திரை விமர்சனம்

திசெம்பர் 22, 2008

Eagle Eye (2008): அனைத்தும் அறிபவள்…

ஒரு விறுவிறுப்பான sci-fi (விஞ்ஞான கற்பனை) திரைப்படம். எதிர்காலத்தில் மிகவும் தொலவிற்குச் சென்று விடாமால் 2009 ஆண்டு நடப்பதாகப் படத்தை எடுத்திருக்கின்றார்கள் (சும்மா ஒரு ‘இது’க்குத்தான்!)

முன்பின் சம்பந்தமில்லாத கதாநாயகனுக்கும் நாயகிக்கும் தொலைபேசி அழைப்புகள் வருகின்றது. என்னவென்று கேட்டால், கேள்வி ஏதும் கேட்காமல் அதைச்செய் இதைச்செய் என்று ஒரு பெண்குரல் ஆணையிடுகின்றது. ஆணையிடுவது மட்டுமல்லாது இவர்கள் எந்த மூலையில் சென்று ஒழிந்தாலும் அதை அறிந்துவிடுகிறாள் அந்த தொலைபேசிப் பெண். (யாருக்கும் Matrix படம் ஞாபகம் வருகின்றதோ?) இவர்களது உயிர் அந்த தொலைபேசிப் பெண்ணின் ஆணைகளை நிறைவேற்றுவதில் தங்கியிருக்க, அவற்றை நிறைவேற்றுகின்ற அதே நேரம், அநத வலையிலிருந்து தப்பவும் முயற்சிக்க வேண்டிய தேவை. இந்தளவுக்கும் கதை நன்றாக இருந்தாலும், படத்தில் கடைசி அரைப்பகுதியில் iRobot படத்தை ஞாபகப் படுத்தி அலுப்படித்து விடுகின்றார்கள்.

ஆகா ஓகோ என்கின்றமாதிரியான படமில்லை. என்றாலும் வழைமையான விறுவிறுப்புகளோடு இருக்கின்றது. நடிப்பென்று சொல்லிக்கொள்ள படத்தில் எதுவுமில்லை என்றாலும், Shia LaBeouf தனது ரசிகர்களை திருப்த்திப் படுத்தியுள்ளார். சும்மா பார்க்கலாம்.

Eage Eye IMDB இணைப்பு

2 பின்னூட்டங்கள் »

  1. Shia LaBeouf நடிப்பு வர வர நன்றாக அமைகின்றது. ஆனாலும் அந்தப் பெண் இவருக்கு ஜோடியாக ஏற்க முடியாது. இவர் இன்னமும் அலைபாயுதே மாதவன் மாதிரித்தான் இருக்கார்!

    பின்னூட்டம் by mayooresan — திசெம்பர் 25, 2008 @ 3:06 பிப | மறுமொழி

  2. படத்தில் அவருக்கு சோடி என்று நாயகியைக் கூற முடியாது. அந்தக் கடைசிக் காட்சியில் கூட அந்த விடயத்தில் நழுவி விட்டார்கள். உண்மையில் கூட Michelle Monahan, Shiaவிலும் பார்க்க எவ்வளவோ வயது கூடியவர். எங்களுக்குத்தான் கதாநாயகனும் நாயகியும் சோடியாகத்தான் இருக்கவேண்டும் என்று ஒரு எண்ணம்; ஆங்கிலப் படங்கள் அதில் அவ்வளவுதூரம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

    பின்னூட்டம் by bmmaran — திசெம்பர் 26, 2008 @ 5:10 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: