திரை விமர்சனம்

ஜூலை 21, 2008

Wall-E: ஒரு காட்டூன் classic

Wall-E பிக்சார் (Pixar) காட்டூன் படங்கள் ஒவ்வொன்றுமே காட்டூன் படங்களின் எல்லையை முட்டிப்பார்ப்பதாகவே இருக்கும் (இன்னமும் நீங்கள் “finding nemo” “incredibles” படங்களைப் பார்க்கவில்லை என்றால், முதலில் அதைச்செய்யுங்கள்!!); Wall-E அந்த எதிர்பார்ப்பை நிவர்த்திசெய்ததுமட்டுமல்ல, அதையும் தாண்டிச்சென்றுவிட்டது. போர்வைக்கு ஒரு சிறுவர்களுக்கான காட்டூன் படமாகத்தோற்றம் தந்தாலும், உள்ளுக்குள் Wall-E வெவ்வேறு முகங்களைக்காட்டுகிறது: ஒரு விஞ்ஞான கற்பனை (Sci-Fi) கதை, மனிதத்துவம் (humanity) பற்றிய ஒரு கதை, ஒரு காதல் கதை, இப்படியாக Wall-Eயை பலவிதமாகப் பார்க்கலாம்.  அந்தளவு போகவிருப்பமில்லை என்றால் நல்லதொரு நகைச்சுவை படமாகவே நீங்கள் இதை எடுத்துக்கொள்ளலாம் – படம் முழுக்க பட அரங்கத்தில் இருந்துகொண்டு வாய்விட்டு சிரித்துக்கொண்டிருந்தேன்.

இற்றைக்கு 700 வருடங்களுக்குப்பின் கதை நடக்கின்றது. பூலோகம் மனிதர்களின் குப்பையால் நிரம்பிப்போனதால், மனிதகுலம் பூமியை கைவிட்டுவிட்டு மாபெரும் விண்கப்பலொன்றில் குடியேறிவிட்டது. பூமியை சுத்தம் செய்யவென இங்கு தங்கி நிற்பது ஒரு ரோபோட் (robot) குழுவொன்று. மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக பூமியை மறந்துவிட, தங்கி நின்ற ரோபோட்களில் ஒவ்வொன்றாக செயலிழந்துவிட, கடைசியாக ஒற்றைக்கையாக பூலோகத்தை சுத்தம் செய்துகொண்டிருப்பது எமது கதாநாயகன்: Wall-E. குப்பைகளிலிருந்து எடுத்த பொருட்களிலிருந்து படித்ததிலிருந்து தன்னாலேயே ஒரு குணாதியத்தையும்  (personality) கொண்டிவிடுகிறது. மனிதனிற்கும் பூமிக்குமான உறவை மீண்டும் கட்டியெளுப்ப Wall-E எவ்வாறு உதவுகிறது என்பதுதான் படம்.

கிட்டத்தட்ட படத்தின் முதல் 40 நிமிடங்களிற்கு சொல்லும்படியாக கதைவசனமே இல்லை! என்றாலும் சிரிப்புக்கும் “ஆ…”, “ஊ…”வுக்கும் திரையரங்கத்தில் குறைவிருக்கவில்லை! 1995ல் Lion King பார்த்தபோது இரு மிருகங்களிற்கிடையில் காதல் மலர்வதை எவ்வாறு அருமையாகக் காட்டியிருக்கிறார்கள் என்று எண்ணி வியந்தேன். இங்கே இரண்டு ரோபோட்களுக்கிடையில் காதலை மலர விட்டிருக்கிறார் – கதைவசனமேயில்லாமல்!! Wall-Eஇன் காதலி Eveவை வடிவமைக்க Apple iPod,iPhone,iMac வடிவமைத்தவரின் உதவியை நாடியிருக்கிறார்கள்; விளைவு: ஒரு super-cute ரோபோட், ஆனால் எடுத்தவுடன் அடிப்பன் என்ற ஒரு குணாதியத்துடன். பயங்கரப் பகிடி!!! சந்தர்ப்பம் கிடைத்தால் திரையரங்கத்திலேயே பாருங்கள் – Pixar படங்கள் அதற்குத்தகுந்தவைதான்.

1 பின்னூட்டம் »

  1. வாசிக்கும்போதே பார்க்கவேண்டிய ஆர்வம் வந்துட்டுது….
    AI திரைப்படம் ஞாபகத்திற்கு வருது!

    பின்னூட்டம் by mayooresan — ஜூலை 22, 2008 @ 10:12 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: