திரை விமர்சனம்

ஜூலை 23, 2008

Batman Begins (2005)

“Batman: The Dark Knight” படத்தைப் பார்க்க முதல் அதன் முந்திய பாகம் “Batman Begins” பற்றி எழுதிவிட்டுப்போகலாம் என்று பார்க்கிறேன். நீங்கள் ஒரு ஆக்சன் பட ரசிகர் என்றால் “Batman Begins” கட்டாயமாக பார்க்கவேண்டிய ஒரு படம். Batman பற்றி எல்லாருக்கும் தெரியும்; 1989-1997 காலப்பகுதியில் 4 batman திரைப்படங்களும் வெளிவந்திருக்கின்றன. இவவாறு இருக்கையில் இந்தப்படத்தில் என்ன விசேசம்?

முதலாவது கதையோட்டம்: “Batmag Begins”, batman வரிசைக்கு மீள் உயிர் (reboot என்று சொல்வார்கள்) தந்திருக்கிறது. மிகவும் ஆரம்பத்திலிருந்து Batman எவ்வாறு உருவாகிறார், அவரது குணம் என்ன, பலம் என்ன, பலவீனம் என்ன என்று Batmanஇன் ஒவ்வொரு பாகத்தையும் துல்லியமாகவும், புத்திசாலித்தனமாகவும், முக்கியமாக விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். Batmanஐ ஒரு காமிக் புத்தக superhero ஆக வடிவமைக்காமல், மிகவும் நம்பகத்தன்மையோடு காட்டியிருக்கிறார்கள்.

"Tumbler"

அடுத்தது கதாபாத்திரங்கள்: ஹாலிவூட்டின் பிரபல்யங்களையெல்லாம் நீங்கள் இதில் சந்திக்கலாம். எனினும் இவர்கள் பகட்டுக்காக வரவில்லை. படத்தில் வரும் அனைவருக்கும் ஆணித்த்ரமான கதாபாத்திரங்கள்; அதில் அவர்கள் தங்கள் திறமைகளைக் கொட்டியிருக்கிறார்கள். Margan Freeman ஒரு படத்திலிருந்தாலே அவருக்காகவே அந்தப் படத்தைப் பார்க்கலாம். தமிழில் நாகேஷ் அல்லது நாசர் போல…

கடைசியாகத் தொழில்நுட்பம்: Batmanஇன் ஒவ்வொரு அங்கங்களிற்கும் (உடை, செட்டை, காது, கத்தி) செயற்பாட்டிற்கும் (விஞ்ஞான) விளக்கம் தர முயற்சித்திருக்கிறார்கள். படத்தில் பலராலும் பேசப்பட்டது Batmobile – Batmanஇன் கார். “Tumbler” என்று செல்லப்பெயர் கொடுக்கப்பட்ட இது முன்னைய படங்களைப் போல ஒரு பொய்க்காரில்லை; இது ஒரு நிஜமாக வடிவமைக்கப்பட்ட, நிஜமாக தொழில்படுகின்ற ஒரு கார். இதன் வடிவமைப்பு விபரண்த்திற்து அப்பாற்பட்டது. படத்தின் கதைவசனத்திலிருந்து கடன் எடுப்போமானால்:
police officer talking to walki talkie: “at least tell me what it looks like” [batmobile whizzes past, and after staring at it] “Never mind”

“The Dark Knight” படத்தை பார்ப்பதற்கு நீங்கள் தயார்படுகிறீர்கள் என்றால், முதலில் “Batman Begins” ஐ பாருங்கள். செலவழிக்கும் நேரத்திற்கு கவலைப் பட மாட்டீர்கள்.

4 பின்னூட்டங்கள் »

 1. அருமையான திரைப்படம். இரண்டாம் பாகம் இன்னமும் பார்க்கவில்லை. இங்கு இலங்கையில் வெளியாகாத காரணத்தால் கொஞ்ச காலம் கழிந்து திரைக்கு வந்த்தம் பார்ப்பதா இல்லை ரொடன்டில் இறக்குவதா என்று சின்ன குளப்பம் 😉

  பின்னூட்டம் by மயூரேசன் — ஜூலை 24, 2008 @ 11:17 முப | மறுமொழி

 2. இங்கு ரொரொன்டோவில் “The Dark Knight”ஐ IMAX திரையரங்கில் பார்க்கலாம்; இது சாதாரண் திரையரங்கைவிட பலமடங்கு பெரியது – இதன் திரை கிட்டத்தட்ட 5 மாடி கட்டிடம் அளவு உயரமானது, 14,000W ஒலியமைப்பு! நுளைவுக்கட்டணமும் அதற்கேற்றவாறு சற்று அதிகம். நேற்று அதில்தான் இந்தப் படத்தை பார்ப்பம் என்று கிள்ம்பினால், ticket எல்லாம் வித்துமுடிந்துவிட்டது!! இரவு 10 மணிக் காட்சிக்கான நுளைவு 6.30க்கே வித்துமுடிந்து விட்டது!! படம் இங்கே அவ்வளவு சக்கை போடு போடுகின்றது. பொறுத்து அடுத்த கிழமை படத்தைப் பார்ப்பதென்று தீர்மானித்திருக்கின்றேன்!! 😦

  பின்னூட்டம் by bmmaran — ஜூலை 24, 2008 @ 4:36 பிப | மறுமொழி

 3. http://www.ularal.com/the-dark-knight/

  பின்னூட்டம் by ரவிசங்கர் — ஜூலை 24, 2008 @ 5:28 பிப | மறுமொழி

 4. நல்ல review நண்பரே.
  சாதாரணமாயிருக்குமென்று நினைத்து பார்க்க தொடங்கி சூப்பராக போன படம்.
  பார்த்து முடித்ததும் தியேட்டரில் பார்க்க கிடைக்கவில்லையே என ஏங்க வைத்தது.

  //இங்கு இலங்கையில் வெளியாகாத காரணத்தால் கொஞ்ச காலம் கழிந்து திரைக்கு வந்த்தம் பார்ப்பதா இல்லை ரொடன்டில் இறக்குவதா என்று சின்ன குளப்பம் //

  Liberty க்கு வருமென்று கூறினார்கள். தினமும் etickets ல் செக் பண்ணுகிறேன். கண்டிப்பாக தியேட்டரில் பார்க்கவும்.

  சுபாஷ்

  பின்னூட்டம் by சுபாஷ் — ஓகஸ்ட் 10, 2008 @ 5:47 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: