திரை விமர்சனம்

ஜூலை 16, 2008

குருவி

Filed under: தமிழ்த் திரைப்படம் — Nilofer Anbarasu @ 1:33 முப

கல் குவாரியில் அடிமை தொழிலாளிகளாக சிக்கித்தவிக்கும் தன் அப்பாவையும் அவருடன் உள்ள மற்றவர்களையும் மீட்பதற்காக சுமன், ஆஷிஸ் வித்யாதிரி, ‘கடப்ப’ ராஜா, சூரி போன்ற வில்லன்களுடன் மோதும் கதைதான் குருவி. ஆரம்பத்தில் மாளவிகா, விவேக், பாடல் என்று அமர்களமாக ஆரம்பிக்கும் படம் போக போக படு போர். பல இடங்களில் அப்படியே கில்லியை நினைவு படுத்துகிறது காட்சிகள்.
ஒரு வெற்றிப்படம் கொடுத்த கூட்டணியினர் மீண்டும் இணையும் போது பழைய படத்தின் சாயல் கொஞ்சம் கூட இல்லாமல் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால் இங்க வலுக்கட்டாயமாக சேர்த்திருக்கிறார்கள். 80% படத்தில் கதை/காட்சியமைப்பு அப்படியே கில்லியை நினைவு படுத்துகிறது. அநியாயத்துக்கு செண்டிமெண்ட் பார்த்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு சில…..
 1. கில்லியில் கபடி ரேஸ் முடிந்து கோப்பை வாங்கியவுடன், கதை, திரைக்கதை இயக்கம் தரணி என்று பெயர் வரும். இதில் கபடிக்கு பதில் கார் ரேஸ் அவ்வளவுதான் வித்தியாசம்.
 2. இரண்டு படத்திலும் போட்டியில் ஜெயித்தவுடன் பாடல்.
 3. இதிலும் விஜயின் பெயர் வேலு. அதில் சரவனவேலு இதில் வெற்றிவேலு.
 4. ‘அப்படி போடு’ பாடலுக்கு பதில் ‘மொல மொல’ பாடல்.
 5. ஆடியோ casset வெளியிட்ட இடம் Little Flower ஸ்கூல்.
 6. படம் ரிலீஸ் ஆனா நாள் அதே சனிக்கிழமை.
 7. இரண்டு படத்திலும், இடைவேளைக்கு முன்பு த்ரிஷாவை இழுத்துக்கொண்டு ஓடுவது. அதை தொடர்ந்து வரும் chasing காட்சிகள்.

இடைவேளை வரை படத்தை காப்பாற்றும் விவேக் பின்பாதியில் ஒரு காட்சியில் கூட இல்லாமல் போனது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் படு கேவலம். விஜய் மாடியில் இருந்து குதித்து, கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ரயில்வே track அருகில் landஆவது மிகப்பெரிய்ய அபத்தம். அதிலும் trainனின் வேகத்திற்கு ஓடுவது செம்ம காமெடி. எதை எடுத்தாலும் பார்ப்பார்கள் என்று எடுத்திருக்கிறார்கள். ஒரு லேப்டாப்ல் மொத ரகசியத்தையும் வைத்திருப்பது, அதன் password தெரியாமல் வில்லன்னும் விஜய்யும் முழிப்பது, e-mailலில் விஜய் அனைத்து ரகசியத்தையும் போலிசுக்கு அனுப்புவது, அங்கங்கே webcam வைத்திருப்பது போன்றே சீரியஸ் ஆனா காட்சிகள் கூட காட்சி அமைப்பால் காமெடி ஆகிப்போனது. வில்லன்கள் அனைவரும் காட்டு தனமாக கத்துகிறார்கள், இந்த நிலை எப்போதுதான் மாறுமோ. Realistic வில்லன்களை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. என்னக்கு தெரிந்து ‘கனா கண்டேன்‘ படத்தில் பிரிதிவிராஜ் வில்லன் ரோலில் அழகாக நடித்திருப்பார்.

தியேட்டரில் கேட்ட சில கமெண்ட்ஸ்…

 1. இத்தனை வில்லன்கள் இருந்தும் ஒருத்தன் கூட குருவி சுட கூட லாயக்கில்லை.
 2. இந்த படத்த Dhoni வேற பார்தானம், அதான் last மேட்ச் தோத்துட்டானுங்க.
 3. மச்சான் கன்ன மூடிக்க, விஜய் மேலிருந்து குதிக்க போறான், எங்க போய் land ஆகா போறான்னு தெரியல.
 4. விஜயகாந்த் படத்தையே முந்திட்டானுங்க.

என்னதான் விளம்பர படுத்தினாலும் படம் ஓடுவது ரொம்ப சிரமம். விவேக் மற்றும் பாடலுக்காக 40 நாள் ஓடினாலே பெரிய விஷயம். சீக்கிரமே கலைஞர் டி.வில படத்த பாக்கலாம்.

—-
Nilofer Anbarasu
http://kick-off.blogspot.com

4 பின்னூட்டங்கள் »

 1. GOOD FILMS VIJAY

  பின்னூட்டம் by SERAN — ஜூலை 19, 2008 @ 1:43 பிப | மறுமொழி

 2. எப்பத்தான் விஜய் தன் படங்களை மாத்தி எடுப்பாரோ தெரியாது… இப்படியே போனா அப்புறம் இவருக்கு பாய் பாய் சொல்ல வேண்டியதுதான்.

  பின்னூட்டம் by mayooresan — ஜூலை 22, 2008 @ 10:14 முப | மறுமொழி

 3. தியேட்டரில் கேட்ட கமென்ட்ன்ஸ் அந்தமாதிரி!!! 😀

  பின்னூட்டம் by bmmaran — ஜூலை 23, 2008 @ 8:12 பிப | மறுமொழி

 4. romba nalla erukku padam

  பின்னூட்டம் by guru prasad — ஜூலை 25, 2008 @ 11:37 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: