திரை விமர்சனம்

ஓகஸ்ட் 2, 2008

The Dark Knight: ஆக்ஸன் படங்களிற்கு ஒரு புதிய பரிமாணம்

Filed under: திரைப்படம் — bmmaran @ 8:58 பிப

எல்லாரும் ஆகா, ஓகோ என்று பாராட்டிய படத்திற்கு போனால் பொதுவாக அது அவ்வளவு தூரம் எழுப்பமாக இருக்காது. அதையும் மீறி பிரமிக்க வைக்கிறது “The Dark Knight” (Batman பாகம் 2)!! எனது நண்பன் படம் முடிந்தவுடன் கூறியது போல: “It’s too good to be true!” – நம்பமுடியாத அளவுக்கு வெழுத்து வாங்கியிருக்கிறார்கள்.

முதலாவது பாகத்தைப் (Batman Begins) போலன்றி, கதையோட்டத்தில் நேரத்தை பெரிதாக செலவழிக்கவில்லை. எடுத்தவுடனேயே அடிதடி, உடைப்பு, நொருக்கு என்று போய்விட்டார்கள். ஒரு கொடூரமான, மனநோய்வாய்ப் பட்ட ஒரு கொலைகாரன்; ஏதோ ஒரு பழைய விபத்தினால் முகம் விகாரமடைந்து ஒரு கோமாளி (Joker) வடிவத்தில் உள்ளது. அதையே தனது முத்திரையாகக் கொண்டு Gotham நகரில் அட்டகாசம், அழிவு செய்துகொண்டிருக்கிறான். இந்த ஜோக்கருக்கும் batmanற்கும் இடையிலான போராட்டமே படத்தின் மூலக்கதை.

படத்தை முற்று முழுதாக batmanஇடமிருந்து அபகரித்து விடுகின்றார் ஜோக்கர்!! வாவ்!! என்னவொரு கதாபாத்திரம்!! முன்னைய batman படங்களில் ஜோக்கர் பாத்திரதை பெரிய பெரிய நடிகர்கள் ஏற்றிருந்தனர் (Jack Nicholson, Jim Carrey) – அவர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடுகின்றார் புது ஜோக்கராக வரும் Heath Ledger. இயக்குணர், எழுத்தாசிரியர்களது பங்கும் இதில் நிறைய உண்டு என்றாலும், இந்தக் கதாபாத்திரத்தை தத்துரூபமாக வெளிக் கொண்டுவந்த பெருமை Heath Ledgerற்கே. முகபாவத்தில் மட்டுமன்றி, உடலிலின் ஒவ்வொரு அங்கத்தினாலும் ஜோக்கருக்கு உயிரூட்டியிருக்கிறார் இவர். திரையில் ஜோக்கர் வரும் நேரமெல்லாம் திக், திக் என்று உள்ளது; குலை நடுங்க வைக்கின்ற ஒரு நடிப்பு! ஆஸ்காரை கண்ணை மூடிக்கொண்டு கொடுத்து விடலாம்!!

ஒரேயொரு பாத்திரத்தை மட்டும் வைத்துக்கொண்டு இப்படியொரு வெற்றிப்படத்தை தர முடியாது. படத்தின் மற்றைய அங்கங்களும் ஆணி அடித்தமாதிரி இருக்கின்றன. இயக்குணரிற்கும் ஆஸ்காரிற்கான ஒரு வாய்ப்பு உண்டு. ஒளியமைப்பாளர், இசையமைப்பாளர், சாகச இயக்குணர் என்று எல்லாருமே அவரவர் பணிகளை நச்சென்று செய்திருக்கிறார்கள். சிலகாட்சிகள் எப்படித்தான் அதை எடுத்தார்களோ என்று எண்ணி வியப்படையும் வண்ணம் உள்ளது. Batmanஇன் புதிய வாகனம் Batpod அந்தமாதிரி இருக்கிறது! இதுவொரு உண்மையான வாகனம் என்றோ, அதை ஒரு உண்மையான மனிதன் இயக்கியிருக்கிறார் என்பதையோ நம்பமுடியவில்லை!

நான் இந்த படத்தில் மூழ்கிப் போனதற்கு இன்னொரு காரணம் இதை IMAX திரைய்ரங்கில் பார்த்தது. முதன் முறையாக ஹாலிவூட்டின் வரலாற்றில் IMAX தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படத்தின் பல பாகங்களை ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் (இதற்கு முன் IMAXஇல் திரையிடப்பட்ட படங்கள், சாதாரண முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, பின்பு IMAX திரைக்காக மாற்றப்பட்டன). படத்தின் முக்கியமான ஆக்ஸன் காட்சிகளை 5 மாடி உயரமான திரையில் பார்க்கும்போது படத்தின் உள்ளேயே நாங்கள் போய்விடுகின்றோம்!! இதை என்னவென்றுதான் சாதாரண திரையில் காட்டுகின்றார்களோ தெரியாது! சாதாரண திரையில் இந்தகாட்சிகளின் கிட்டத்தட்ட அரைப் பங்கு வெட்டப்பட்டுவிடும். IMAX திரையில் பார்க்க வசதி இல்லாதவர்களிற்காக நான் வருத்தப்படுகின்றேன்.

படம் இங்கே வட அமெரிக்காவில் சக்கை போடு போடுகின்றது. Batman Begins முழுதாக உழைத்த காசை இது ஒரு கிழமைக்குள் உழைத்துவிட்டதாம்!! நான்கூட வெள்ளி இரவு படத்திற்காக புதன்கிழமை நுழைவுச்சீட்டு வாங்கி, 7 மணிப்படத்திற்கு 6மணிக்குப் போய் வரிசையில் நின்றாலும் எனக்கு முன்னாலேயே முக்கால்வாசி அரங்கம் நிரம்பிவிட்டது! இத்தனைக்கு IMAX நுழைவுச்சீட்டு 15$! படத்தின் பிரபல்யத்திற்கு ஒரு காரணம் ஜோக்கராக வந்த Heath Ledger படத்தை நடித்துகொடுத்து முடிந்த சில மாதத்தில் காலமடைந்ததுவிட்டமை. தற்செயலாக அளவுக்கதிகமாக மருந்து உட்கொண்டமைதான் (accidental overdose of prescribed medicine) இவரின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்பட்டாலும், இது தற்கொலைனென்பது பலரின் அபிப்பிராயம். போதாக்குறைக்கு, ஜோக்கர் பாத்திரத்திற்கு தன்னை தயார்ப் படுதுவதற்காக சில கிழமைகள் விடுதி (hotel) அறையைப் பூட்டிவிட்டு உள்ளேயிருந்தாராம் என்று ஒரு செய்தி வேறு! என்ன காரண்த்திற்காக மக்கள் படத்திற்கு வந்தாலும் Heath Ledger அவர்களை மிகவும் திருப்த்திபடுத்தி அனுப்பிவைக்கின்றார் திரையிலிருந்து.

படத்தில் சரியாக இல்லாத விடயம் என்னவென்றால் கதையில் சில பகுதிகள் அல்லது சில சம்பவங்கள் logicஇல்லாது, நம்ப முடியாத விதமாக இருப்பது. என்றாலும் படம் விறுவிறுப்பாகப் போவதினால் அரங்கத்தில் இருக்கும் வரை இவை உங்கள் சிந்தனைக்கு எட்டப்போவதில்லை! படத்தில் 36 கொலைகள் இருக்கின்றாதாம். என்றாலும் இரத்தம் காட்டப்படவில்லை. எனவே மிகவும் சிறு குழந்தைகளைத் தவிர்த்து குடும்பத்தோடு பார்க்கலாம்; பார்க்கலாம் என்ன, கட்டாயம் பாருங்கள்!!!

“The Dark Knight” IMDB இணைப்பு

2 பின்னூட்டங்கள் »

  1. ம்ம்.. நானும் பார்த்தேன்.. ஆனால் IMAX ல்ததான் பாக்க முடியல.. பரவாயில்லை.. சின்னத்திரையிலேயே நல்லாதான் இருந்தது..

    பின்னூட்டம் by பாலமுருகன்.. — ஓகஸ்ட் 27, 2008 @ 11:15 முப | மறுமொழி

  2. அடியேனும் சவோயில் பார்த்தேன். அட அட அட அட அட என்ன ஒரு நடிகர் அந்த ஜோக்கர். திரையரங்கில் மட்டுமே பார்க்கவேண்டிய திரைப்படம்.

    பட் மொபைல் தன்னைத் தானே அழித்துவிட்டு அதனுள் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளை வெளியனுப்பும். அதில் பட்மான்… தரம் என்றால் அதுதான். தியட்டரில்.. Whoa…. என்று வாய் விட்டுப் பலரும் சொல்லக்கேட்டேன்.

    பின்னூட்டம் by Mayooresan — செப்ரெம்பர் 23, 2008 @ 6:40 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: