திரை விமர்சனம்

திசெம்பர் 15, 2008

Death Race (2008)

Filed under: ஆங்கிலத் திரைப்படம் — Jay Mayu @ 6:11 பிப

அமெரிக்காவின் பொருளாதாரம் 2012ல் சுக்குநூறாக உடைந்துவிடுகின்றது. வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை என அமெரிக்கர்கள் சீரழிகின்றார்கள். சிறைச்சாலைகளில் இடம் இல்லாமல் போய் சிறைச்சாலை நிர்வாகம் சீர்குலைகின்றது.

இவ்வாறெல்லாம் நடக்கும் என்று நினைத்துக்கொண்டு இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். சாதாரணமாக WWE நாங்கள் எல்லாரும் பார்த்திருக்கின்றோம். அது போல மிகவும் வன்முறை நிறைந்த கார் ஒட்டப் போட்டியில் நம்ம நாயகர் எப்படி பகடைக்காயாக்கப்படுகின்றார் என்பதுதான் கதை. இதிலிருந்து மீண்டாரா இல்லையா இதற்கு காரணமாணவர்களைப் பழி தீர்த்தாரா இல்லையா என்பது மிகுதிக்கதை.

வித்தியாசமான மீளமைக்கப்பட்ட கார்கள், அதில் பயமுறுத்தும் ரொக்கட் லோஞ்சர்கள், பிப்டி கலிபர்கள் என பயமுறுத்தும் கார் ஓட்டப்பந்தையங்கள் உங்களை மூக்கின் மேல் விரல் வைக்கத் தூண்டும். ஆக்சன் அதிரடி விரும்பியவர்களுக்கான திரைப்படம். உலகத்திரைப்படம் எல்லாம் பார்த்து கெட்டுப்போயிருக்கிறவர்கள் தயவு செய்து இந்த திரைப்படத்தைப் பார்க்காதீர்கள். 😉

5 பின்னூட்டங்கள் »

  1. //உலகத்திரைப்படம் எல்லாம் பார்த்து கெட்டுப்போயிருக்கிறவர்கள் தயவு செய்து இந்த திரைப்படத்தைப் பார்க்காதீர்கள்//
    பக்கா மசாலான்னு சொல்லுங்க

    பின்னூட்டம் by iLa — திசெம்பர் 15, 2008 @ 6:40 பிப | மறுமொழி

  2. நல்லா எழுதியிருக்கீங்க மயூரேசன்.. 🙂

    பின்னூட்டம் by Bee'morgan — திசெம்பர் 17, 2008 @ 8:11 முப | மறுமொழி

  3. நானும் பார்த்தேன் இப்படியான அக்சன் படங்களில் விருப்பம் இல்லை என்றாலும் அந்தப்பெண்ணும் அதிரடியாகத்தான் இருந்தார்…;)

    பின்னூட்டம் by king... — திசெம்பர் 21, 2008 @ 2:28 பிப | மறுமொழி

  4. நம்மூரு விட்டலாச்சாரியா படம் பாக்குறது போல ஒரு ப்லீங்.

    ஆனாலும் எனக்கு ரொம்போ புட்ச்சது வில்லிதான்!

    பின்னூட்டம் by மதிபாலா — திசெம்பர் 25, 2008 @ 4:14 முப | மறுமொழி

  5. நாலு மறுமொழீஅள் தானே…400க்கும் மேல காட்டுது…

    பின்னூட்டம் by செந்தழல் ரவி — திசெம்பர் 26, 2008 @ 8:00 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: