திரை விமர்சனம்

ஜூலை 24, 2008

Hancock

Hancock ஒரு வித்தியாசமான படம். அதை அப்படியாகவே விளம்பரப்படுத்தியிருக்கலாம் –  அதைவிட்டுவிட்டு படத்தின் trailers எல்லாம் இதை ஒரு நகைச்சுவைப் படமாக சித்தரித்திருக்கின்றன. விளைவு சற்றே ஏமாற்றம். படத்தின் பல்வேறு trailersகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றால், படத்தில்வரும் நகைச்சுவைக் கட்டங்களையெல்லாம் (பெரும்பாலும்) பார்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

படம் ஒரு superman மாதிரியான சக்திகொண்ட ஒரு மனிதனைப் (Hancock) பற்றியது. தனது சக்திகளைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்யவிரும்பினாலும், அது மீண்டும் மீண்டும் பொதுமக்களின் உடைமைகளிற்கு பெரும் அழிவை ஏற்படுத்துவதிலேயே சென்றுமுடிகிறது. அத்துடன் தனது வாழ்க்கையின் பெரும் பகுதி பற்றிய ஞாபகத்தையும் இவர் இழந்து நிற்கிறார். தற்செயலாக ஒரு public relation (PR) manager ஒருவரை இவர் காப்பாற்ற, அதற்கு பிரதியுபகாரமாக Hancockஇன் வெளித்தோற்றத்தை (image) மக்கள் மத்தியில் உயர்த்திக்காட்டவென இந்த PR மனிதர் திட்டம் தீட்டுகிறார். எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருக்கும் அதே வேளையில் Hancock அந்த PR மனிதரின் மனைவியில் மேல் மையல் கொள்கிறார். இது எவ்வாறாக  அதியமான திருப்பங்களை கொண்டு வருகின்றது என்பது மிகுதிக் கதை!

படத்தில் வரும் மூன்று முக்கியபாத்திரங்களின் நடிப்புத்திறனினால் படம் காப்பாற்றப் படுகிறது. ஆனால் எழுத்தாளரும், இயக்குனரும் படத்தை இடைக்கிடை குழப்பியிருக்கிறார்கள். நகைச்சுவைப் படமா, காதல் படமா, superhero படமா என்று பார்க்கும் எங்களுக்குத் தடுமாற்றம்! நீங்கள் Will Smith அல்லது Charlize Theron ரசிகர் என்றால் இதை கட்டாயம் ரசிப்பீர்கள். என்றாலும் DVDக்காகப் பொறுத்திருப்பது நல்லது என்று நினைக்கிறேன். படம் என்னவோ மோசமானது இல்லை; குறைவான எதிர்பார்ப்புடன் போனால், இதை நீங்கள் மிகவும் ரசிக்கலாம். படத்தின் கதையில் வரும் ஒரு திருப்பம் மிகவும் நன்றாக இருக்கும். அதை மிகவும் ரகசியாமாக வைத்திருந்தது நல்ல விடயம்!!

6 பின்னூட்டங்கள் »

 1. சுணங்கிக் கிடந்த திரை விமர்சன வலைப்பதிவு உங்கள் வரவால் புத்துணர்ச்சி பெற்றிருக்கு 🙂

  பின்னூட்டம் by ரவிசங்கர் — ஜூலை 24, 2008 @ 5:27 பிப | மறுமொழி

 2. என்னத்தை சொல்ல: நான் ஒரு படப் பைத்தியம்!! 😀

  பின்னூட்டம் by bmmaran — ஜூலை 24, 2008 @ 7:25 பிப | மறுமொழி

 3. Charlize Theron சில சமயம் ரொம்ப அழகாயிருக்கிறார். சில இடங்களில் படு சுமாராய் இருகிறார். Italian job ல் கிறங்கடித்த அந்த பெண்ணா இது என்று கேட்குமளவுக்க்கு சில இடங்களில் இருக்கிறார்.

  படம் என்னைப் பொறுத்தவரை ஒரு பெரிய மொக்கை. சுத்தமாய் பிடிக்கவே இல்லை.

  பின்னூட்டம் by nandha — ஜூலை 26, 2008 @ 10:53 முப | மறுமொழி

 4. Charlize Theron ஒரு South African Model. பொதுவாக மிகவும் அழகானவர். நீங்கள் சொன்னதுபோல் Italian Jobல் மிகவும் அழகாய் இருப்பார். இந்தப் படத்தில் சில காட்சிகளில் வேண்டுமென்றே அவரின் அழகைக் குறத்துக்காட்ட முயற்சித்திருக்கிறார்களோ என்று சந்தேகப்படுகிறேன். இவர் Oscar வாங்கிய Monster படத்தைப் பார்தீர்களானால் அது இவரா என நம்பமுடியாது, அந்தளவுக்கு அவலட்சணமாக இருப்பார்!

  படம் எனக்குப் பிடித்திருந்ததா இல்லையா என்று என்னால் இன்னமும் சொல்லமுடியவில்லை!! 😦

  பின்னூட்டம் by bmmaran — ஜூலை 26, 2008 @ 1:42 பிப | மறுமொழி

 5. 2 நாளுக்கு முன்னர் இந்தப்படத்தை Divx Rip பார்த்தேன். தியேட்டரில்தான் பார்க்கவேண்டுமென்று trailer பார்த்ததும் முடிவெடுத்து கடைசியில் கம்பியுட்டரில்தான் பார்க்க கிடைத்தது. Interesting ஆகத்தான் இருக்கு.
  1. தியேட்டரில் போய்த்தான் பார்க்கவேண்டுமென்பதற்குஎதுவுமில்லை.
  2. 2ம் தரம் பார்க்கவும் தோன்றவில்லை.
  3. Charlize Theron சூப்பர். ஆனா பழைய அழகு மிஸ்ஸிங்.
  வில் லுக்காக ஒரு முறை வீட்டிலேயே பார்க்கலாம்

  // நகைச்சுவைப் படமா, காதல் படமா, superhero படமா என்று பார்க்கும் எங்களுக்குத் தடுமாற்றம்! நீங்கள் Will Smith அல்லது Charlize Theron ரசிகர் என்றால் இதை கட்டாயம் ரசிப்பீர்கள். என்றாலும் DVDக்காகப் பொறுத்திருப்பது நல்லது என்று நினைக்கிறேன். //

  முற்றிலும் உண்மை.

  // படத்தின் கதையில் வரும் ஒரு திருப்பம் மிகவும் நன்றாக இருக்கும்.//

  இதுக்குப்பிறகாவது சூடெழும்பும் என்றுதான் நினைத்தேன். அதுவும் அவர்களிருவரிக் சண்டைக்கப்புறம். ஆனால் தமிழ்ப்பட திருப்பம் போல சொதப்பல்.

  சரியான விமர்சனம் தோழரே.
  தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்
  சுபாஷ்

  பின்னூட்டம் by சுபாஷ் — ஓகஸ்ட் 10, 2008 @ 5:31 பிப | மறுமொழி

 6. படம் மோசம் இல்லை. ஆனால் இந்த திரைப்படம் வில் ஸ்மித்திற்குரிய திரைப்படம் அல்ல. அவரிடம் அதிகமாக எதிர்பார்த்து சென்றால் நன்றாக ஏமாற்றிவிட்டார். 😦

  வேறு சிலர் நடித்து வெளிவந்திருந்தால் இந்த திரைப்படம் பார்த்திருக்கலாம்…

  மொத்த ஏமாற்றம் இந்த திரைப்படம்.

  பின்னூட்டம் by mayooresan — ஓகஸ்ட் 15, 2008 @ 12:50 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: