திரை விமர்சனம்

ஓகஸ்ட் 5, 2008

3.10 to Yuma (2007)

Filed under: ஆங்கிலத் திரைப்படம் — Jay Mayu @ 1:08 பிப

கைது செய்யப்பட்ட கொள்ளைக்காரன்

ஒரு பயங்கரமான மலைப்பள்ளத்தாக்கு கொள்ளைக்காரன். அவனுக்காக உயிரையும் விடும் துணிவுள்ள ஏவலர்கள். இவனை கைது செய்யும் சட்ட துறையினர் 3.10 க்கு யூமா செல்லும் புகையிரதத்தில் இவனை ஏற்ற முயற்சிக்கின்றனர். இந்து முயற்சிக்கு துணை புரிய வருகின்றார் டானியல் இவன்ஸ். தனது மந்தையையும் நிலத்தையும் பாதுகாத்துக்கொள்ளவும் தனது குடும்பத்திற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கவும் என்று 200 டாலர்களை இதற்காகப் பெற்றுக்கொள்வதாக ஏற்பாடாகின்றது.

பயனத்தில் வழியை கெள்ளைக்காரனில் மனதின் மறுபகுதியும், இவர்களிற்கிடையிலான ஒரு குழப்பமான நிலைமையையும், இவர்களை தொடர்ந்து வந்து தம் தலைவரை மீட்க முயலும் கூட்டத்தையும் சுற்றிக் கதை சொல்கின்றது. ஒரு கொள்ளைக் காரனாக ரசல் குரோ நடித்திருக்கின்றார். அருமையான நடிப்பு. இவர் நடிப்புக்கு கிளாடியேட்டர் போன்ற திரைப்படங்கள் சாட்சி. முதலில் இந்த கொள்ளைக் காரன் வேடத்துக்கு டொம் குரூஸ் நடிப்பதாக இருந்த்தாம் ஆயினும் அவர் நடிக்கிவில்லை.

200 டாலருக்காக கொள்ளைக்காரனை புகையிரத நிலையம் உள்ள இடத்துக்கு கூட்டிப்போகும் அங்கவீனமான குடும்பத்தலைவராக Christian Bale நடித்துள்ளார். இவர்தான் அண்மைய பட்மான் திரைப்பட நாயகன் என்பதைச் சொல்லித்தெரியவேண்டியத்தில்லை. அமெரிக்க சிவில் யுத்தத்தில் கால் ஊனமான இவரின் நடிப்பும் அருமையாக இருந்ததது.

1 பின்னூட்டம் »

  1. கிறுக்குப்பிடித்த பிர்த்தானிய நடிகர் கூட்டத்தில் Christian Baleஉம் ஒருவர் (அடுத்தது Johnny Depp). தேடித் தேடி வித்தியாசமான பாத்திரங்களில் நடிப்பார். அதற்காக தயார்ப்படுத்தும் விதத்திலும் கிறுத்துதனம் காட்டியிருக்கிறார். 2004ஆம் ஆண்டு “The Machinist” படத்தில் insomnia வருத்தத்தினால் (நித்திரை கொள்ளமுடியாது) பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்திற்கு வருவார். அதற்காக எக்கச்சக்கமாக எடை குறைத்து எலும்பும் தோலுமாக வருவார். அந்தப்ப்டம் எடுத்த 6 மாதத்தில் Batman Beginsஇல் மிகவும் கட்டுமஸ்தான ஒரு இளைஞனாக வருவார்.

    பகிடியென்னவென்றால் ஹாலிவூட்டில் பெரும்பான்மையான சிறந்த நடிகர்கள் UK, அவுஸ்ரேலியா (Russell Crowe), அல்லது கனேடிய நாட்டுக்காரர்!

    பின்னூட்டம் by bmmaran — ஓகஸ்ட் 5, 2008 @ 4:39 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: