திரை விமர்சனம்

ஜூலை 2, 2008

குங்பூ பான்டா – 1 1/2 மணி நேர திகட்டாத நகைச்சுவை

குங்பூவை ஏதாவது ஒரு மிருகத்துடன் பொருத்தி பார்க்க விரும்பினால், நீங்கள் எந்த மிருகத்தை தெரிவு செய்வீர்கள்? – நிச்சயமாக தின்று தின்று வண்டி வைத்த ஒரு பன்டா கரடியை அல்ல, சரிதானே? இந்த காட்டூன் படத்தில் அதைத்தான் தெரிவு செய்திருக்கிறார்கள் – விளைவு? கதைக்கமுதலே சிரிக்க வைக்கிற ஒரு கதாபாத்திரம். அதற்காக கதைவசனமே இல்லை என்றோ, அது சிரிப்பை வரவளைக்கவில்லை என்பதோஇல்லை. படம் 1 1/2 மணி நேரமும் வயிறு குலுங்க வைக்கிறது.

படத்தின் மூலக்கதை என்னவோ பெரிதாகப் புதிதில்லை – குங்பூவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு குண்டு பன்டா கரடியொன்று குங்பூ வல்லுணராக வருவதாகப் பகற் கனவு காண்கின்றது. இதே நேரத்தில் ஒரு கெட்ட குங்பூ வல்லுணரான பனிச்சிறுத்தையொன்று சிறை உடைப்புச் செய்கிறது. அதை தடுத்து நிறுத்த ஒரு வீரனைத்தெரிவு செய்ய வேண்டிய தருணத்தில் எமது பன்டா கரடி தவறுதலாக நுழைந்ததில் அது அந்த வீரனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுவிடுகிறது. அது குங்பூ வல்லுணராக மாறியதா, அந்த பனிச்சிறுத்தையை தடுத்து நிறுத்தியதா என்பதே படம்.

நீங்கள் நிறையக் காட்டூன் படங்கள் பார்ப்பவரானால், இந்தப்படத்தின் திரையோட்டம் பெரிய விசேடமாகத் தெரியப்போவதில்லை. என்றாலும் வாய் நிறைய சிரிக்க வைக்கவும் இந்தத்திரைப்படம் தவறவில்லை. பன்டாவுக்கு குரல் கொடுத்த ஜக் பிளக்கை எனக்கு பொதுவாகாப் பிடிப்பதில்லை; ஆனால் இந்தப்படத்தில் அவரைத்தவிர வேறு யாரும் இந்தக் கரடிக்கு இவ்வளவு  உயிரூட்டியிருக்க முடியாது!

சந்தோஷமான 92 நிமிடங்கள்; நிச்சையமாக  ஒரு குடும்பத்திற்கான நகைச்சுவை. பத்துவயது சிறுவர்கள் இந்த பன்டா கரடியோடு காதலில் விழுவார்கள்!

6 பின்னூட்டங்கள் »

  1. இன்னமும் திரைப்படத்தைப் பார்க்கவில்லை… விமர்சனமும் வாசிக்கவில்லை காரணம் விரைவில் திரைப்பைடத்தைப் பார்க்க வேண்டும். ட்ரெயிலர் பார்த்தேன் அதுவே கடும் சிரிப்பூட்டும் விதமாக இருந்தது!

    பின்னூட்டம் by mayooresan — ஜூலை 2, 2008 @ 3:18 பிப | மறுமொழி

  2. உங்களைப்போல படக்கதை முழுவதையும் நான் விமர்சனத்தில் சொல்வது இல்லை. ட்ரெயிலரில் வெளிப்படுத்தப்படாதது ஒன்றையும் நான் சொல்லவில்லை. எனவே நீங்கள் எனது விமர்சனத்தை படிப்பதில் ஒரு தடையுமில்லை. 😀

    பின்னூட்டம் by bmmaran — ஜூலை 2, 2008 @ 3:56 பிப | மறுமொழி

  3. mayooresan படிக்காமல் சென்றதுக்குக் காரணம் எக்கச்செக்க எழுத்துப் பிழைகள்! பன்டாவா? இல்லை பான்டாவா? இல்லை பாண்டாவா? வல்லுணர் கண்டிப்பா தப்பு. வல்லுநர் என்று நினைக்கிறேன்.

    பின்னூட்டம் by bmurali80 — ஜூலை 4, 2008 @ 3:18 முப | மறுமொழி

  4. எதுக்குப்பா அநியாயத்துக்கு என்பெயரை இழுக்கிறீங்க?

    இப்ப விமர்சனம் வாசித்தேன். சுருக்கமாக இருந்த்து. பக்கம் பக்கமாக பலரும் விமர்சனம் எழுதும் காலத்தில் இந்த சின்ன விமர்சனம் நச்!

    பின்னூட்டம் by mayooresan — ஜூலை 4, 2008 @ 4:39 முப | மறுமொழி

  5. எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும். 😦 திருத்தியதற்கு நன்றி 🙂

    பின்னூட்டம் by அனாமதேய — ஜூலை 4, 2008 @ 12:53 பிப | மறுமொழி

  6. சென்ற வார இறுதியில் MC யில் இந்த திரைப்படத்தைப் பார்த்தேன். நல்ல சனமாக இருந்த்து. அருமையான திரைப்படம். எந்த வயதுக்காரரையும் வளைத்துப்போடக்கூடிய திரைப்படம். அருமை.

    பின்னூட்டம் by mayooresan — ஓகஸ்ட் 5, 2008 @ 1:10 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: