திரை விமர்சனம்

மார்ச் 20, 2008

A Walk to remember

Filed under: ஆங்கிலத் திரைப்படம்,English — Aravindan @ 4:58 முப

827969067420.jpg

இதமான தரமான சுவையான காதல் படம். மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

மார்ச் 15, 2008

BEOWULF – விமர்சனம்

Filed under: ஆங்கிலத் திரைப்படம் — Jay Mayu @ 5:58 பிப
Tags:

BEOWULF எனும் திரைப்படத்தை அண்மையில் பார்க்க கிடைத்தது. அனிமேஷன் திரைப்படமான இந்த திரைப்படம் வியக்க வைக்கின்றது. BEOWULF விமர்சனம் ஹொலிவூட் பார்வை தளத்தில் எழுதியுள்ளேன்.

மார்ச் 4, 2008

Bee Movie

பீ மூவி எனும் அனிமேஷன் திரைப்படத்தில், பட்டம் முடித்து வேலைக்குச் செல்ல ஆயத்தமாகும் ஒரு தேனி, தேனீக்களின் வாழ்க்கை முறையில் ஆர்வமற்று வெளியுலகை எட்டிப் பார்க்கின்றது. இந்த தேனிக்கு வெளி உலகில் ஒரு பெண்ணின் நட்பு கிடைக்கின்றது. அது சாதாரண பெண் தேனியுடனல்ல ஒரு மனிதப் பெண்ணுடன் நட்பு கிடைக்கின்றது.

தேனீக்களின் சட்டப்படி மனிதர்களுடன் அவர்கள் பேசக் கூடாதாம். ஆனாலும் இவர் இந்தப் பெண்ணுடன் பேசி இருவரும் நண்பர்களாகி விடுகின்றனர். நண்பரான தேனியார் உலகளவில் தேனீக்களுகளிடம் இருந்து தேனைத் திருடும் மனிதருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கின்றார். இவ்வாறு தொடர்கின்றது இந்த Animation திரைப்படம்.

நகைச்சுவை, சோகம், கற்பனை, வீரம் என்று சினிமாவில் இருக்க வேண்டிய அனைத்தும் இருக்கின்றது. 100 வீதம் சிறுவர்க்கான திரைப்படம். சிறுவர் உள்ளம் கொண்டவராக இருந்தால் நீங்களும் இதைக் காணலாம். வெறுமனே சிறுவர் கதையாக்கி விடாமல் இயற்கை சமநிலை பற்றியும் அழகாகக் காட்டியுள்ளார்கள்.

குழந்தையுடன் சேர்ந்து பார்க்க அருமையான திரைப்படம்.

IT

பயங்கரமான பிசாசுப் படங்கள் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது என்பதால் அண்மையில் Stephen King எழுதி 1986ல் பிரபலமாக விற்பனையாகிய நாவலின் திரையாக்கமான “IT” என்ற திரைப்படம் பார்த்தேன். IT என்றவுடன் தகவல் தொழில்நுட்பம் என்று எண்ணாதீர்கள். இது எனும் அர்த்ததில் வரும் IT ஏ இது.

கதையின் படி கோமாளி வேஷம் போட்ட ஒரு இது (ஒரு ஜந்து என்று வைத்துக் கொள்ளுங்களேன்!) குழந்தைகளைக் கொலை செய்கின்றது. 30 வருடங்களுக்கு முன்னர் 7 சிறுவர்கள் சேர்ந்து இதை எதிர்க்கின்றார்கள். அதில் வெற்றியும் காண்கின்றார்கள். ஆனாலும் 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அந்த இது வந்து விடுகின்றது. இதை அழிக்க இவர்கள் முயல்வதுதான் கதை.

சிறுவர் திகில் படம் போல இருந்தாலும், சில காட்சிகள் குழந்தைகளை கொஞ்சம் பயமுறுத்தலாம். என்னைப் பொறுத்த வரையில் PG 15 என்று தணிக்கைச் சான்றுதல் கொடுப்பேன்.

படம் பார்த்து முடிந்த பின்னர் ஏதோ ஒரு புத்தகம் வாசித்து முடிந்தது போன்ற உணர்வே மேலோங்கி இருந்தது. திரைப்படத்தின் நீளம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.

Create a free website or blog at WordPress.com.