திரை விமர்சனம்

ஜனவரி 21, 2009

குட்டி விமர்சனம்

Filed under: தமிழ்த் திரைப்படம் — Nilofer Anbarasu @ 7:37 பிப
Tags:

மகேஷ் சரண்யா மற்றும் பலர்: கிளைமாக்ஸ்ஐ மட்டுமே நம்பி படம் எடுத்திருக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் அவ்வளவு சுவாரஸ்யமில்லாமல் போனாலும் மட்டமாக இல்லை. படத்தில்   சந்தியாவினுடைய முடிவு யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பம்.  தன் வீட்டில் உள்ள ஒவ்வொருவரிடமும் தன் காதலை பற்றி சக்தி  சொல்வது ரொம்ப அழகு.   ரொம்ப போர் அடிக்கும் போது இந்த படத்தை பார்க்கலாம்.

வில்லு: Bond பட ஸ்டைலில் எடுத்திருப்பதாக பிரபுதேவா ஒரு பேட்டியில் சொல்லியிருந்த்தார். James Bondஐ யாரும் இந்த அளவுக்கு   கேவலப்படுத்த முடியாது  என்பது படத்தை பார்த்த பிறகுதான் தெரிந்தது. ஏகப்பட்ட காட்சிகள் சற்று புதுமையாக தெரிந்தாலும், அவை அனைத்தும் தெலுங்கு படங்களில் இருந்து காப்பியடித்தது என குல்டி நண்பர்கள் சொன்னார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது,  நயன்தாரா நடித்திருந்தால் குருவி கூட ஓடியிருக்குமோ என்று தோன்றியது.

படிக்காதவன்: டப்பா பிலிம்.  படம் ஆரம்பித்தவுடனே கொட்டாவி வருகிறது.  கிச்சு கிச்சு மூட்டினால்தான் நகைச்சுவை காட்சிகளில் சிரிப்பு வருகிறது. படம் முடிந்தவுடன் பெரு மூச்சு வருகிறது. அடிக்கடி தமனா வருவதால் சற்றே  ஆறுதல் வருகிறது.

—-
Nilofer Anbarasu
http://kick-off.blogspot.com

2 பின்னூட்டங்கள் »

  1. >> படத்தில் ******* எதிர்பார்க்காத ஒரு திருப்பம்.

    இப்படி போட்டு உடைச்சுட்டீங்களே. மற்றபடி விமர்சனங்கள் சிறப்பு.

    பின்னூட்டம் by பாலாஜி — ஜனவரி 23, 2009 @ 2:22 முப | மறுமொழி

  2. @ பாலாஜி…
    //இப்படி போட்டு உடைச்சுட்டீங்களே.//
    நீங்க சொன்ன பிறகுதான் கவனிச்சேன். அதை சொல்லாமல் சொல்லுவதுதான் சரி, ஆகவே அந்த வரியை மாற்றியிருக்கிறேன். மறுமொழிக்கு நன்றி.

    பின்னூட்டம் by Nilofer Anbarasu — ஜனவரி 30, 2009 @ 8:35 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: