திரை விமர்சனம்

ஓகஸ்ட் 20, 2008

Horton Hears a Who! (2008): “எல்லாரது வாழ்வுமே முக்கியாமானதுதான்”

அண்மைக்காலத்தில் நகைச்சுவை நடிகர்கள் Jim Carreyஐயும் Steve Carellஐயும் பலர் ஒப்பிட்டுப் பார்த்ததுண்டு. இந்த காட்டூன் படம் இந்த இருவரின் பின்னணிக்குரலையும் பிரதானமான கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் தங்கள் தங்கள் பாத்திரத்தை அழகாக உயிரேற்றியிருக்கின்றார்கள்.

மிகவும் விசுவாசமான, வெள்ளையுள்ளம் கொண்ட யானை Horton (Jim Carrey). ஒரு ஒதுக்குப்புறமான ஒரு குகைக்குள் படிந்திருக்கும் ஒரு அற்பமான துகள் ஒன்றையே தமது நகரமாகக் கொண்டிப்பது who (அதுதான் அந்த இனத்தின் பெயர்) மனிதர்கள். இந்த whovilleஇற்கு ஒரு தலைவர் (mayor) (Steve Carell). தாங்கள் வசிப்பது ஒரு அற்பமான துகள் என்றோ, அதற்கு வெளியால் பெரியதொரு உலகம் இருக்கின்றதென்பதோ அறியாமல் இருக்கும் whoக்களில் உலத்தை ஒரு காற்று அடித்துக்கொண்டு வந்து Horton’இன் உலத்தில் போட்டுவிடுகின்றது. தங்கள் உலகத்தில் பெரியதொரு மாற்றம் வந்திருப்பதை whoville தலைவரைத்தவிர எவரும் உணர்வதாகவோ ஏற்பதாகவோ இல்லை. அதே சமயம் whoville தலைவரின் குரல் பெரியதொரு காதைக்கொண்டிருக்கும் Hortonஐத் தவிர எவருக்கும் கேட்பதாகவும் இல்லை. அவரவர் உலகத்தில் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளமுடியாத கதைகளை நிலைநாட்ட முயன்று தோல்வியைத்தழுவிய பின்பு whoville தலைவரிற்கு உதவநினைக்கும் Horton, whovilleஐ அதன் பழைய இடத்திற்கு கொண்டுசேர்க்க தீர்மானிக்கின்றது. அதன் முயற்சிகள், அதற்கு வரும் தடங்கல்கள், whovilleஇல் தலைவர் படும் அவஸ்தைகள் என்பவற்றை படம் விபரிக்கின்றது.

படம் பரவாயில்லை. குழந்தைகள் ரசிப்பார்கள். நகைசுவைகள் கதைவசனத்திலும்விட பட ஓட்டத்தில்தான் இருக்கின்றது. பார்க்கலாம்.

“Horton Hears a Who!” IMDB இணைப்பு

1 பின்னூட்டம் »

  1. சில காலத்துக்கு முன்னால் பார்த்தேன். அந்த யானையை நம்ப மறுத்து கங்காரு செய்யும் அட்டகாசம் சொல்லி மாளாது.

    அந்த குட்டி நகரத்து மேயரின் குட்டிப்பையன் சுட்டி. அமைதியாய் இருந்தாலும் காரண காரன். 😉

    பின்னூட்டம் by mayooresan — ஓகஸ்ட் 21, 2008 @ 5:18 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: