்றச்சாட்டையும் குறித்துக் கொள்கிறேன் 🙂 balaji, புதுகை மாவட்டத்தின் சிற்றூரில் 7 ஆண்டுகள் வளர்ந்தேன், இன்னும் என்னுடைய நிரந்தரக் குடியிருப்பும் உறவுகள் முழுக்கவும் அங்கு தான் என்ற முறையில் தமிழ் மட்டும் அறிந்ந தமிழர்களுக்கு எந்த ஒலி இயல்பாக வரும் என்று பட்டு அறிந்துள்ளேன். நகர்ப்புறங்களை விடுத்து எந்தச் சிற்றூரில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்து அனுபவப்பட்டிருப்பீர்கள் என்று சொன்னால், ஒரு வேளை, என்னுடைய அனுபவம் குறைபாடு உடையது என்றால் திருத்திக் கொள்வேன்.

  பின்னூட்டம் by ரவிசங்கர் — திசெம்பர் 21, 2007 @ 6:54 பிப | மறுமொழி

 13. ரவி,

  நான் சொல்லும் விளக்கத்தை தயவுசெய்து கேளுங்கள். கிரந்த எழுத்துக்கள் பற்றிய உங்கள் கருத்துக்கள் பிறருடைய கருத்துகளினாலும் உருவாக்கப் பட்டிருக்கும். என்னுடைய கருத்தையும் கேட்டு அதை மாற்றிக் கொள்வதால் உங்களுக்கு இழுக்கு ஒன்றுமில்லை.

  “கிரந்த எழுத்து பற்றி விவாதிக்க இது இடமில்லை. நாங்க சில லட்சம் வார்த்தைகளைப் பயன்படுத்தி த.வி. பக்கத்தில் அடித்துக்கொண்டோம், அதை படித்து புரிந்து கொள்ளுங்கள். நான் அஜித், விஜயகாந்த், ரஜினி, பாலாஜி (balaji!) என்னும் மனிதர்களின் பெயர்களோடு விளையாடுவேன், ஆனால் அதற்கான விளக்கத்தை என்னுடை வலைப்பதிவில் வந்து படித்துக்கொள்ளுங்கள்” என்று சரமாரியாக அடித்துவிட்டு, “அரசியல் பல்லிளிக்கிறது, நாட்டுப்புறத்தான்” உள்ளிட்ட தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டு, மற்றவர்கள் பொறுமையாக பதிலளிக்க வேண்டும் எதிர்பார்ப்பதில் நியாமில்லை.

  த.வி.யில் விலாவரியாக விவாதித்தும் எனக்கு அபத்தமாகத் தோன்றிய சில கருத்துக்களைத் தான் உங்களால் முன்வைக்க முடிகிறதென்றால், அந்த த.வி. விவாதத்தின் தரம் எவ்வாறு இருந்திருக்கும்? இத்தனைக்கும் அதை முழுமையாக படிக்கவில்லை என்றுதான் சொன்னேன். படிக்கவேயில்லை என்று சொல்லவில்லை. “த.வி.க்கு வந்து இவ்வளவு கட்டுரைகளை பங்களித்தால்தான் உனக்கு இங்கு பேசும் தகுதியிருக்கிறது” என்று ஒருவர் இன்னொருவரைப் பார்த்துச் சொல்கிறார். அதற்கு மேல் அதை படிக்கத் தோன்றவில்லை.

  வெறுப்பு, பழமைவாதம் போன்ற சொற்களை எல்லாம் பார்த்து பயப்படத் தேவையில்லை. கிரந்தம் பற்றிய உங்களின் கருத்துக்களை உருவாக்கியர்வர்களையும் சேர்த்தே அதை எடுத்துக்கொள்ள வேண்டும். “அரசியல் பல்லிளிக்கிறது” என்பதற்கெல்லாம் நான் பதிலளித்துக் கொண்டிருக்கவில்லை.

  உங்கள் பின்புலம் இந்த விவாததிற்கு ‘அனுபவ அறிவு’ தவிர்த்து எவ்வாறு பயன்படுகிறதென்று தெரியவில்லை. வேலூரில் பிறந்து (2 ஆண்டுகள்), ஆத்தூர் (4), வாணியம்பாடியில் (இன்று வரை) வாழும் ‘நாட்டுப்புறத்தான்’தான் நானும். prejudice, judging போன்றவையெல்லாம் நல்ல பண்புகள் இல்லை.

  தேவையான இடங்களில் கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவது தமிழை செம்மையாக்கும் என்று நான் நினைக்கிறேன். அதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் பரவாயில்லை. எல்லோரும் ஒரே கருத்தை எப்படி கொண்டிருக்கமுடியும்? மற்றபடி உங்களின் மனதைப் புண்படுத்தியதற்காக வருந்துகிறேன். மன்னித்துவிடுங்கள்.

  பாலாஜி.

  பின்னூட்டம் by பாலாஜி — திசெம்பர் 21, 2007 @ 8:00 பிப | மறுமொழி

 14. balaji, மன்னிப்பு கேக்கிற மாதிரியா நாம பழகினோம் 🙂 உங்கள் கருத்து என்னைப் புண்படுத்தவில்லை. வெவ்வேறு மாறுபட்ட கருத்துக்களை அறிந்து கொள்வது என்னுடைய நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்தி உறுதிபடுத்தும் என்பதால் அக்கருத்துக்களை வரவேற்கவே செய்கிறேன்.

  தயவுசெய்து நீங்கள் த.வி உரையாடலை முழுமையாகப் படித்தால் மற்றவர்கள் ஏன் அந்த அளவு கடுப்பானார்கள் என்று புரியும். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. கூடிய சீக்கிரம் நல்ல மொக்கை விமர்சனமா ஒன்னு எழுதி mood மாற்றப் பார்க்கிறேன் 🙂

  பின்னூட்டம் by ரவிசங்கர் — திசெம்பர் 21, 2007 @ 8:07 பிப | மறுமொழி

 15. சரி, balaji என்று தயவுசெய்து எழுதாதிங்க 🙂 திருப்பதியில் வீற்றிருப்பவர் மால்(மீன்) என்னும் தமிழ்க் கடவுளும், விஷ்ணு என்னும் சமசுகிரத வேதக்கடவுளும், போதிசத்தவ என்கிற மகதத்தின் பாலி மொழி புத்தக் கடவுளும் ஒருங்கே சேர்ந்த கடவுள். ‘பால புத்தன்’ என்று முன்னாளில் இருந்திருக்குமோ? அந்தப் பெயரை கடவுள் மறுக்கும் நான் வைத்துக்கொண்டிருப்பது விந்தைதான். ‘பாலாஜன்்’ என்றால் ஆர்மேனிய மொழியிலேயேகூட “சிறு பிள்ளைகள்” என்றுதான் அர்த்தம். ஒருகாலத்தில் ‘பாலாஜி’ என்று தமிழல்லாத nicknameஐ எனக்கு வைத்திருக்கவேண்டாமோ என்று நான் நினைத்ததுண்டு. ஆனால் இப்போது என் பெயரில் இருக்கும் Enigma எனக்கே பிடித்திருக்கிறது!

  பின்னூட்டம் by பாலாஜி — திசெம்பர் 21, 2007 @ 9:25 பிப | மறுமொழி

 16. அந்த த.வி. பக்கத்தை முழுவதுமாகப் படித்தேன். செல்வா அவர்களின் கருத்து ஏற்புடையதாகவே இருக்கிறது. மற்றவர் விவாதங்கள் சரியாகப் படவில்லை. செல்வாவும் தமிழில் ஸ், ஷ், ஹ் போன்ற ஒலிகளுக்கு diatrics கொண்டு ஏற்கனவே இருக்கும் தமிழ் எழுத்துகளை மாற்றிப் பயன்படுத்தலாம் என்றுதான் கூறியிருக்கிறாரே தவிர அந்த ஒலிகளைப் புறக்கணிக்கவேண்டும் என்று சொல்லவில்லை.
  z, f போன்றவற்றிற்கு புதிய எழுத்துக்கள் உருவாக்கப் படவேண்டும் என்ற கருத்தும் ஏற்புடையதே.

  சமசுகிரதக் கலப்பு தமிழில் அதிகமானதன் வரலாற்றை பலர் அறிந்திருப்பதில்லை. வேதமதத்தினர் தமிழ்நாட்டுக்கு வந்ததனாலேயே தமிழ் சமசுகிரத வயப்படவில்லை. தமிழகத்துக்கு வந்த சமணர்களும், வேத மதத்தாரும், கிறிஸ்துவர்களும் தத்தம் பௌதீகங்களை தமிழில் எழுத கொஞ்சமும் காலம் தாழ்த்தவில்லை. சமணர்கள் கொண்டுவந்த பிராமி எழுத்துக்களை இன்று யாரும் குறை சொல்வதில்லை. வேதமதத்தினர் சமசுகிரதம் எழுத உருவாக்கிய கிரந்த எழுத்துக்களை எல்லோருமே எதிர்க்கிறார்கள்!

  தமிழ்நாட்டு நடுகற்களில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் தமிழி என்னும் எழுத்து பிராமியால் அழிந்ததா? தமிழி என்று முதலில் ஒன்று இருந்ததா? தமிழியும் பிராமியும் ஒன்றேதானா? இன்றைய தமிழ் எழுத்தின் முன்வடிவமான வட்டெழுத்து பிராமியிலிருந்து வந்ததா? இல்லை தமிழியிலிருந்து வந்ததா? தமிழ் பிராமியின் மூலமான அசோகப் பிராமியே இந்து சமவெளி எழுத்திலிருந்து வந்ததா? அராமியாக்கிலிருந்து வந்ததா? இத்தனை கேள்விகளுக்கும் இன்னும் நம்மிடம் விடையில்லை.

  பதினான்காம் நூற்றாண்டில் மாலிக் கபூர் படையேடுப்பிலிருந்தே தமிழ்நாடு படிப்படியாக வேற்று மொழியாரின் ஆட்சியிலேயே இருந்திருக்கிறது. மராட்டியம், தெலுங்கு, அரபு, உருது, ஆங்கிலம், சமீபத்தில் இந்தி என்று பிறமொழிகளைத் தமிழரும் கற்கவேண்டி வந்ததினால் சில தமிழருக்கேணும் புதிய ஒலிகள் பரிச்சயமாயின. அதே ஒலியை தமிழில் எழுத தக்க குறிகள் இல்லாததால் அவர்கள் தங்களுக்குப் பரிச்சயமான கிரந்த எழுத்துகளை தமிழுக்கும் பயன்படுத்தினார்கள்.

  தமிழகம் தமிழரின் ஆட்சியிலேயே இருந்த்திருந்தால் வேறு மாதிரியான புதிய எழுத்துக்களை உருவாக்கியிருப்பார்கள். 247 எழுத்துக்களை மட்டும் வைத்துக்கொண்டு அழுதுகொண்டு இருந்திருக்கமாட்டார்கள். இத்தனை ஆண்டுகளாய் தமிழரில் பெரும்பான்மையோர் உஸ், உஷ், ஹாஹா, ஜல் என்று தாம் தினமும் கேட்டும் ஒலிகளை எழுதமுடியாமல் இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றி எவருக்கும் கவலையில்லை. தனக்குத் தெரிந்த வகையில் தமிழை விசாலமாக்கியவர்களை குறைசொல்லிக் கொண்டிருக்கிறோம்.்

  பின்னூட்டம் by பாலாஜி — திசெம்பர் 21, 2007 @ 10:58 பிப | மறுமொழி

 17. […] சமீன் பர், பில்லா, ஓரம் […]

  Pingback by பிற தளங்களில் எழுதியவை.. | ரவி — ஜனவரி 12, 2008 @ 3:39 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: