திரை விமர்சனம்

செப்ரெம்பர் 3, 2008

கற்றது தமிழ், செத்தது ரசனை!

‘ஒட்டு தாடி வெளிப்படையாய் தெரிய ஒருவர் நடித்த படத்தை மக்கள் காசு கொடுத்து பார்க்கவேண்டும்’ என்னும் ஆணவத்தை ஏற்க மனமில்லாமல் ‘கற்றது தமிழ்‘ என்ற படத்தைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். இன்று ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் பார்க்க நேர்ந்தது. இந்த படுசுமாரான படத்தை பற்றி என்னிடம் சிலாகித்தவர்களை நினைத்து சிரித்தேன்.

ஒரு திரைப்படத்தை எப்படி மதிப்பிடுவது என்பது பலருக்கும் புரிவதில்லை. கதை, கருத்து அகியவையெல்லாம் ஒரு படத்தை மதிப்பிடுவதில் எந்த பங்கும் வகிக்கக்கூடாது. (ம் … கதையே இல்லாமல் படமெடுப்பதை கண்டிப்பது வேறு விசயம்!)

கொடுத்த கதையை எவ்வாறு எடுத்திருக்கிறார்கள், ஒளி, ஒலிப்பதிவு எப்படியிருக்கிறது, திரைக்கதை தெருக்கூத்துத் தனமாக இருக்கிறதா, நடிகர்கள் தேமேயென்று வந்துபோகிறார்களா, ஒப்பனை தேவைப்பட்டால் அது எவ்வளவு அசிங்கமாகயிருக்கிறது? என்று எதையுமே கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் ஒரு படத்தை புகழ்வது எரிச்சலை ஏற்படுத்துகிறது!

மேலே நான் கொடுத்த எந்த தராதரத்திலும் ‘கற்றது தமிழ்’ நூற்றுக்கு பத்து மதிப்பெண்களைக்கூடப் பெறாது. மற்றபடி எதோ தமிழ் பற்றிய கதை என்றால் அதுவும் நகைப்புக்குரியது. ஒரு நூறு படங்களில் பார்த்துப் புளித்துப்போன தனிமனிதனின் துன்பங்களுக்காக சமூகத்தைப் பழிவாங்கும் மசாலாக் கதையில், தமிழ் என்ற மையை லேசாக (தேவையேயில்லாமல்) தடவி மக்களை முட்டாளாக்கியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

நிற்க. படமெடுப்பவர்கள் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்களே, படத்தை விமர்சிக்க நமக்கு என்ன தகுதியிருக்கிறது என்பதெல்லாம் தேவையில்லாத கவலைகள். ஆரோக்கியமான விமர்சனமே கலைஞர்களிடமிருந்து சிறந்த படைப்புகளை வரவைக்கும்!

***

பெர்க்மன் நினைவு திரைப்பட வரிசையில் இன்று ‘வின்டர் லைட்‘ என்ற படத்தை பார்த்தேன். எப்போதும் போல ஆழமான படம். கடவுள் நம்பிக்கை போலித்தனமான சுயநலவாதம் என்கிறார் பெர்க்மன். ஆமேன்!

முதலில் இங்கு பதியப்பட்டது.

2 பின்னூட்டங்கள் »

 1. //தனிமனிதனின் துன்பங்களுக்காக சமூகத்தைப் பழிவாங்கும் மசாலாக் கதையில், தமிழ் என்ற மையை லேசாக (தேவையேயில்லாமல்) தடவி மக்களை முட்டாளாக்கியிருக்கிறார்கள்.//

  அது சரிதான். ஆனால் ஒரேயடியாக இந்தப் படத்தை மறுத்தளிக்க முடியாது. முக்கியமாக முதல் பாதியில் சோகம் துரத்தும் சிறுவன் ஹாஸ்டல் வார்டனான தமிழய்யாவிடம் அடைக்கலம் ஆவது ஒரு சிறுகதையின் நேர்த்தி தெரியத்தான் செய்கிறது.

  ஆனந்தியைத் தேடி மகாராஷ்டிரா கிராமத்தை தேடிப் போவதும் அங்கே அவள் மாமா வேண்டா வெறுப்பாக வரவேற்பதும் நன்றாகவே மனம் லயிக்கும் வகையில் இருந்தது. பிற்பாதி மிகவும் செயற்கை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் மனதளவில் பாதிக்கப் படுவதும், டி-சர்ட் வசனத்தினால் தூண்டப்படுவதும் it is just sick :-((

  1.5 மணி நேரத்திற்கு எடுத்திருந்தால் ஒரு நல்ல ஃபார்மேட்டில் வந்திருக்க வேண்டிய படம்.

  பின்னூட்டம் by Sridhar Narayanan — செப்ரெம்பர் 3, 2008 @ 7:09 பிப | மறுமொழி

 2. புத்தங்கள் அதிகம் படிக்காமல் , நிதர்சன் வாழ்க்கையின் உண்மைகள் என்னவென்று அறியாமல் இப்படி திரைப்படம் மட்டும் பார்த்தால் இதுவே முடிவாக இருக்க முடியும்.

  தனி மனிதன் சமூகதத்தின் அங்கம் தானே? ஏன் 12 மணி நேரம் வேலை செய்யும் விவசாயிக்கு சம்பளம் ரூ 50 அதுவும் பெண் கூலிக்கு ரூ 40 ஆனால் கணினி முன்னால் வேலை செய்யும் ஆண் பெண் இருவரும் ரூ 500க்கு மேல் சம்பளம். இந்த ஏற்ற தாழ்வுகளைக் காட்டுவது புளிச்சு போன விஷயமா?

  வெளி நாட்டினற்கு மீண்டும் அறிவை அடகு வைக்கிறோம் என்பது புளித்து போன விஷயமா?

  கற்றது தமிழ் என்ற தலைப்பு சமூகத்தின் அவல நிலையைக் காட்ட மொழியை சீர்திருத்த அல்ல. முடிஞ்சா படத்த சரியா பாருங்க.

  பின்னூட்டம் by bmurali80 — செப்ரெம்பர் 4, 2008 @ 4:18 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: