திரை விமர்சனம்

ஓகஸ்ட் 10, 2008

The Russell Girl (2008): கைக்குட்டை அவசியம்

Filed under: திரைப்படம் — bmmaran @ 5:14 முப

Hallmark என்று சொன்னால் வாழ்த்து அட்டை செய்யும் நிறுவனம் என்றுதான் பலருக்குத்தெரியும். ஆனால் அது திரைப்படங்களையும் தயாரிப்பதுண்டு. Hallmark திரைப்படங்கள் எல்லாவுமே மிகவும் மென்மையானதாகவும், அன்பு, குடும்பம், சமுகம் என்பவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் இருக்கும். அத்துடன் மனித உணர்வுகளின் வெவ்வேறு பரிணாபங்களையும் கிண்டிப்பார்ப்பதாக இருக்கும். The Russell Girl உம் அவ்வாறாகவே ஒரு மிகவும் மென்மையான ஒரு படம்.

சிறுவயதில் தவறுதலாக செய்த மிகவும் பாரதூரமான ஒரு பிழைக்காக பல ஆண்டுகளிற்குப் பின்பும் மனம் புளுங்கிக்கொண்டிருக்கும் இளம் பெண் Sarah (Amber Tamblyn). இவளின் வாழ்வில் இடியாக வந்து விழுகின்றது தனக்கு இரத்தப்புற்றுநோய் என்னும் செய்தி. தான் சிறுவயதில் செய்த பிழைக்கான பரிகாரம்தான் இது என்று நினைக்குகும் Sarah, நோய்க்கான வைத்தியத்தில் இறங்காது சொந்த ஊரில் இருக்கும் தனது பெற்றோரின் வீட்டிற்கு செல்கின்றாள். இவள் சம்பந்தப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய விபத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது ஊரில் இவளது முன் வீட்டுக்குடும்பம் – முக்கியமாக முன் வீட்டு அம்மா (Jennifer Ehle). தனது நோய்யைப் பற்றி எவரிடமும் கூறாமல், முன் வீட்டு அம்மாக்காரியுடன் சமரசம் செய்யமுனைகின்றாள் Sarah. ஆனால் அந்த அம்மாவோ இவளைக் கண்டாலே செத்தவீடு என்று நிற்கின்றார். Sarahவின் குற்றவுணர்வுக்கு பரிகாரம் என்ன என்பதே படத்தின் மூலக்கரு.

இந்தியப்படங்களில்தான் சென்டிமென்ற் அதிகம் என்பவர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். படத்தின் இரு பிரதான பெண் பாத்திரங்களும் நிமிடத்திற்கு நிமிடம் கண் கலங்க வைக்கின்றார்கள். Amber Tamblyn வளர்ந்துவரும் நல்லதொரு நடிகை; Sarah பாத்திரம் இவரிற்காகவே வடிவமைக்கப்பட்டது போலவிருக்கிறது. நல்லதொரு படம் எடுக்க வில்லன் கதாபாத்திரம் தேவையில்லை என்பது Hallmark படங்களில் தெரியும்; இந்தப்படத்திலும் அவ்வாறே. படத்தில் பிடித்த இன்னொரு அம்சம் கதைவசனம் – நறுக்கென்ற வசனங்கள். உதாரணத்திற்கு: “Bad things happen to good people all the time”.

குடும்பத்தோடு பார்ப்பத்ற்கு அருமையான படம்.

“The Russell Girl” IMDB இணைப்பு

7 பின்னூட்டங்கள் »

 1. “Bad things happen to good people all the time”.
  யதார்த்தமான உண்மை.
  விமர்சனம் அருமை.
  >ராமநாதன்

  rammalar.wordpress.com

  பின்னூட்டம் by rammalar — ஓகஸ்ட் 10, 2008 @ 10:55 பிப | மறுமொழி

 2. So the answer to the question “Why do bad things happen to good people?” is “They don’t.” All of us here in the material world are—how shall I put it?—not of the best sort.

  http://btg.krishna.com/main.php?id=197

  பின்னூட்டம் by krishna — ஓகஸ்ட் 11, 2008 @ 1:26 முப | மறுமொழி

 3. Krishna,

  Take my suggestion and commit suicide. Relief for you and good riddance for the world .

  Gosh, people just can’t appreciate the beauty of life and the observable universe but can believe any bu**shit about afterlife or the imperceivable ‘soul’. The jerks who would do nothing to alleviate the suffering of the people wanna make them enjoy their suffering. What losers.

  The philosopher Krishna, if he was alive ‘elsewhere’ would hang his head in shame to see these lunatics twisting his Gita.

  பின்னூட்டம் by Balaji — ஓகஸ்ட் 11, 2008 @ 5:03 முப | மறுமொழி

 4. கதையைப் பார்த்தால் இதை வைத்து தமிழில் ஒரு நல்ல திரைப்படம் எடுப்பார்கள் என்று நினைக்கின்றன்.

  பின்னூட்டம் by மயூரேசன் — ஓகஸ்ட் 11, 2008 @ 9:17 முப | மறுமொழி

 5. எனக்கென்றால் அப்படித் தோன்றவில்லை. பிரதானமாக ஒரு காதல் கதை அல்லது வில்லன் கதை இல்லாமல் எங்கட ஆக்கள் படம் ஏதும் எடுத்ததாகத் தெரியவில்லை. தவிர இந்தப் படத்தைப் பற்றி பலருக்குத் தெரியாது. Hallmark படங்கள் எல்லாம் தொலைக்காட்சிக்காக மட்டும் என்று எடுக்கப் படுபவை (made for TV movies). எனவே இதை TVயில், தவறினால் DVDயில் மட்டும்தான் பார்க்கலாம். இந்தப்ப்ட DVD இந்தியா அல்லது இலங்கையில் கிடைக்கும் என்பது மிகவும் சந்தேகத்திற்குரிய விடயம்.

  பின்னூட்டம் by bmmaran — ஓகஸ்ட் 11, 2008 @ 11:43 முப | மறுமொழி

 6. இணையத்தில் பதிவிறக்கலாமே!!! 😉

  பின்னூட்டம் by mayooresan — ஓகஸ்ட் 11, 2008 @ 7:55 பிப | மறுமொழி

 7. நான் இந்தப் படத்தை சில மாதங்களிற்கு முன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோது பார்த்திருந்தேன். அதற்கு பின் இதை இணையத்தில் தேடித் திரிந்து அண்மையில்தான் கொஞ்சம் குறைந்த தரமுள்ள (low quality) பதிவு ஒன்றைக் கண்டுபிடித்தேன். நல்லதொரு ஒளிநகல் இன்னமும் கிடைக்கவில்லை.

  பின்னூட்டம் by bmmaran — ஓகஸ்ட் 12, 2008 @ 2:13 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: