திரை விமர்சனம்

ஜூலை 30, 2008

Wanted (2008)

logicஐத் தூக்கி பத்திரமாக ஒரு இரும்புப்பெட்டிக்குள் போட்டு, அதுக்கு ஒரு பெரியதொரு பூட்டும் போட்டு, அதை ஒரு 100அடிக்கு கிடங்கு கிண்டி புதைத்துவிட்டு வந்து ஒரு படம் எடுத்திருக்கிறார்கள்!! படத்தின் trailersகளைப் பார்த்தும் அது உங்களிற்குப் புரியவில்லை என்றால், படம் தொடங்கி 5 நிமிசத்திற்குள்ளாவது உங்களிற்குப் அது புரிய வேண்டும். அதைப் பற்றி உங்களிற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென்றால், இந்தப் படம் நல்லதொரு பொழுதுபோக்கு விருந்து.

தனது வாழ்க்கையில் மிகவும் சலிப்படைந்த நிலையில் கணக்காளராக வேலை செய்பவன் Wesley. இவன் ஒரு கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பெண் வந்து, சின்ன வயதில் Wesleyஐக் கைவிட்டுவிட்டுப்போன அவனின் தகப்பனார் கொலை செய்யப்பட்டுவிட்டார் என அறிவிக்கிறாள். அத்தோடு Wesleyஐயும் அதே கொலையாளியிடமிருந்தும் காப்பாற்றுகிறாள். இதன்பின் தனது அப்பா ஒரு 1000 வருடம் பழமை வாய்ந்த ஒரு கொலையாளிகள் குழுவில் ஓர் அங்கத்தவர் எனவும் அறிகிறான் Wesley (கெட்டவர்களைக் கொன்று உலகில் அமைதியை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் ஒரு குழுவாம்!!) தந்தையின் வழியில் தானும் இணைந்து, தந்தையைக் கொன்றவனை பழி வாங்கவென திட்டம் தீட்டுகின்றான் Wesley. மிகுதி திரையில்.

படம் முழுவதும் special effectsஇல்தான் தங்கியிருக்கிறது. ‘சிவாஜி’ படத்தில் வரும் ‘அதிரடிக்கார மச்சான்’ பாட்டு வடிவில் முழுநீள திரைப்படத்தை எடுத்தால் எப்பிடியிக்குமோ அப்பிடி; என்றாலும் இவங்கள் special effectஇல பழம் திண்டு கொட்டை போட்டவர்கள் என்பதால் படம் கொஞ்சமும் தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாகப் போகின்றது! படத்தில கிட்டத்தட்ட ஒரு 10% slow motion, extreme slow motion, freeze motion, reverse slow motion என்று போகிறது!! கதை ஒரு comics புத்தகத்திலிருந்து தழுவப்பட்டது என்பதால் படத்தையும் ஒரு காமிக்ஸ் புத்தகம் மாதிரித்தான் எடுத்திருக்கின்றார்கள். “Mr & Mrs Smith”, “Sin City” போன்ற படங்களை நீங்கள் ரசிப்பவரானால் இதையும் ரசிப்பீர்கள். படத்தில் இரத்தம் சிந்தும் காட்சிகள் எக்கச்சக்கம், கூடவே அரை, முக்கால் நிர்வாணக்காட்சிகளும் உண்டு. எனவே யாருடன் இந்தப் படத்தை பார்க்கப் போகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்கவும்.

“Wanted” IMDB இணைப்பு

ஜூலை 27, 2008

Smart People

ஒரு சோகமான குடும்பத்தைப் பற்றிய கதை. அதை சற்றே நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். மனைவியின் இறப்பிலிருந்து பலவருடங்களாக மீளமுடியாமல் தவிக்கும் ஒரு பேராசிரியர், தனது வாழ்க்கையின் எல்லாப்பகுதியையும் தானாகவே சிதைத்துக்கொண்டிருக்கிறார். இது அவரை மட்டுமல்லாது அவரின் இரு பிள்ளைகளைகளின் வாழ்க்கைகளையும் பாதிக்கின்றது. இது போதாதென்று ஓசிச்சோற்றுக்கு வந்துசேருகின்ற இவரின் சகோதரன். இவ்வாறான இந்த மனிதரின் வாழ்க்கையில் சின்னதொரு ஒளியாக வந்துசேருகிறார் ஒரு பெண். இவர்களின் வாழ்க்கைகளைப் பற்றியதே படம்.

ஆங்கிலம் சரியாக புரியவில்லையென்றால் படத்தின் பல நகைச்சுவை வசனங்களும் எடுபடாமல் போய்விடும். இருக்கும் நகைச்சுவை கூட உண்மையாக சிரிப்பை வரவழைப்பதற்காக இல்லை, சிந்திப்பதற்காகவே உள்ளது. எனவே பொழுதுபோக்கிற்காகப் பார்க்கற்கூடிய படம் என்று இதைக் கூற முடியாது.

படத்தில் மகளிற்குவரும் கனடிய நடிகர் Ellen Pageஐ எனக்கு மிகவும் பிடிக்கும். நடிப்பின் ஆரம்பக்காலத்திலிந்தே இவர் தனது திறமைகளை காட்டிவந்திருந்தாலும், சமீபத்தைய Juno படத்தின் பின்னர் மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தார். அதற்காக Oscarற்கும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். எனினும் இந்தப் படத்தில் அவரின் திறமைக்கு அவ்வளவு வேலை கொடுக்கப்படவில்லை. என்றாலும், பொதுவாக படத்தில் எல்லா நடிகர்களும் நேர்த்தியாக தங்களது வேலைகளைச் செய்திருக்கிறார்கள்.

“Smart People” IMDB இணைப்பு

ஜூலை 26, 2008

Nim’s Island

ஒரு அப்பாவும், 11வயது மகள் Nimஉம் பசுபிக் சமுத்திரத்தின் நடுவில் உள்ள ஒரு தீவு ஒன்றில் தனியே வசிக்கிறார்கள். அப்பா ஒரு marine biologist (கடல்வாழ் உயிரின ஆய்வாளர்.) Nimஇன் வாழ்க்கை அப்பாவையும், அந்தத்தீவையும், தனது செல்லப்பிராணிகளயும் சுற்றிப்போகின்றது. இவற்றைத்தவிர Nimஇன் பொழுதுபோக்கு ஒரு கற்பனை கதாநாயகன் Alex Roverஇன் சாகசக் கதைத்தொடர்கள். ஆனால் Nimஐப் பொறுத்தவரை Alex Rover ஒரு நிஜ மனிதர்.  உலகின் அடுத்த பாகத்தில் இந்த கதைதொடரை எழுதிக்கொண்டிருப்பவர் Alexandra Rover – ஒரு பெண் எழுத்தாளர்; உலகின் பல்வேறுபாகங்களிலும் சாகசங்களை நிகழ்த்தி வரும் கதாநாயகனைப்பற்றி எழுதிவரும் இவரோ agoraphobia என்னும்  வருத்தத்தைக் கொண்டிருக்கிறார். அதாவது தனது வீட்டை விட்டு வெளிவர இவரிற்குப் பயம்; இவரது முழு வாழ்க்கையுமே நான்கு சுவர்களிற்கு  உள்ளேதான். இவை இவ்வாறு இருக்க, Nimஇன் அப்பா ஒரு புயற்காற்ற்ல் அகப்பட்டு கடல் நடுவில் தொலைந்துவிடுகிறார். இதே நேரம் தற்செயலாக Nimஉடன் தொடர்பை ஏற்படுத்துகிறார் Alexandra, Alex என்ற சுருங்கிய பெயருடன்.  தனது பிரபல்யமான கதாநாயகனிடமிருந்து மின்னஞ்சல் கிடைத்ததில் மிகவும் மனம் மகிழ்ந்த Nim, Alexஐ தனது துணைக்கு வரச்சொல்லி நிர்ப்பந்திக்கிறாள். Nimக்கு துணக்கு எவருமேயில்லை என்று அறிந்த Alexandra தனது agroaphoic பயத்தையும் மீறி Nim’இன் தீவுக்கு புறப்ப்டுகின்றார்.

அலட்டிக்கொள்ளாத, குடும்பத்துடன் பார்ப்பதற்கான ஒரு படம். Nim பாத்திரத்தில்வரும் Abigail Breslin 10வயதில் Oscarஇற்றுத்தெரிவு செய்யப்பட்ட சிறுமி. Nim பாத்திரத்தை இலகுவாக கையாண்டிருக்கிறார். அவ்வாறாகவே Alexandraஆக வரும் ஹாலிவூட்டில் பழம் தின்று கொட்டை போட்ட Jodie Foster (இரு முறை Oscarவென்றவர்.) அண்மைய பிரபல்யமான Gerald Butlerஉம் (“Phantom of the Opera”, “300”, “PS: I love you”) தனதுபாத்திரங்களை (அப்பா, Alex Rover) நேர்த்தியாகச்செய்திருக்கிறார். எனது குறையெல்லாம் இவர்களின் தோள்களில் இன்னமும் எவ்வளவோ பாரம் ஏற்றியிக்கலாம் என்பதுதான்.

கதை சாதாரண சிறுவர் கதைதான், எவ்விதமான திடீர்த் திருப்பங்களும் இல்லை. என்றாலும் ஒரு அழகான படம். Nimஇன் செல்லப் பிராணிகளிற்காகவாது (sea lion, chameleon, pelican) படத்தைப் பார்க்கலாம்.

Nim’s Island IMDB இணைப்பு

ஜூலை 24, 2008

Fool’s Gold

Filed under: திரைப்படம் — bmmaran @ 7:41 பிப

பத்தோடு பதினொன்றாக ஹாலிவூட்டில் வந்துபோன படமொன்று. ஒற்றைவரி, மூன்று சொல் கதை: கடலடி புதையல் வேட்டை. சொல்லும் படியாக வேறொன்றும் இல்லை! அவுஸ்ரேலியாவில் மிகவும் அழகான தீவு ஒன்றில் போய் படம் எடுத்திருக்கிறால்கள் – அதைக்கூட ஒழுங்காகக் காட்டவில்லை! நீங்கள் பெண் என்றால் Matthew McConaugheyன் அரை நிர்வாண உடல் உங்களை கொஞ்சம் திருப்திப் படுத்தலாம்; நீங்கள் ஆண் என்றால் அதுவும் உங்களிற்கு இல்லை – என்னதான் ஆடைக் குறைப்புச் செய்தாலும் Kate Hudsonஉம், Alexis Dzienaஉம் கவர்ச்சிகரமாகவே இல்லை. சந்தோசமாக இந்தப் படத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்.

Fool’s Gold IMDB link

Hancock

Hancock ஒரு வித்தியாசமான படம். அதை அப்படியாகவே விளம்பரப்படுத்தியிருக்கலாம் –  அதைவிட்டுவிட்டு படத்தின் trailers எல்லாம் இதை ஒரு நகைச்சுவைப் படமாக சித்தரித்திருக்கின்றன. விளைவு சற்றே ஏமாற்றம். படத்தின் பல்வேறு trailersகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றால், படத்தில்வரும் நகைச்சுவைக் கட்டங்களையெல்லாம் (பெரும்பாலும்) பார்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

படம் ஒரு superman மாதிரியான சக்திகொண்ட ஒரு மனிதனைப் (Hancock) பற்றியது. தனது சக்திகளைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யவிரும்பினாலும், அது மீண்டும் மீண்டும் பொதுமக்களின் உடைமைகளிற்கு பெரும் அழிவை ஏற்படுத்துவதிலேயே சென்றுமுடிகிறது. அத்துடன் தனது வாழ்க்கையின் பெரும் பகுதி பற்றிய ஞாபகத்தையும் இவர் இழந்து நிற்கிறார். தற்செயலாக ஒரு public relation (PR) manager ஒருவரை இவர் காப்பாற்ற, அதற்கு பிரதியுபகாரமாக Hancockஇன் வெளித்தோற்றத்தை (image) மக்கள் மத்தியில் உயர்த்திக்காட்டவென இந்த PR மனிதர் திட்டம் தீட்டுகிறார். எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருக்கும் அதே வேளையில் Hancock அந்த PR மனிதரின் மனைவியில் மேல் மையல் கொள்கிறார். இது எவ்வாறாக  அதியமான திருப்பங்களை கொண்டு வருகின்றது என்பது மிகுதிக் கதை!

படத்தில் வரும் மூன்று முக்கியபாத்திரங்களின் நடிப்புத்திறனினால் படம் காப்பாற்றப் படுகிறது. ஆனால் எழுத்தாளரும், இயக்குனரும் படத்தை இடைக்கிடை குழப்பியிருக்கிறார்கள். நகைச்சுவைப் படமா, காதல் படமா, superhero படமா என்று பார்க்கும் எங்களுக்குத் தடுமாற்றம்! நீங்கள் Will Smith அல்லது Charlize Theron ரசிகர் என்றால் இதை கட்டாயம் ரசிப்பீர்கள். என்றாலும் DVDக்காகப் பொறுத்திருப்பது நல்லது என்று நினைக்கிறேன். படம் என்னவோ மோசமானது இல்லை; குறைவான எதிர்பார்ப்புடன் போனால், இதை நீங்கள் மிகவும் ரசிக்கலாம். படத்தின் கதையில் வரும் ஒரு திருப்பம் மிகவும் நன்றாக இருக்கும். அதை மிகவும் ரகசியாமாக வைத்திருந்தது நல்ல விடயம்!!

ஜூலை 23, 2008

Batman Begins (2005)

“Batman: The Dark Knight” படத்தைப் பார்க்க முதல் அதன் முந்திய பாகம் “Batman Begins” பற்றி எழுதிவிட்டுப்போகலாம் என்று பார்க்கிறேன். நீங்கள் ஒரு ஆக்சன் பட ரசிகர் என்றால் “Batman Begins” கட்டாயமாக பார்க்கவேண்டிய ஒரு படம். Batman பற்றி எல்லாருக்கும் தெரியும்; 1989-1997 காலப்பகுதியில் 4 batman திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. இவவாறு இருக்கையில் இந்தப்படத்தில் என்ன விசேசம்?

முதலாவது கதையோட்டம்: “Batmag Begins”, batman வரிசைக்கு மீள் உயிர் (reboot என்று சொல்வார்கள்) தந்திருக்கிறது. மிகவும் ஆரம்பத்திலிருந்து Batman எவ்வாறு உருவாகிறார், அவரது குணம் என்ன, பலம் என்ன, பலவீனம் என்ன என்று Batmanஇன் ஒவ்வொரு பாகத்தையும் துல்லியமாகவும், புத்திசாலித்தனமாகவும், முக்கியமாக விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். Batmanஐ ஒரு காமிக் புத்தக superhero ஆக வடிவமைக்காமல், மிகவும் நம்பகத்தன்மையோடு காட்டியிருக்கிறார்கள்.

"Tumbler"

அடுத்தது கதாபாத்திரங்கள்: ஹாலிவூட்டின் பிரபல்யங்களையெல்லாம் நீங்கள் இதில் சந்திக்கலாம். எனினும் இவர்கள் பகட்டுக்காக வரவில்லை. படத்தில் வரும் அனைவருக்கும் ஆணித்த்ரமான கதாபாத்திரங்கள்; அதில் அவர்கள் தங்கள் திறமைகளைக் கொட்டியிருக்கிறார்கள். Margan Freeman ஒரு படத்திலிருந்தாலே அவருக்காகவே அந்தப் படத்தைப் பார்க்கலாம். தமிழில் நாகேஷ் அல்லது நாசர் போல…

கடைசியாகத் தொழில்நுட்பம்: Batmanஇன் ஒவ்வொரு அங்கங்களிற்கும் (உடை, செட்டை, காது, கத்தி) செயற்பாட்டிற்கும் (விஞ்ஞான) விளக்கம் தர முயற்சித்திருக்கிறார்கள். படத்தில் பலராலும் பேசப்பட்டது Batmobile – Batmanஇன் கார். “Tumbler” என்று செல்லப்பெயர் கொடுக்கப்பட்ட இது முன்னைய படங்களைப் போல ஒரு பொய்க்காரில்லை; இது ஒரு நிஜமாக வடிவமைக்கப்பட்ட, நிஜமாக தொழில்படுகின்ற ஒரு கார். இதன் வடிவமைப்பு விபரண்த்திற்து அப்பாற்பட்டது. படத்தின் கதைவசனத்திலிருந்து கடன் எடுப்போமானால்:
police officer talking to walki talkie: “at least tell me what it looks like” [batmobile whizzes past, and after staring at it] “Never mind”

“The Dark Knight” படத்தை பார்ப்பதற்கு நீங்கள் தயார்படுகிறீர்கள் என்றால், முதலில் “Batman Begins” ஐ பாருங்கள். செலவழிக்கும் நேரத்திற்கு கவலைப் பட மாட்டீர்கள்.

Get Smart

Steve Carelஐ ஹாலிவூட்டின் புதிய Bill Murray (அல்லது, Jim Carrey) என்று சொல்லலாம். (Bill Murray அல்லது Jim Carrey யார் என்று தெரியவில்லையென்றால் நான் ஒன்றும் செய்ய இயலாது! :-D) மிகவும் சிக்கலான, சிலவேளைகளில் குழந்தைத்தனமான, முகபாவங்களால் நகைச்சுவையை கொண்டுவருவதில் Steve Carel ஒரு விண்ணர்! அவருடன் ஒரு புத்திசாலித்தனமான நகைச்சுவை நிறைந்த உரைநடையையும் இணைத்துவிட பிறக்கிறது வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்ற “Get Smart”.

Maxwell Smart ஒரு ரகசிய உளவு நிறுவனத்தில் ஒரு தகவல் ஆராய்வாளர். இவரின் நீண்ட நாள் ஆசை ஒரு ஒற்றனாக வேலையாற்றுவது. என்றாலும் ஆராய்வாளர் என்ற பணியில் இவரின் பணி இணையற்றது என்பதால் இவரை ஒற்றனாக பதவியேற்க இவரது நிறுவனம் தயாரில்லை. இவ்வாறான ஒரு நாளில், இவரது நிறுவனத்தின் தகவல் களஞ்சியம் எதிரிகளால் உடைக்கப்பட்டு நிறுவனத்தின் ஒற்றர்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் சந்தைக்கு வந்துவிடுகின்றன. இதனால் களத்தில் இருக்கும் ஒற்றர்கள் எல்லாம் மேசை வேலைக்கு வந்துவிட, எமது கதாநாயகனின் ஒற்றனாக செயற்படவேண்டுமென்ற நெடுநாள் ஆசை நிறைவேறுகிறது. இவருடன் இணந்து செயற்பட, அண்மையில் உருமாற்றதிற்குள்ளாகிய Agent 99. Agent 99 ஆக வருவது super-hot Anne Hathaway.  இவர்கள் எவ்வாறு ஒரு அணுகுண்டு ஆபத்திலிருந்து அமெரிக்க ஜனாதிபதியைக் காப்பாற்றுகிறார்கள் என்பது கதை.

படம் பார்க்க முன்பு நினைவில் கொள்ளவேண்டியது, இது ஒரு seriousஆன படம் அல்ல; இது ஒரு நகைச்சுவைப் படம். எனவே படத்தின் கதையில் இருக்கும் ஓட்டைகளை நீங்கள் கண்டுகொள்ளக் கூடாது. படத்தை பார்த்தோமா, வாய் குலுங்கச் சிரித்தோமா என்றுகொண்டு வரவேண்டியதுதான். அதற்கு நீங்கள் தயார் என்றால் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் சந்தோசமாக செலவழிக்கலாம். Anne Hathawayயை திரையில்தான் பார்க்க வேண்டும் என்று ஒரு தவனம் இல்லை என்றால், கொஞ்சம் பொறுத்திருந்து DVDயில் பார்க்கலாம்.

ஜூலை 21, 2008

Wall-E: ஒரு காட்டூன் classic

Wall-E பிக்சார் (Pixar) காட்டூன் படங்கள் ஒவ்வொன்றுமே காட்டூன் படங்களின் எல்லையை முட்டிப்பார்ப்பதாகவே இருக்கும் (இன்னமும் நீங்கள் “finding nemo” “incredibles” படங்களைப் பார்க்கவில்லை என்றால், முதலில் அதைச்செய்யுங்கள்!!); Wall-E அந்த எதிர்பார்ப்பை நிவர்த்திசெய்ததுமட்டுமல்ல, அதையும் தாண்டிச்சென்றுவிட்டது. போர்வைக்கு ஒரு சிறுவர்களுக்கான காட்டூன் படமாகத்தோற்றம் தந்தாலும், உள்ளுக்குள் Wall-E வெவ்வேறு முகங்களைக்காட்டுகிறது: ஒரு விஞ்ஞான கற்பனை (Sci-Fi) கதை, மனிதத்துவம் (humanity) பற்றிய ஒரு கதை, ஒரு காதல் கதை, இப்படியாக Wall-Eயை பலவிதமாகப் பார்க்கலாம்.  அந்தளவு போகவிருப்பமில்லை என்றால் நல்லதொரு நகைச்சுவை படமாகவே நீங்கள் இதை எடுத்துக்கொள்ளலாம் – படம் முழுக்க பட அரங்கத்தில் இருந்துகொண்டு வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தேன்.

இற்றைக்கு 700 வருடங்களுக்குப்பின் கதை நடக்கின்றது. பூலோகம் மனிதர்களின் குப்பையால் நிரம்பிப்போனதால், மனிதகுலம் பூமியை கைவிட்டுவிட்டு மாபெரும் விண்கப்பலொன்றில் குடியேறிவிட்டது. பூமியை சுத்தம் செய்யவென இங்கு தங்கி நிற்பது ஒரு ரோபோட் (robot) குழுவொன்று. மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக பூமியை மறந்துவிட, தங்கி நின்ற ரோபோட்களில் ஒவ்வொன்றாக செயலிழந்துவிட, கடைசியாக ஒற்றைக்கையாக பூலோகத்தை சுத்தம் செய்துகொண்டிருப்பது எமது கதாநாயகன்: Wall-E. குப்பைகளிலிருந்து எடுத்த பொருட்களிலிருந்து படித்ததிலிருந்து தன்னாலேயே ஒரு குணாதியத்தையும்  (personality) கொண்டிவிடுகிறது. மனிதனிற்கும் பூமிக்குமான உறவை மீண்டும் கட்டியெளுப்ப Wall-E எவ்வாறு உதவுகிறது என்பதுதான் படம்.

கிட்டத்தட்ட படத்தின் முதல் 40 நிமிடங்களிற்கு சொல்லும்படியாக கதைவசனமே இல்லை! என்றாலும் சிரிப்புக்கும் “ஆ…”, “ஊ…”வுக்கும் திரையரங்கத்தில் குறைவிருக்கவில்லை! 1995ல் Lion King பார்த்தபோது இரு மிருகங்களிற்கிடையில் காதல் மலர்வதை எவ்வாறு அருமையாகக் காட்டியிருக்கிறார்கள் என்று எண்ணி வியந்தேன். இங்கே இரண்டு ரோபோட்களுக்கிடையில் காதலை மலர விட்டிருக்கிறார் – கதைவசனமேயில்லாமல்!! Wall-Eஇன் காதலி Eveவை வடிவமைக்க Apple iPod,iPhone,iMac வடிவமைத்தவரின் உதவியை நாடியிருக்கிறார்கள்; விளைவு: ஒரு super-cute ரோபோட், ஆனால் எடுத்தவுடன் அடிப்பன் என்ற ஒரு குணாதியத்துடன். பயங்கரப் பகிடி!!! சந்தர்ப்பம் கிடைத்தால் திரையரங்கத்திலேயே பாருங்கள் – Pixar படங்கள் அதற்குத்தகுந்தவைதான்.

ஜூலை 16, 2008

குருவி

Filed under: தமிழ்த் திரைப்படம் — Nilofer Anbarasu @ 1:33 முப

கல் குவாரியில் அடிமை தொழிலாளிகளாக சிக்கித்தவிக்கும் தன் அப்பாவையும் அவருடன் உள்ள மற்றவர்களையும் மீட்பதற்காக சுமன், ஆஷிஸ் வித்யாதிரி, ‘கடப்ப’ ராஜா, சூரி போன்ற வில்லன்களுடன் மோதும் கதைதான் குருவி. ஆரம்பத்தில் மாளவிகா, விவேக், பாடல் என்று அமர்களமாக ஆரம்பிக்கும் படம் போக போக படு போர். பல இடங்களில் அப்படியே கில்லியை நினைவு படுத்துகிறது காட்சிகள்.
ஒரு வெற்றிப்படம் கொடுத்த கூட்டணியினர் மீண்டும் இணையும் போது பழைய படத்தின் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் இங்க வலுக்கட்டாயமாக சேர்த்திருக்கிறார்கள். 80% படத்தில் கதை/காட்சியமைப்பு அப்படியே கில்லியை நினைவு படுத்துகிறது. அநியாயத்துக்கு செண்டிமெண்ட் பார்த்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சில…..
  1. கில்லியில் கபடி ரேஸ் முடிந்து கோப்பை வாங்கியவுடன், கதை, திரைக்கதை இயக்கம் தரணி என்று பெயர் வரும். இதில் கபடிக்கு பதில் கார் ரேஸ் அவ்வளவுதான் வித்தியாசம்.
  2. இரண்டு படத்திலும் போட்டியில் ஜெயித்தவுடன் பாடல்.
  3. இதிலும் விஜயின் பெயர் வேலு. அதில் சரவனவேலு இதில் வெற்றிவேலு.
  4. ‘அப்படி போடு’ பாடலுக்கு பதில் ‘மொல மொல’ பாடல்.
  5. ஆடியோ casset வெளியிட்ட இடம் Little Flower ஸ்கூல்.
  6. படம் ரிலீஸ் ஆனா நாள் அதே சனிக்கிழமை.
  7. இரண்டு படத்திலும், இடைவேளைக்கு முன்பு த்ரிஷாவை இழுத்துக்கொண்டு ஓடுவது. அதை தொடர்ந்து வரும் chasing காட்சிகள்.

(more…)

Kireedam: Another ‘Mugavari’

Filed under: தமிழ்த் திரைப்படம் — Nilofer Anbarasu @ 1:28 முப
Tags:

Kireedam has all the elements required for a successful movie. It has an excellent storyline, talented star cast, good comedy, worthy music, excellent cinematography but still fails to attract the mass audience. The story is all about a dream of a father who like to make his son as a Sub-inspector and son in turn always interest to fulfill his family expectations. Ajith is too handsome in the film after a long time. The chemistry between the Ajith and Rajkiran on screen is blended well with their characters. The first half of the movie seems to be pretty good. The scene before interval is crafted well and highlights the relationship between the father & Son. But, the director fails to maintain the same rhythm in second half. the movie would impressed much, if they changed the screeplay little in second half. The film has the malayalam flavour till the end, which is the one should be avoided strictly. When compared to earlier Ajith’s washout movie Azhwar, this is good. So, Kireedam is one of the best clasical movie unfortunately failed to hit the target.

Thiru’s cinematography is good but, the yellow tone throughout the movie is irritating. The song ‘Akkam Pakkam’ is a visiting card for the upcoming musician G.V Prakash. Vijay, the debut director tried to be in safer side by remaking his mentor Priyadarshan film as his first attempt and partially he succeeded too.
—-
Nilofer Anbarasu
http://kick-off.blogspot.com

ஜூலை 5, 2008

ஊருக்கு நூறு பேர்

பழைய படம் தான் (2001). இந்திய மக்களவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் தொலைக்காட்சி அலைவரிசையில் இன்றிரவு ஊருக்கு நூறு பேர் திரையிட்டார்கள். சுமாரான படம். பார்க்கலாம்.

மரண தண்டனை எதிர்ப்பு, கம்யூனிசம் உள்ளிட்ட கருத்துகளை பற்றிய ஜெயகாந்தன் அவர்களின் கதை. தேசிய விருது வாங்கிய படம். கொஞ்சம் பிரசார நெடியடித்தாலும், நல்ல நடிப்பு, பாத்திரத்தேர்வு, வசனம் என்று சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

முதலில் இங்கு பதியப்பட்டது.

ஜூலை 2, 2008

குங்பூ பான்டா – 1 1/2 மணி நேர திகட்டாத நகைச்சுவை

குங்பூவை ஏதாவது ஒரு மிருகத்துடன் பொருத்தி பார்க்க விரும்பினால், நீங்கள் எந்த மிருகத்தை தெரிவு செய்வீர்கள்? – நிச்சயமாக தின்று தின்று வண்டி வைத்த ஒரு பன்டா கரடியை அல்ல, சரிதானே? இந்த காட்டூன் படத்தில் அதைத்தான் தெரிவு செய்திருக்கிறார்கள் – விளைவு? கதைக்கமுதலே சிரிக்க வைக்கிற ஒரு கதாபாத்திரம். அதற்காக கதைவசனமே இல்லை என்றோ, அது சிரிப்பை வரவளைக்கவில்லை என்பதோஇல்லை. படம் 1 1/2 மணி நேரமும் வயிறு குலுங்க வைக்கிறது.

படத்தின் மூலக்கதை என்னவோ பெரிதாகப் புதிதில்லை – குங்பூவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு குண்டு பன்டா கரடியொன்று குங்பூ வல்லுணராக வருவதாகப் பகற் கனவு காண்கின்றது. இதே நேரத்தில் ஒரு கெட்ட குங்பூ வல்லுணரான பனிச்சிறுத்தையொன்று சிறை உடைப்புச் செய்கிறது. அதை தடுத்து நிறுத்த ஒரு வீரனைத்தெரிவு செய்ய வேண்டிய தருணத்தில் எமது பன்டா கரடி தவறுதலாக நுழைந்ததில் அது அந்த வீரனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுவிடுகிறது. அது குங்பூ வல்லுணராக மாறியதா, அந்த பனிச்சிறுத்தையை தடுத்து நிறுத்தியதா என்பதே படம்.

நீங்கள் நிறையக் காட்டூன் படங்கள் பார்ப்பவரானால், இந்தப்படத்தின் திரையோட்டம் பெரிய விசேடமாகத் தெரியப்போவதில்லை. என்றாலும் வாய் நிறைய சிரிக்க வைக்கவும் இந்தத்திரைப்படம் தவறவில்லை. பன்டாவுக்கு குரல் கொடுத்த ஜக் பிளக்கை எனக்கு பொதுவாகாப் பிடிப்பதில்லை; ஆனால் இந்தப்படத்தில் அவரைத்தவிர வேறு யாரும் இந்தக் கரடிக்கு இவ்வளவு  உயிரூட்டியிருக்க முடியாது!

சந்தோஷமான 92 நிமிடங்கள்; நிச்சையமாக  ஒரு குடும்பத்திற்கான நகைச்சுவை. பத்துவயது சிறுவர்கள் இந்த பன்டா கரடியோடு காதலில் விழுவார்கள்!

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.