திரை விமர்சனம்

செப்ரெம்பர் 4, 2008

No Country for Old Men (2007): ஆஸ்கார் வென்ற கண்ணாம் பூச்சி ஆட்டம்

சில ஆஸ்கார் வென்று செல்லும் படங்களை ரசிக்கவும் இயலாது, ரசிக்காமல் இருக்கவும் முடியாது. என்னைப் பொறுத்தவரையில் 2007 ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த படம்’ ஆஸ்கார் வென்ற இந்தப் படமும் அந்தவகையில் ஒன்று. கதையில் எவ்வித புதுமையும் இல்லை. என்றாலும் அந்தக் கதையை எடுத்தவிதத்தை மட்டும் வைத்தே இந்தப் படத்திற்கு ஆஸ்காரைக் கொடுக்கலாம். ஒளிப்பதிவும் அந்தமாதிரி, ஒரு இலக்கண சுத்தமான கவிதைபோல இருக்கின்றது.

2006ஆம் ஆண்டின் ‘சிறந்த படம்’ விருதைப் பெற்ற “The Departed” படம் போலவே இதுவும் ஒரு crime drama. என்றாலும் ஆங்காங்கே வரும் சில சுடுதல், துரத்தல் காட்சிகளை விடுத்து பொதுவாக மிகவும் மெதுவான கதையோட்டம். ஏனோ தெரியாது, கதை 1980களில் நடப்பதாக எடுக்கப்பட்டுள்ளது. Mexico எல்லையோரமாகவிருக்கும் வனாந்தரமான ஒரு சிறு Texas நகரம். அங்கே மான்வேட்டையாட செல்லும் Moss, சில கைவிடப்பட்ட வாகனங்கள், துப்பாக்கி சண்டையில் செத்து சிதைந்துகொண்டிருக்கும் பிரேதங்கள், இப்படியான ஒரு காட்சிக்கு வந்துசேருகின்றான். அத்துடன் 2 மில்லியன் டாலர் பணப்பெட்டியும் கூட! அதிஸ்டம் அடித்தது என்று மகிழ்வதற்கு முன்னர், அந்த பணத்தை மீட்டெடுப்பதற்காக வந்து சேருகின்றான் Chigurh (Javier Bardem) என்னும் கொலைகாரன். அந்தளவு பணத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் Chigurhஇடமிருந்து தப்பியோட முனைகின்றான் Moss. ஆனால் Chigurhவோ ஒரு ஈவுஇரக்கமற்ற, புத்திசாலித்தனமான, psycho கொலைகாரன். இவர்களிற்கு இடையிலான கண்ணாம் பூச்சி ஆட்டம் எங்கு சென்று முடிகின்றது என்பதைச் சொல்கின்றது படம்.

முன்பு ஆஸ்கார் வென்ற The Godfarther படத்தைப் போல ஒரு இழுவையான படம், என்றாலும் இடையில் நிறுத்தமுடியாதமாதிரியான ஒரு பட இயக்கம். படம் எப்பிடியோ, Javier Bardem இதில் ஆஸ்கார் வென்றது முற்றிலும் தகும்; அந்த psycho கொலைகாரன் பாத்திரத்தில் கலக்கித் தள்ளியிருக்கிறார். ஆஸ்கார் வென்ற படம் என்பதால் இதைப்பார்க்கலாம். படத்தைப் பார்த்துவிட்டு வெறுத்தால் என்னைக் குற்றம் சொல்லவேண்டாம்!

“No Country for Old Men” IMDB இணைப்பு

2 பின்னூட்டங்கள் »

  1. பெரிதாக எதிர்பார்த்து பார்த்தேன்… கொலைகாரன் பெலீஸ்காரன, பெட்டி வைத்திருப்பவன் ஒருத்தரை ஒருத்தர் துரத்துவது பரபரப்பாக இருக்கும், ஆனால் முடிவு சப்பை….

    பின்னூட்டம் by மயூரேசன் — செப்ரெம்பர் 8, 2008 @ 8:22 முப | மறுமொழி

  2. பார்க்க வேண்டும்

    சூர்யா
    http://butterflysurya.blogspot.com/

    பின்னூட்டம் by surya — நவம்பர் 17, 2008 @ 7:53 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: