திரை விமர்சனம்

ஓகஸ்ட் 24, 2008

மாத்தி மாய் (என் அம்மா)

பெங்களூரு திரைப்பட சமூகம் சார்பாக திரையிடப்பட்ட மாத்தி மாய் என்னும் மராத்தி மொழி படத்தை சனிக்கிழமையன்று பார்த்தேன். மகேஷ்வேத்தா தேவி வங்காள மொழியில் எழுதிய புதினத்தை சித்ரா பாலேகர் மராத்தியில் எடுத்திருக்கிறார். இறந்த குழந்தைகளை புதைக்கும் சோகமான வேலை செய்யும் ஒரு பெண் தாயாவதும், அதனால் நிகழும் விபரீதங்களும் படத்தின் கதை.

அதுல் குல்கர்னி, நந்திதா தாஸ் விளம்பரத்துக்கென நாயகர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பாவம் இயக்குனரைச் சொல்லி குற்றமில்லை. செத்துப்போன மராத்தி திரைப்பட உலகில் படமெடுத்ததற்கே அவரை பாராட்டவேண்டும்! படம் பார்க்க வந்திருந்த கிரீஷ் கர்னாட், படத்தின் இசை குறித்து இயக்குனரிடமே குறை சொன்னது மிகவும் ரசக்குறைவாக இருந்தது.

சித்ரா பாலேகர் பேசும்போது, “நாம் பிரஞ்சு மொழி திரைப்படங்களை திரையிட்டாலும் இந்தியாவின் பிறமாநில மொழிப் படங்களை திரையிடமாட்டோம்” என்றார். ம்… ஒரே நாளில் ஐந்தாறு மொழிப்படங்கள் திரையிடப்படும் பெங்களூருக்கு இந்த விமர்சனம் பொருந்தாதுதான். ஆனால் இன்றிரவு இருநூறு ருபாய் கொடுத்து Far North என்னும் படுசுமாரான படத்தை பார்த்தபோது, என்.டி.டிவி லூமியர் நிறுவனம் இந்திய மொழித் திரைப்படங்களையும் விநியோகிக்கலாம் என்று தோன்றியது.

சாவதற்கு முன் பார்க்கவேண்டிய 50 படங்கள்‘ என்கிற சவடாலோடு (பிரதி வெள்ளி இரவு 11 மணிக்கு) யு.டிவி உலகத் திரைப்பட அலைவரிசையில் ஒரு தொடரை ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் வாரத்தில் ஹீரோ என்கிற ஹாங் காங் படத்தை திரைடயிட்டார்கள். இது நான் சாவதற்கு முன் பார்க்கவேண்டிய படமா? Crouching Tiger, Hidden Draganனை மீண்டுமெடுக்க செய்யப்பட்ட இந்த வீண் முயற்சியைப் பார்த்து எவனாவது சாகாமலிருந்தால் சரி!

முதலில் இங்கு பதியப்பட்டது.

1 பின்னூட்டம் »

  1. சாவதற்குமுன்பு பார்க்க வேண்டிய படம் என்று சொல்வதற்கு இல்லையென்றாலும், “Hero” படத்தை அப்பிடி சும்மா Crouching Tiger படத்தை நகல் எடுத்திருக்கின்றார்கள் என்று சொல்லி புறக்கணிக்கக் கூடாது. Hero படத்தின் கதையமைப்பும், ஒளிப்பதிவும் Crouching Tiger படத்தை விட வெகுவாக வித்தியாசப்பட்டிருக்கிறது. அப்பிடி ஒரு twisted கதையை பொதுவாக திரைப்படங்களில் பார்ப்பது கடினம்! அத்துடன் அந்த வர்ணஜாலம் மிக்க ஒளிப்பதிவு – ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் ஒவ்வொரு நிற themeஓடு எடுத்திருக்கின்றார்கள். சண்டையிடும் style மட்டும்தான் Crouching Tiger படத்தை ஞாபமமூட்டுகின்றன. கதையில் சொல்ல வந்த கருத்தும் Hero படத்தில் வித்தியாசமானது.

    பின்னூட்டம் by bmmaran — ஓகஸ்ட் 27, 2008 @ 2:27 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: