திரை விமர்சனம்

ஜூன் 25, 2008

The Incredible Hulk (2008) – விமர்சனம்

Incredible hulk 2இந்தியானா ஜோன்ஸ் அன்ட் கிங்டம் ஓஃப் கிரிஸ்டல் ஸ்கல் பார்க்கும் போது இந்த திரைப்படத்தின் ட்ரெயிலரையும் பார்த்தேன். ஆக்சன் பட இரசிகரான நான் இந்த திரைப்பட ரெயிலரைப் பார்த்து அதில் மயங்கியதன் காரணமாகத்தான் மீண்டும் மஜஸ்டிக் சென்று இன்கிரடிபில் ஹல்க் பாகம் II ஐ பார்த்து தீர்த்தேன்.

பாகம் ஒன்றை நான் பார்க்கவில்லை, அதனால் அதில் என்ன நடந்தது என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் திரைப்பட தொடக்கத்தில் எவ்வாறு இந்த ஹல்க் உருவானார் என்று காட்டுகின்றார்கள். இந்தப் பாகம் அக்சன் இரசிகர்களுக்கு தீனி போடக்கூடிய அருமையான அடி-பிடிக்கள் நிறைந்த திரைப்படம்.

ஒரு சாதாரண மனிதன் ஆய்வு கூட விபத்தில் சிக்கி அபரிதமான சக்தி ஒன்றைப் பெறுகின்றான். அதாவது அளவுக்கு அதிகமாக கோவப்பட்டால், அல்லது இரத்த அழுத்தம் கூடினால் அவன் ஒரு பச்சை நிற மனிதனாக மாரூபம் கொள்வான். அத்துடன் எதனாலும் சாய்க்க முடியாத அபரிதமான சக்தியையும் பெறுவான்.

இவனை (புரூஸ்) அமெரிக்க இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்த ஒரு கேர்ணலும், அவனைக் காப்பாற்ற முயலும் அவன் காதலியும், இவனை ஒத்தைக்கு ஒத்தையாக சந்திக்க என ஒரு இராணுவ வீரன் என கதையில் பல பாத்திரங்கள்.

ட்ரான்ஸ்போமர்ஸ் 2ம் பாகத்தை இயக்கும் இயக்குனர்தான் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளமையினால் அக்சன் காட்சிகள் எப்படி இருக்கும் என நான் சொல்லத் தேவையில்லைதானே?

மொத்தத்தில் அலுப்படிக்காத, கதிரை நுனியில் உட்கார வைக்கும் ஒரு திரைப்படம். Action, Sci-fi விரும்பிகளுக்கு நல்ல ஒரு விருந்து!!!

பி.கு: மலேசியாவில் ஹல்க்கின் வசூல் சாதனையை தசாவதாரத்தால் முறியடிக்க முடியவில்லையாம்!!!!

7 பின்னூட்டங்கள் »

 1. \\
  மலேசியாவில் ஹல்க்கின் வசூல் சாதனையை தசாவதாரத்தால் முறியடிக்க முடியவில்லையாம்!!!!
  \\

  மிக்க நன்றி

  பின்னூட்டம் by அதிஷா — ஜூன் 30, 2008 @ 9:03 முப | மறுமொழி

 2. எதுக்குங்க அந்த நன்றி??????

  பின்னூட்டம் by mayooresan — ஜூலை 2, 2008 @ 3:44 பிப | மறுமொழி

 3. நேற்று இந்தப் படத்தை பார்த்தேன். முறட்டுத்தனமான் அடிபாடுகள் – அதைத்தான் தயாரிப்பாளர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இது 2003 Hulk படத்தின் இரண்டாம் பாகம் இல்லை. 2003 படம் விமர்சனர்களால் மிகவும் பாராட்டப்பட்டாலும், வியாபார ரீதியில் தோல்வியடைந்ததொன்று. எனவே, 2003 படம் போன்று கதாபாத்திரங்களை கட்டியெழுப்புவதில் நேரத்தை செலவழிக்காமல், விறுவிறுப்புக்கு முக்கியம் கொடுத்து கதையை திருப்பி எடுத்திருக்கிறார்கள். Hulkக்கும் கொஞ்சம் விகாரம் கூடியதாக வடிவிறக்கப்பட்டுள்ளது. என்றாலும், எனக்கு 2003 படம் இந்தப் புதுப்படதிலும்பார்க்க அதிகம் பிடித்திருக்கிறது.

  ஒரு தகவல்: படத்தில் Betty, மற்றும் Mr.Blue ஆகியோரின் பல்கலைக்கழகங்களில் நடப்பதாக சித்தரிக்கப்படுகின்ற காட்சிகள், ரொரொன்டோ பல்கலைக்கழகத்தில் எடுக்கப்பட்டு இருக்கின்றன. அவ்வாறாகவே, New York வீதிகள், Toronto வீதிகளால் சித்தரிக்கப்பட்டுள்ளன.

  பின்னூட்டம் by bmmaran — ஜூலை 2, 2008 @ 3:52 பிப | மறுமொழி

 4. புதிய தகவல்களுக்கு நன்றி.

  அப்பு உங்கட இடத்தில எடுத்துட்டு நிவ்யார்க் என்டு கதை விட்டிட்டானுகள்!

  பின்னூட்டம் by mayooresan — ஜூலை 4, 2008 @ 4:37 முப | மறுமொழி

 5. என்னவேதெரியாது, நிறைய ஹாலிவூட் படங்கள் கனடாவில்தான் படம்பிடிக்கப் படுகின்றன. உதிரி வேலையாட்களுக்கான சம்பளம் இங்கு குறைவு என்று நினைக்கின்றேன். தவிர கனேடிய நகரங்களும் இதை ஊக்குவிக்கின்றன என்று நினைக்கின்றேன். இங்கு (ரொரொன்டோ) ஒரு subway நிலையத்தின் ஒரு பகுதி நிரந்தரமாகவே நியூயோக் subway நிலையம் ஒன்றின் பெயரைத்தாங்கி நிற்கிறது (இந்தப் பகுதிக்கு பொதுமக்கள் பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை.)

  அது சரி, subwayக்கு தமிழ் என்ன?

  பின்னூட்டம் by அனாமதேய — ஜூலை 4, 2008 @ 1:03 பிப | மறுமொழி

 6. சுரங்கப்பாதை என்று சொல்லலாமா?

  பின்னூட்டம் by mayooresan — ஜூலை 8, 2008 @ 12:38 பிப | மறுமொழி

 7. அது tunnel என்பதைக் குறிக்கும்… “நிலத்தடி ரயில்”? “ரயில்” தமிழில்லை.. “புகையிரதம்” என்பது இனியும் உபயோகப்படாது, இந்த ரயில் மின்சாரத்தில் ஓடுகிறது.

  பின்னூட்டம் by அனாமதேய — ஜூலை 9, 2008 @ 8:33 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: