திரை விமர்சனம்

பிப்ரவரி 25, 2008

குப்பை படத்துக்கு ஆஸ்கரா?

நேற்றிரவு The Counterfeiters என்னும் ஆஸ்திரிய நாட்டுப் படம் பார்த்தேன். படு கேவலம். அதற்கு இன்று ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. கொடுமைடா சாமி!

படு கேவலம்னா பி.வாசு படம் அளவுக்குக் கேவலம். சும்மா holocaust பற்றி தலைப்பு வச்சுட்டு ஒரு கருப்பு திரையைக் காட்டினாகூட ஆஸ்கர் கொடுத்திடுவாங்க போலயிருக்கு. Manufactured Emotions கொண்ட அழுகாச்சிப் படம். அதைக்கூட ஒழுங்கா எடுக்கத்தெரியல.

ஆஸ்விட்சு மூகாமிலிருக்கும் யூத நாயகன் எவ்வளவோ சிரமத்துக்கு அப்புறம் மருந்து வாங்கிட்டு வருவாரு, ஆனா இழுத்துகிட்டு இருந்தவரு, நாயகன் வருகிற நேரத்துல சாவாரு. வில்லன் நாயகன் மேலே சிறுநீர் கழிப்பாரு. ஒருத்தரு மணிக்கட்டில வெட்டிக்கிட்டு சாவாரு. நாசிக்கள் தோற்று ஓடினப்புறம் முகாம்வாசிகள் ஒரு நல்ல படுக்கையைப் பார்த்து கண்ணீர் வடிப்பாங்க. இந்த மாதிரியான, ஒரு பதினையாயிரம் படங்களில் பார்த்த காமெடி காட்சிகளை வைத்து ஆஸ்கர் வாங்கிட்டாங்க. அசிங்கம்.

இந்த படத்துக்கு விருதாம். ஆனா திரைப்பட வரலாற்றின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றான 4,3,2 க்கு nomination கூட கிடையாதாம்! அரசியல் காரணங்களுக்காக 4,3,2 சேர்க்கப் படவில்லை என்பது தெரிந்ததுதான். (கருக்கலைப்பு பற்றிய படம் குடியரசுக் கட்சிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும்.) இது ஒரு மோசடின்னு சில விமர்சகர்கள் கூட எழுதியிருக்காங்க. ஆனா 4,3,2 வந்த ஆண்டில் ஒரு கேவலமான படத்துக்கு விருது கிடைத்தது பெரும் அவமானம்.

முதலில் இங்கு பதியப்பட்டது.

பிப்ரவரி 21, 2008

கி.மு 10,000

Filed under: ஆங்கிலத் திரைப்படம் — Jay Mayu @ 4:43 முப

கி.மு 10000 ம் ஆண்டில் நடப்பது போல ஒரு திரைப்படம் எடுத்து வருகின்றார்கள். இதில் வரும் காட்சிகள் அருமையாக உள்ளது. ரெயிலரைக் காணுங்கள். மார்ச் 7 ம் திகதி உலகத் திரையரங்குகளில் இந்த திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

பிப்ரவரி 14, 2008

4 மாதங்கள், 3 வாரங்கள், 2 நாட்கள்

பயம்… நடுக்கம்… திரையரங்கிலிருந்து எழுந்து ஓடிவிடலாமா என்ற எண்ணம்.

4 மாதங்கள், 3 வாரங்கள், 2 நாட்கள். (ரோமானிய மொழி) இந்தப் படத்தைப் பார்த்து நடுங்காதவன் ஆண்மகனேயில்லை. ஆமாம்! ஏனென்றால் பெண்கள், குறிப்பாக அம்மாக்கள் இந்தப் படத்தை நடுங்காமல் பார்ப்பார்களாயிருக்கும். ஆண்களால் முடியுமாயென்று தெரியவில்லை. என்னால் முடியவில்லை.

நான் பார்த்த படங்களிலேயே தாங்க முடியாத படங்களென நான் கருதுவது Cries and Whispers மற்றும் The Return. முதலாவது பர்க்மனின் தேவையில்லாத (ஆனால் புகழ்பெற்ற) சித்தரவதை. இரண்டாவதை எடுத்து குலை நடுங்க வைத்தவர் அடுத்து படமெடுக்கலாமா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்!

சரி 4,3,2. இதோட கதை பற்றியெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. நிச்சயம் பாருங்கள். பெண்களுடன் சேர்ந்து பார்ப்பது நமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இது பெண்களைப் பற்றி ஒரு ஆண் இயக்குனர் (Cristian Mungiu) ஆண்களுக்காக எடுத்த படம்… பாடம்.

முதலில் இங்கு பதியப்பட்டது.

பிப்ரவரி 11, 2008

I Am Legend

Resident Evil என்ற திரைப்படத்தை ஞாபகப்படுத்தும் திரைப்படமே இந்த I Am Legend. நிவ் யோர்க் நகரத்தில் வில் ஸ்மித் மட்டுமே வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பியிருக்கின்றார்.

இவர் வைரசால் தாக்கப்பட்ட மக்களுக்கு மருந்தைக் கண்டு பிடிக்க முயல்கின்றார். பரபரப்பான திரைப்படம். வில் ஸ்மித்துக்காகவும் அவருடன் வரும் அல்சேசன் நாய்க்காகவும் இந்த திரைப்படத்தைப் பார்க்கலாம்.

இங்கே ரெயிலர் காண்க!

பிப்ரவரி 9, 2008

சென்னையில் பிரஞ்சுத் திரைப்பட விழா

சென்னை சத்யம் திரையரங்கில் Alliance Francaise ஆதரவுடன் நடைபெறும் பிரஞ்சுத் திரைப்பட விழா துவங்கியிருக்கிறது. இது பற்றிய செய்தி இங்கே.

நீங்கள் சென்னையில் இருந்தும் Caramel (Sukkar banat) உள்ளிட்ட படங்களில் எதையாவது ஒன்றையேனும் பார்க்க உங்களுக்கு ஆர்வமும் நேரமும் இல்லையென்றால், உங்கள் வாழ்க்கை ‘கோவிந்தா’ ஆகிக்கொண்டிருக்கிறது என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம்! ஆ!!!

சரி அப்படியே, போன வாரம் நான் பார்த்த படங்களின் சிறு விமர்சனங்கள் கீழே.
(more…)

Create a free website or blog at WordPress.com.