திரை விமர்சனம்

திசெம்பர் 22, 2008

The Mummy: Tomb of the Dragon Emperor (2008): தேவைதானோ?

Mummyஐப் கண்டுபிடித்தார்கள்; அது உயிர்பெற்று எழுந்தது; அதைத் திருப்பியும் கொன்று முடித்தார்கள். இந்த உதவாக்கரை கதையை எப்பத்தான் மூட்டைகட்டி வைக்கப் போறார்களோ தெரியாது!! அதுக்குள் எனது பிரியமான நடிகர்கள் Jet Li, Michelle Yeoh, மற்றும் Maria Belloவை கொண்டுபோய் வீணடித்திருக்கிறார்கள். படத்தில் புதினமாக ஒன்றும் இல்லை; நேரத்தை கொல்லுவதற்குப் பார்க்கலாம்.

“The Mummy: Tomb of the Dragon Emperor” IMDB Link

Tropic Thunder (2008): சிரிப்பதற்கு ஒரு படம்

ஒரு வியட்நாம் போரை மையாமாக வைத்து ஒரு ஆக்சன் படம் எடுக்க முனைகின்றார் ஒரு இயக்குணர். நடிகர்களாக வந்து வாய்ப்பது பிரபல்யங்களாக இருந்தாலும் பலவேறுவழியில் சீரழிந்து போன ஒரு கூட்டம். இவர்களை இயக்கமுனைந்து வாழ்க்கை நொந்து போக, செலவழியும் ஒவ்வொரு நாட்களும் விழுங்குகின்ற பணத்திற்காக மறுபக்கத்தில் தயாரிப்பாளர் தொண்டையைப் பிடிக்க, ஒரு தீவிரமான முடிவுக்கு வருகின்றார் இயக்குணர் — பொய்யாக செட்டுகளை பாவிக்காமல் உண்மையான காட்டுக்குளேயேபோய் படம் எடுப்பதுதான் சரியென்று நடிகர் குழாமை காட்டுக்குளே கொண்டுபோய் இறக்கிவிடுகின்றார் இயக்குணர். இறங்கியபின்புதான் தெரியவருகின்றது, அது உண்மையாகவே ஒரு பயங்கரவாதிகளில் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஒரு காட்டுப் பிராந்தியம் என்று. இந்தச் சிக்கலுக்குள் இருந்து மீண்டுவர இவர்கள் அடிக்கும் கூத்துத்தான் படம்.

புத்திசாலித்தனமான கதைவசன்ங்கள் மாத்திரமன்றி, புத்திசாலித்தனமான கதாபாத்திரங்களும் கூட: Ironman பட நாயகர் Robert Downey Jr. கறுப்பனாக வேடமேற்கும் வெள்ளை நடிகராக வருகின்றார். அதற்காக அவர் கறுபனாக பாவனை செய்யமுனைவது படத்தின் நகைச்சுவையின் உச்சக்கட்டம். Jack Black, Ben Stiller என்று ஒரு பெரிய நகைச்சுவைக் கூட்டமே உள்ளது. படத்தில கணிசமான ஒரு பாகத்தில் வரும் Tom Cruiseஐ யாரும் அடையாளம் கண்டால் சொல்லவும்!!

நகைச்சுவை ரசிகர்கள் கட்டாயாம் பார்க்கவேண்டும். மற்றவர்களும் நம்பிப்பார்க்கலாம். சாதாரண நகைச்சுவை படங்களில் இருந்து சற்றே மாறுபட்டு எடுத்திருக்கின்றார்கள்.

Tropic Thunder IMDB இணைப்பு

Eagle Eye (2008): அனைத்தும் அறிபவள்…

ஒரு விறுவிறுப்பான sci-fi (விஞ்ஞான கற்பனை) திரைப்படம். எதிர்காலத்தில் மிகவும் தொலவிற்குச் சென்று விடாமால் 2009 ஆண்டு நடப்பதாகப் படத்தை எடுத்திருக்கின்றார்கள் (சும்மா ஒரு ‘இது’க்குத்தான்!)

முன்பின் சம்பந்தமில்லாத கதாநாயகனுக்கும் நாயகிக்கும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றது. என்னவென்று கேட்டால், கேள்வி ஏதும் கேட்காமல் அதைச்செய் இதைச்செய் என்று ஒரு பெண்குரல் ஆணையிடுகின்றது. ஆணையிடுவது மட்டுமல்லாது இவர்கள் எந்த மூலையில் சென்று ஒழிந்தாலும் அதை அறிந்துவிடுகிறாள் அந்த தொலைபேசிப் பெண். (யாருக்கும் Matrix படம் ஞாபகம் வருகின்றதோ?) இவர்களது உயிர் அந்த தொலைபேசிப் பெண்ணின் ஆணைகளை நிறைவேற்றுவதில் தங்கியிருக்க, அவற்றை நிறைவேற்றுகின்ற அதே நேரம், அநத வலையிலிருந்து தப்பவும் முயற்சிக்க வேண்டிய தேவை. இந்தளவுக்கும் கதை நன்றாக இருந்தாலும், படத்தில் கடைசி அரைப்பகுதியில் iRobot படத்தை ஞாபகப் படுத்தி அலுப்படித்து விடுகின்றார்கள்.

ஆகா ஓகோ என்கின்றமாதிரியான படமில்லை. என்றாலும் வழைமையான விறுவிறுப்புகளோடு இருக்கின்றது. நடிப்பென்று சொல்லிக்கொள்ள படத்தில் எதுவுமில்லை என்றாலும், Shia LaBeouf தனது ரசிகர்களை திருப்த்திப் படுத்தியுள்ளார். சும்மா பார்க்கலாம்.

Eage Eye IMDB இணைப்பு

Quantum of Solace (2008): விறுவிறுப்பு தொடர்கிறது

Casino Royal கதை முடிந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட 5 நிமிடம் கழித்து இந்தப் படத்தின் கதை தொடர்கிறது. எடுத்தவுடன் காரில் துரத்தலென்று ஆரம்பிக்கின்றார்கள். Vesperஐ இழந்து கொலைவெறியில் இருக்கும் James Bondஐ தத்ரூபமாக வெளிக்கொண்டுவந்து இருக்கின்றார் Daniel Craig. தனது புலனாய்வின் பாதையில் வரும் எதையும், எவரையும் கரிசனை எதுவுமின்றி தூக்கிப் போட்டுக்கொன்று செல்கிறார். Casino Royalஇன் கதையிலிருந்து இது தொடர்வதாக இருந்தாலும், Vesper சம்பந்தப்பட்ட பாகத்தைத் தவிர பெரிதாக ஒரு தொடர்ச்சியும் இல்லை. உலகின் பல்வேறு உளவு நிறுவனங்களும் ஒரு நிறுவனத்தினால் ஊடுருவப் பட்டிருக்கின்றது என்பதை Casino Royalன் கடைசியில் அறியவரும் James Bond, அந்த நிறுவனத்தின் வேர் எங்குவரை செல்கின்றது என்பதை அறிய முயல்வதுதான் கதை.

படத்தில் விறுவிறுப்புக்கு குறைவில்லை — கார் துரத்தல்கள், விமான திரத்தல்கள், நேருக்கு நேர் அடிபாடுகள் என்று எல்லாம் உண்டு (அந்த $100,000 Aston Martin காரை சின்னாபின்னமாக துவைத்து எடுப்பதைப் பார்க்க இரத்தக் கண்ணீர் வருகின்றது!) சாகசக் காட்சிகளை Bourne படவரிசைகளிற்கு பொறுப்பான சாகச இயக்குணர் பொறுப்பெடுத்திருக்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது! விறுவிறுப்புத் தவிர நவீன தொழில் நுட்பம், கவர்ச்சிகரமான பெண்கள், Bondஇன் எள்ளிநகையாடும் கதைகள் என்று James Bond படத்திற்கான சகல் முத்திரைகளும் உண்டு. என்றாலும் கதாபாதிரங்களை எண்ணுகையில் இது Casino Royal அளவிற்கு சிறப்பாக இல்லை. Daniel Craig சிறப்பாகச் செய்திருக்கின்றார். என்றாலும் முதன்மை பெண் பாத்திரம் (by Olga Kurylenko) முன்னைய படத்தைப்போல கனமாதாக இல்லை. வில்லன் பாத்திரமும் கூடத்தான். எனவே முழுப்படத்தின் கனமும் James Bondஇனதும் Mஇனதும் பாத்திரங்களில் கையில் சேர்ந்துவிட அது ஒரு சீராகத் தெரியவில்லை.

James Bond ரசிகர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். என்றாலும் Batman Beginsற்கு ஒரு Dark Knight போல, Casino Royalற்கு ஒரு Quantum of Solace என்று நிச்சயமாக கூறமுடையாது.

Quantum of Solace IMDB இணைப்பு

திசெம்பர் 21, 2008

கேரள சர்வதேச திரைப்பட விழா

Filed under: திரைப்பட விழா — பாலாஜி @ 4:22 பிப
Tags:

டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்கிய கேரள சர்வதேச திரைப்பட விழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. நான்கு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொன்டு 10 படங்களைப் பார்த்தேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நான்கு படங்களின் விமர்சனங்கள் இங்கே! திருவனந்தபுரம் புகைப்படங்கள் இங்கே.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவும் தற்போது நடந்து வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை நிறைவுறும். கலந்து கொண்டவர்கள் விவரங்கள் தெரிவிக்கவும்!

திசெம்பர் 15, 2008

Death Race (2008)

Filed under: ஆங்கிலத் திரைப்படம் — Jay Mayu @ 6:11 பிப

அமெரிக்காவின் பொருளாதாரம் 2012ல் சுக்குநூறாக உடைந்துவிடுகின்றது. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை என அமெரிக்கர்கள் சீரழிகின்றார்கள். சிறைச்சாலைகளில் இடம் இல்லாமல் போய் சிறைச்சாலை நிர்வாகம் சீர்குலைகின்றது.

இவ்வாறெல்லாம் நடக்கும் என்று நினைத்துக்கொண்டு இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். சாதாரணமாக WWE நாங்கள் எல்லாரும் பார்த்திருக்கின்றோம். அது போல மிகவும் வன்முறை நிறைந்த கார் ஒட்டப் போட்டியில் நம்ம நாயகர் எப்படி பகடைக்காயாக்கப்படுகின்றார் என்பதுதான் கதை. இதிலிருந்து மீண்டாரா இல்லையா இதற்கு காரணமாணவர்களைப் பழி தீர்த்தாரா இல்லையா என்பது மிகுதிக்கதை.

வித்தியாசமான மீளமைக்கப்பட்ட கார்கள், அதில் பயமுறுத்தும் ரொக்கட் லோஞ்சர்கள், பிப்டி கலிபர்கள் என பயமுறுத்தும் கார் ஓட்டப்பந்தையங்கள் உங்களை மூக்கின் மேல் விரல் வைக்கத் தூண்டும். ஆக்சன் அதிரடி விரும்பியவர்களுக்கான திரைப்படம். உலகத்திரைப்படம் எல்லாம் பார்த்து கெட்டுப்போயிருக்கிறவர்கள் தயவு செய்து இந்த திரைப்படத்தைப் பார்க்காதீர்கள். 😉

திசெம்பர் 4, 2008

Oye Lucky! Lucky Oye!

Filed under: இந்தித் திரைப்படம்,English — kotharipankaj @ 3:23 பிப
Tags:

Abhay Deol, Paresh Rawal, Neetu Chandra, Archana Puran Singh, Manu Rishi, Richa Chadda, Anurag Arora, Manjot Singh, Rajinder Sethi

First of all hats off to hindi cinema for coming up with variations in movies. Recent times these small budget movies have fascinated me more than the big banners.

read more…

குவாண்டம் ஆஃப் சொலெஸ் – Not a typical Gadget-Bond movie

I have seen Bond movies where he has which are ‘out of the world’ gadgets. So my expectations going into this movie were to see how they for-see the technology and implement the gadgets. But i ended up watching an action-thriller movie. read more…

மதுரை விவரணத் திரைப்பட விழா

Filed under: திரைப்பட விழா — பாலாஜி @ 1:48 முப
Tags:

10 ஆவது உலக விவரண மற்றும் குறும்படத் திரைப்பட விழா மதுரையில் நேற்று (டிசம்பர் 3) தொடங்கி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விவரங்கள் இங்கே.

Create a free website or blog at WordPress.com.