திரை விமர்சனம்

ஓகஸ்ட் 4, 2008

Vantage Point (2008): விறுவிறுப்பு, பல கோணங்களில்…

ஒரு சம்பவம் நடக்கும்போது, அவரவர் நிற்கும் இடத்தைப் பொறுத்து, ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தைப் வெவ்வேறுவிதமாகப் பார்க்கின்றார்கள். இந்த ஒவ்வொருவரின் பார்வைக் கோணத்தையும் vantage point என்று சொல்வார்கள். இந்தகோட்பாட்டை வைத்தே இந்த விறுவிறுப்பான படத்தை எடுத்திருக்கின்றார்கள்.

ஸ்பெயினில் ஒரு சர்வதேச கூட்டத்தில் கலந்து கொள்ள வருகின்றார் அமெரிக்க ஜனாதிபதி. இவரைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகின்றது ஒரு பயங்கரவாதக் குழு. இந்தக்கொலை முயற்சி, அதை சூழ்ந்து நிற்கும் மர்மம் இவற்றைச் சுற்றிப் படம் போகின்றது. இந்தக் கொலைமுயற்சியை எட்டுப்பேரின் vantage pointஇலிருந்து காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் எண்ணப்பாடு என்னவோ புதிதானதுதான். என்றாலும் அதை எடுத்தவிதம் கொஞ்சம் அலுப்படிக்கிறது. மொத்தமாக கிட்டத்தட்ட 30நிமிடங்கள்தான் படத்தில் நடக்கும் கதை. என்றாலும் எட்டுப்பேரின் vantage point’ஐக் காட்டுவதற்காக அதை ஐந்து தரம் rewind பண்ணியிருக்கின்றார்கள் – அது கொஞ்சம் சினமூட்டுகின்றது. என்றாலும், ஒவ்வொருக்காலும் rewind பண்ணும்போதும் கதையில் ஒரு புது முடிச்சு விழச்செய்திருப்பது நன்றாக இருக்கின்றது. இந்த rewind பிரச்சனையை விட்டால், படம் மற்றப்படி விறுவிறுப்பாகப் போகின்றது – முக்கியமாக தொடக்கமும், முடிவும். அவ்வளவு பேரை சுட்டு, குண்டு வைத்து கொன்றுவிட்டு, படத்தை முடித்தவிதம் வித்தியாசமாக இருக்கின்றது.

அலுப்பில்லாமல் பார்க்கலாம். படத்தை இணையத்திலிருந்து இறக்குவதாகவிருந்தால், subtitles இருக்கின்றதா என அவதானித்துக்கொள்ளுங்கள். படத்தில் சில பகுதிகள் spanish கொழியில் இருக்கின்றது.

“Vantage Point” IMDB இணைப்பு

6 பின்னூட்டங்கள் »

 1. vantage point spanish கொழியில் vintage point என்று சந்தேகப்படுகிறேன்

  பின்னூட்டம் by அனாமதேய — ஓகஸ்ட் 4, 2008 @ 11:36 பிப | மறுமொழி

 2. மன்னிக்கவும், இடுகைக்கான தலைப்பில் சிறு எழுத்துப் பிழை – அது vintage point அல்ல, vantage point. Vintage என்பது wine உடன் சம்பந்தப் பட்ட ஒரு சொல், அப்பிடி ஒரு சொல்லும் spanish மொழியில் இருப்பதாகத் தெரியவில்லை.

  பின்னூட்டம் by bmmaran — ஓகஸ்ட் 5, 2008 @ 3:18 முப | மறுமொழி

 3. அது மொழியில் அல்ல- spanish கொழியில் இருப்பதாகத் சந்தேகப்படுகிறேன்

  பின்னூட்டம் by அனாமதேய — ஓகஸ்ட் 5, 2008 @ 3:40 முப | மறுமொழி

 4. ஸ்பானில் கொழியா??? மொழியா???

  பின்னூட்டம் by mayooresan — ஓகஸ்ட் 5, 2008 @ 12:45 பிப | மறுமொழி

 5. ஸ்பானில் கொழியா??? மொழியா???
  ஸ்பானில் கோப்பி!

  பின்னூட்டம் by அனாமதேய — ஓகஸ்ட் 5, 2008 @ 3:06 பிப | மறுமொழி

 6. அப்பு, என்ன நடக்குது இங்க?? :-I

  பின்னூட்டம் by bmmaran — ஓகஸ்ட் 5, 2008 @ 4:12 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: