திரை விமர்சனம்

ஜூலை 23, 2008

Get Smart

Steve Carelஐ ஹாலிவூட்டின் புதிய Bill Murray (அல்லது, Jim Carrey) என்று சொல்லலாம். (Bill Murray அல்லது Jim Carrey யார் என்று தெரியவில்லையென்றால் நான் ஒன்றும் செய்ய இயலாது! :-D) மிகவும் சிக்கலான, சிலவேளைகளில் குழந்தைத்தனமான, முகபாவங்களால் நகைச்சுவையை கொண்டுவருவதில் Steve Carel ஒரு விண்ணர்! அவருடன் ஒரு புத்திசாலித்தனமான நகைச்சுவை நிறைந்த உரைநடையையும் இணைத்துவிட பிறக்கிறது வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்ற “Get Smart”.

Maxwell Smart ஒரு ரகசிய உளவு நிறுவனத்தில் ஒரு தகவல் ஆராய்வாளர். இவரின் நீண்ட நாள் ஆசை ஒரு ஒற்றனாக வேலையாற்றுவது. என்றாலும் ஆராய்வாளர் என்ற பணியில் இவரின் பணி இணையற்றது என்பதால் இவரை ஒற்றனாக பதவியேற்க இவரது நிறுவனம் தயாரில்லை. இவ்வாறான ஒரு நாளில், இவரது நிறுவனத்தின் தகவல் களஞ்சியம் எதிரிகளால் உடைக்கப்பட்டு நிறுவனத்தின் ஒற்றர்கள் பற்றிய தகவல்கள் எல்லாம் சந்தைக்கு வந்துவிடுகின்றன. இதனால் களத்தில் இருக்கும் ஒற்றர்கள் எல்லாம் மேசை வேலைக்கு வந்துவிட, எமது கதாநாயகனின் ஒற்றனாக செயற்படவேண்டுமென்ற நெடுநாள் ஆசை நிறைவேறுகிறது. இவருடன் இணந்து செயற்பட, அண்மையில் உருமாற்றதிற்குள்ளாகிய Agent 99. Agent 99 ஆக வருவது super-hot Anne Hathaway.  இவர்கள் எவ்வாறு ஒரு அணுகுண்டு ஆபத்திலிருந்து அமெரிக்க ஜனாதிபதியைக் காப்பாற்றுகிறார்கள் என்பது கதை.

படம் பார்க்க முன்பு நினைவில் கொள்ளவேண்டியது, இது ஒரு seriousஆன படம் அல்ல; இது ஒரு நகைச்சுவைப் படம். எனவே படத்தின் கதையில் இருக்கும் ஓட்டைகளை நீங்கள் கண்டுகொள்ளக் கூடாது. படத்தை பார்த்தோமா, வாய் குலுங்கச் சிரித்தோமா என்றுகொண்டு வரவேண்டியதுதான். அதற்கு நீங்கள் தயார் என்றால் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் சந்தோசமாக செலவழிக்கலாம். Anne Hathawayயை திரையில்தான் பார்க்க வேண்டும் என்று ஒரு தவனம் இல்லை என்றால், கொஞ்சம் பொறுத்திருந்து DVDயில் பார்க்கலாம்.

3 பின்னூட்டங்கள் »

 1. இந்த நடிகர்தானே Office எனும் தொடரில வருகின்றார்?
  Dan in Real Life எனும் திரைப்படமும் இவர்தானே நடித்தார்.. எல்லாம் டொடன்டுக்கு சமர்ப்பனம்.

  பின்னூட்டம் by mayooresan — ஜூலை 25, 2008 @ 5:39 முப | மறுமொழி

 2. ஓம், அவர்தான் இவர். Office தொலைக்காட்சித்தொடரோடுதான் இவர் பிரபல்யம் அடைந்தார். வெள்ளித்திரையில் இவரது முதல் வெற்றிப்படம்: “40 years old virgin”. Dan In Real Life, Evan Almighty இவரது வேறுசில படங்கள்.

  பின்னூட்டம் by bmmaran — ஜூலை 25, 2008 @ 1:40 பிப | மறுமொழி

 3. 40 Year old virgin சில காலத்துக்கு முன்னர் பார்த்தது… நம்ப முடியாத ஒரு நகைச்சுவைக் கதை.

  பின்னூட்டம் by mayooresan — ஓகஸ்ட் 1, 2008 @ 6:26 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: