திரை விமர்சனம்

செப்ரெம்பர் 1, 2008

Night at the Museum

night_at_the_museum_poster

night at the museum poster

————————————
இயக்கம் : Shawn Levy
நடிப்பு : Ben Stiller, Robin Williams
மொழி : ஆங்கிலம்
வருடம் : 2006
————————————
1993 ம் ஆண்டு Milan Tranc எழுதிய குழந்தைகளுக்கான புத்தகம்தான் Night At the Museum. அதனைத் தழுவி எடுக்கப்பட்டதே இத்திரைப்படம். பெயரே கதை சொல்கிறது. ஊரே உறங்கும் இரவில் அருங்காட்சியகத்தினுள் நிகழும் அதிசயங்கள்தான் கதை.

நம்ம ஹீரோ அந்த அருங்காட்சியகத்தில் night watchman ஆக வேலைக்குச் சேருகிறார். வேலையின் முதல் நாள். இரவில் கண்விழித்துப் பழக்கப்டாத ஹீரோ உறங்கிவிடுகிறார். நள்ளிரவில் கண்விழித்துப் பார்க்கும் போது, அருங்காட்சியகத்தில் இருந்த டைனோசர் எலும்புக் கூட்டை அதன் இடத்தில் காணவில்லை. பதற்றத்துடன், அருங்காட்சியகத்தின் உள்ளே செல்கிறார். அங்குதான் காத்திருக்கிறது அதிர்ச்சி. Ben Stiller தேடிச்செல்லும் அந்த டைனோசர் எலும்புக்கூடு ஒரு water tape ல் நீர் அருந்திக் கொண்டிருக்கிறது. அதனைப் பார்த்து ஹீரோ அலற, ஹீரோவை டைனோசர் துரத்த, அப்போதுதான் ஒரு உண்மைதெரியவருகிறது. அது.. அந்த அருங்காட்சியகத்தில் இருக்கும் அனைத்தும் இரவு நேரத்தில் உயிர்பெற்று உலவுகின்றன.டைனோசர் மட்டுமல்ல. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், சிங்கம்,புலி, சிம்பன்சி குரங்கு,வரிக்குதிரை, ஆப்ரிக்க யானை, கற்கால மனிதற்கள், Cow boys, ரோமப் பேரரசர் ஆக்டேவியஸ் என ஒரு சர்ரியலிஸக் கலைவையே உயிர் பெறுகிறது. ஆனால் அனைவரும் பகலவனின் உதயத்தில் சிலையாய்உறைகின்றனர். இதற்கெல்லாம் காரணம் அங்கிருக்கும் ஒரு எகிப்திய மம்மியும் அதன் Tablets எனப்படும் ஒரு மந்திரப்பலகையும்தான்.

ஒரு சுவாரஸ்யமான கதைக்கு இந்த கதைக்களம் போதாதா..? இடையில் ஒரு வில்லன் Group. அருங்காட்சியகத்தைத் திருட எத்தனிக்கிறது. அதனை Ben Stiller அருங்காட்சியகத்தின் காட்சிப்பொருள்கள்(!) அனைவரின் உதவியோடு எப்படி முறியடிக்கிறார் என்பதை கிராபிக்ஸ் கலக்கலோடுவயிறு குலுங்கச் சொல்லும் கதைதான் Night At the Museum.

படத்தில் அத்தனை ஜனரஞ்சக விஷயங்களுக்கும் உத்தரவாதம் உண்டு. காதல், சோகம், வீரம், விபரீதம், நகைச்சுவை, ஏமாற்றம் என அத்தனையும் உண்டு. Robin Williams வழக்கம் போல் ரூஸ்வெல்ட்டாக பின்னியெடுத்திருக்கிறார்.
குடும்பத்துடன் கண்டுகளிக்க சிறந்த படம்.

3 பின்னூட்டங்கள் »

  1. பால முருகன்,

    உங்களின் முதல் பதிவுக்குப் பாராட்டுகள்! நல்ல தொடக்கம். கலக்குங்க!

    முடிந்தால் நீங்கள் விமர்சனம் செய்யும் படத்தின் விக்கியாபீடியா பக்கத்துக்கு இணைப்பு கொடுப்பது இன்னும் சிறப்பாக இருக்கும்.

    -பாலாஜி.

    பின்னூட்டம் by பாலாஜி — செப்ரெம்பர் 3, 2008 @ 7:43 முப | மறுமொழி

  2. இதன் பாகம் 2, அடுத்த வருடம் வருகின்றது. இன்னொரு அருங்காட்சியகத்தில் நடப்பதாகக் கதை, என்றாலும் பழைய நடிகர்கள் பெரும்பகுதியினர் திரும்ப தோற்றம் அளிக்கின்றார்கள் (Robin William, Owen Wilson உட்பட). என்றாலும் Carla Gugino இல்லாதது எனக்கு கொஞ்சம் வருத்தம்.

    Night at the Museum 2: Battle of the Smithsonian

    பின்னூட்டம் by bmmaran — செப்ரெம்பர் 4, 2008 @ 5:18 பிப | மறுமொழி

  3. நன்றி பாலாஜி.. 🙂 இனிமே இணைப்பு கொடுத்தடறேன்..

    பின்னூட்டம் by beemorgan — செப்ரெம்பர் 23, 2008 @ 9:57 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: