திரை விமர்சனம்

ஓகஸ்ட் 4, 2008

Miss Pettigrew Lives for a Day (2008): இதயத்திற்கு குளிர்ச்சி

1939, இரண்டாம் உலகப்போரின் வாயிற்படியில் நிற்கின்றது London. Miss Pettigrew (Frances McDormand) ஒரு நடுத்தர வயதடைந்த, ஒண்டிக்கட்டையான governess – ஒரு குடும்பத்தின் தேவைகளை மேற்பார்வை செய்யும் வேலை (சாதாரண வேலைக்காரியின் வேலையைவிட சற்றே உயர்ந்த பதவி). ஒரு பாதிரியாரால் வளர்க்கப்பட்ட இவர் சாதாரண மக்களின் நெறிகெட்ட வாழ்க்கைகளை ஏற்பதாக இல்லை. தனது கண்ணியங்களை தனது எஜமானர்கள்மீது திணிக்கமுற்படுவதால் இவரை வேலைக்கு எடுக்க எவரும் தயாராக இல்லை. வேலையில்லை, வீடில்லை, சாப்பிடுவதற்கு காசில்லை என்ற நிலையில், புதியவொரு governess வேலையை ‘களவெடுத்துக்கொண்டு’ Delysiaவிடம் வந்து சேருகின்றார் Pettigrew. இளமையின் உச்சக்கட்டத்தில் இருக்கும் வெகுளியான Delysia (Amy Adams) தனது அழகைக் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற முயன்றுகொண்டிருக்கிறாள். சொகுசான வாழ்க்கைகாக உண்மைக் காதலை விட்டுக்கொடுக்க தயாராகவிருக்கும் Delysia, சொகுசான வாழ்க்கை, உண்மைக் காதல் இரண்டையும் இழந்து நின்றாலும், இழந்த தனது உண்மைக்காதலை எண்ணி அதிகம் கவலைப்படும் Pettrigrew – இவர்கள் இருவரும் ஒன்றாக செலவழிக்கும் ஒரு நாளில் எவ்வாறு ஒருவர் வாழ்க்கையை மற்றவர் பாதிக்கின்றார் என்பது கதை.

ஆர்ப்பாட்டமில்லாத ஒரு திரைப்படம். மூலக்கதை அவ்வளவு புதிது இல்லை என்றாலும் படம் எடுக்கப்பட்ட விதம் நன்றாக இருக்கின்றது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேற்கத்தைய பெண்களின் சமூக, மன நிலைப்பாடுகளை படம் எடுத்துக்காட்டுகின்றது. படத்தை ஒற்றக்கையாக நின்று காப்பாற்றுவது Frances McDormand; அழகாக அந்த Oliver Twist மாதிரியான பாத்திரத்திற்கு உயிரேற்றியிருக்கின்றார். Amy Adamsஇன் நடிப்பு கொஞ்சம் அலுப்படிக்கின்றது; அடிக்கடி அவரது “Enchanted” படக் கதாபாத்திரத்தை நினைவு படுத்துகிறது.

இதயத்திற்கு குளிர்ச்சியான படம். உங்கள் காதலர் அல்லது காதலியோடு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

“Miss Pettigrew Live for a Day” IMDB இணைப்பு

8 பின்னூட்டங்கள் »

 1. தொடர்ந்து விமர்சனம் எழுதிக் கலக்குறீங்க. எதிர்ப்பார்க்கவே இல்லை. புதிய ஆங்கிலப் படங்களுக்கு இந்த அளவுக்கு வேற எந்த தமிழ்ப் பதிவிலயும் தொடர்ந்து எழுதிப் பார்க்கல.

  ஒரு வாரத்துக்கு எத்தனை படம் பார்ப்பீங்க 🙂 அதுல எத்தனை திரையரங்குல?

  பின்னூட்டம் by ரவிசங்கர் — ஓகஸ்ட் 4, 2008 @ 9:06 பிப | மறுமொழி

 2. ஒரு நாளில எத்தனையும் பார்ப்பதற்கு நான் தயார் – நேரம்தான் இல்லை. வடிவிறக்கிய படங்கள் நிறைய பார்க்க நேரம் இல்லாமல் தேங்கி நிற்கின்றன. திரையரங்கில் பொதுவாக படம் பார்ப்பது குறைவு, summer காலத்தில் மட்டும் கொஞ்சம் கூடப் பார்ப்பேன். கடந்த ஒரு மாதமாக கிழமைக்கு ஒன்று என்று திரையரங்கத்தில் பார்த்திருக்கிறேன். மற்றப்படி ஒன்று/இரண்டு மாதத்திற்கு ஒன்று என்று பார்ப்பது.

  பின்னூட்டம் by bmmaran — ஓகஸ்ட் 5, 2008 @ 3:24 முப | மறுமொழி

 3. உங்கள் காதலர் அல்லது காதலியோடு
  கடந்த ஒரு மாதமாக படம் பார்ப்பது என்று சொல்லலாமா?

  பின்னூட்டம் by அனாமதேய — ஓகஸ்ட் 5, 2008 @ 11:51 முப | மறுமொழி

 4. இவ்வளவு திரைப்படங்கள் பார்த்து அனைத்துக்கும் விமர்சனம் வேறு.. 😉

  தமிழ் படங்கள் தமிழ்டாரென்.காம் இல் இறக்கிப் பார்ப்பதில்லையா???

  பின்னூட்டம் by mayooresan — ஓகஸ்ட் 5, 2008 @ 12:44 பிப | மறுமொழி

 5. தமிழ் படம் இற்க்கிப்பார்ப்பதுண்டு, நேற்றுக்கூட “பீமா” பார்த்தேன். அனால் நான் தமிழ் படம் பார்க்கிற நேரத்தில் அது பழைய படமாகி விடும். அதுக்கு நான் விமர்சனம் எழுதிப் பிரயோசனம் இல்லை! 😦 தவிர நல்லதொரு தமிழ் படம் ஆடிக்கொருக்கா, அமாவசைக்கொருக்கா என்றுதானே வருகுது!

  பின்னூட்டம் by bmmaran — ஓகஸ்ட் 5, 2008 @ 4:16 பிப | மறுமொழி

 6. -கடந்த ஒரு மாதமாக- தவிர நல்லதொரு தமிழ் படம் ஆடிக்கொருக்கா, அமாவசைக்கொருக்கா என்றுதானே வருகுது!
  கடந்த ஒரு மாதமாக கிழமைக்கு ஒன்று என்று திரையரங்கத்தில் -இதயத்திற்கு குளிர்ச்சியான புதிய ஆங்கிலப்- படம் வருகுது!

  அது சரி, காதலர்-Gayயோ?- அல்லது காதலியோடு படம் பார்ப்பது என்று சந்தேகப்படுகிறேன்???

  பின்னூட்டம் by அனாமதேய — ஓகஸ்ட் 5, 2008 @ 10:18 பிப | மறுமொழி

 7. ஏன், இந்த இணையத்தை ஆண்கள் மட்டும்தான் படிக்கலாம் என்று யாராவது சொன்னார்களா? உங்களது ஆணாதிக்கப்போக்கை வேறு எங்கேயாவது வைத்துக் கொள்ளவும்.

  சரி, கடிக்கிறது என்று புறப்பட்டிட்டீங்கள் போல இருக்குது, அது பிரச்சனை இல்லை, ஆனால் பேரைச் சொல்லிவிட்டு கடிக்கவும்.

  பின்னூட்டம் by bmmaran — ஓகஸ்ட் 6, 2008 @ 12:22 பிப | மறுமொழி

 8. ஏன், படிக்க மட்டும்தான் என்று யாராவது சொன்னார்களா? உங்களது ஆணாதிக்கப்போக்கை வேறு எங்கேயாவது வைத்துக் கொள்ளவும். விமர்சனம் அல்லது ஏன், மறுமொழி பெண்கள் டைப் செய்ய வேண்டுமா?

  பேரைச்?-பெயர்- சொல்லிவிட்டு? மன்னிக்கவும், mic எந்த இடத்திலோ?

  பின்னூட்டம் by அனாமதேய — ஓகஸ்ட் 7, 2008 @ 4:05 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: